
சென்னை, ஏப்.14- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) திராவிடர் கழகத்தின் சார்பில் காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசாணையாக வெளியிடப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் உறுதிமொழியான:
“ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,
ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,
ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப் புணர்வை ஊட்டிய, நம் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும்,
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன்’ என கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சொல்ல அதை கழகத் தோழர்கள் சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மத்தூர் அண்ணா.சரவணன், கழக சொற்பொழிவாளர் ஆரூர் நர்மதா, புகழேந்தி, தமிழ் கா.அமுதரசன்.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், கணேசன், ஓட்டேரி பாசுகர், கலைமணி, மகஷ், சேத்பட்டு நாகராஜன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், ராஜேந்திரன், பர்தீன், மணிவண்ணன், கோபாலகிருஷ்ணன், கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி, சிவராமன், கார்த்திக், உத்ரா.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், கரு.அண்ணாமலை, சா.தாமோதரன், ச.மாரியப்பன், பெரியார் யுவராஜ், அ.அன்பரசன், அரங்க. சுரேந்தர், விருகை செல்வம், மா.மூவேந்தன், மு.இரா.மாணிக்கம், சைதை தென்றல், நுங்கம்பாக்கம் சஞ்சய் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக