புதன், 30 ஏப்ரல், 2025

தமிழ் வார விழா'


தமிழ்நாடு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) ஒரு வாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று 'திராவிட மாடல்' அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் அறிவித்தார். உலகத் தமிழராய்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 'தமிழ் வார விழா' அறிவிப்புக்குப் பல்வேறு வகையில் முயற்சி எடுத்த தமிழர் தலைவருக்கு, விழாக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், உலகத் தமிழாராய்ச்சி மன்றப் பொதுச்செயலாளர் பொறியாளர் த.ஞானசேகரன், மும்பை சு.குமணராசன், துரைகண்ணன் (அமெரிக்கா), பேராசிரியர் மறைமலை இலக்குவனார், 'கலைமாமணி' பொன்னடியார், முத்துமணி நன்னன், மு.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் (சென்னை, 29.4.2025).

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு

திராவிடர் கழகம்

உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கலையரங்கத்தில் ஏப்ரல் 29, 2025 அன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா, இலெமுரியா அறக்கட்டளை, மும்பை, கருநாடக மாநில தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை, புதுச்சேரி, வலைத்தமிழ், அமெரிக்கா. கவிஞர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து “உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைமலை இலக்குவனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரைவில் வெளியிட உள்ள அந்த புத்தகப் பிரதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் பொறியளர் த.ஞானசேகரன், சு.குமணராசன் (மும்பை), துரைக்கண்ணன் (அமெரிக்கா), கலைமாமணி பொன்னடியார், முத்துமணிக்கண்ணன், மு.முத்துராமன், முனைவர் மைக்கேல் பாரடே உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக