வெள்ளி, 25 ஏப்ரல், 2025

தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

விடுதலை நாளேடு

 சென்னை, ஏப். 25  தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் 20.04.2025 அன்று மாலை 6 மணியளவில்  கழகப் பரப்புரைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தோழர் க.செல்வம் தலைமையிலும், மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட  கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர்கள் டி. ஆர்.சேதுராமன், மு. சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை மற்றும் இளைஞர் அணி தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

தொடக்கத்தில் புள்ளம்பாடி சி.பொற்செழியன்  கழகப் பாடல்களை பாடினார். கி. சங்குநாதன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக அறிவு வழி காணொலி சா.தாமோதரன் நன்றியுரை கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர் நா.அதியமான்(தி.மு.க.) மற்றும் க.இளவழகன்(ம.தி.மு.க) பங்கேற்றனர்.

ஆளுநரின் இடக்குதான்!

‘சுழலும் சொற்போர்’ நிகழ்வை முறைப்படி முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து முதலாவதாக ‘நிதி மறுப்பு!’ என்கின்ற தலைப்பில், கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, இரண்டாவதாக ‘ஹிந்தி திணிப்பு!’ என்கின்ற தலைப்பில் தலை மைக் கழகச் சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், மூன்றாவதாக ‘உரிமை பறிப்பு!’ என்கின்ற தலைப்பில்  கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன், நான்காவதாக  கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தரவுகளுடனும் எழுச்சிகரமாகவும் எடுத்து வைத்தனர்.

இடையிடையே தலையிட்டு சொல்லப்பட வேண்டிய கருத்துகளை வெளிக் கொணர்ந்தும், பார்வையாளர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் செய்தும், அதே சமயம் நால்வருடைய கருத்துகளையும் உள்வாங்கிய, நடுவராக வீற்றிருந்த அதிரடி க.அன்பழகன்  சிறப்பானதொரு கருத்து மழை பொழிந்து நிதி மறுப்பு, ஹிந்தித் திணிப்பு, உரிமை பறிப்பு, ஆளுநர் இடக்கு என்ற நான்கு தலைப்புகளில் பேசியதையும் தொகுத்து வழங்கி, எல்லாம் தடைகளாக இருந்தாலும், ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது ‘‘ஆளுநரின் இடக்கு” தான் என்று தீர்ப்பு வழங்கினார்.

ஆளுநர் ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்!

இறுதியில் அவர், “தமிழ்நாடு ஆளுநர் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. ஆகவே அவர் பதவியில் இருப்பதே தவறு. ஆகவே,  அவருக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். நீட்டிப்பு செய்யாமல் தொடரும் காலத்திலிருந்து அவருக்குக் கொடுத்த ஊதியத்தை திரும்பப் பெறவேண்டும்” என்று தன்னுடைய கருத்தையும் ஒரு தீர்மானம் போல சொல்லி, அதற்கும் பார்வையாளர்களிடம் பலத்த கைதட்டல் பெற்றார். மேடையில் பங்கேற்றோருக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் துண்டு அணி விக்கப்பட்டது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கமும், எழுச்சியும் ‘இதே போல் மற்ற சென்னை மண்டல பகுதிகளிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று தோழர்கள் பேசியவாறே கலைந்து சென்றனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

செயலவைத் தலைவர் ஆ. வீரமர்த்தினி,, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டு, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் க.தமிழ்ச்செல்வன், உடு மலை வடிவேலு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், நெய்வேலி ஞானசேகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் சு.அன்புச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை, கலையரசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் இயக்குநர் பசும்பொன், வடசென்னை கு.தங்கமணி, ஓட்டேரி பாஸ்கர், அயன்புரம் துரை ராசு, வழக்குரைஞர் மு.வேலவன், பகுத்தறிவு ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஆவடி முருகேசன்,  செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் த.பர்தீன், அரும்பாக்கம் பகுதி மு. டில்லிபாபு, ,த. இராஜா, ஏ.மோகன், சி.முருகன்,
ஏ சுந்தர், சி.ரவி, த.சொ. சுப்பிரமணியன், அ.சி. சின்னப்பத்தமிழர், ஆவடி மாவட்டத் தோழர்கள் சிவகுமார், சி.ஜெயந்தி, க.ச.பெரியார் மாணக்கன், சு.வெங்கடேசன், தி.மணிமாறன், சுந்தர் ராஜன், ச.சுரேஷ், சைதை தென்றல், தஞ்சை ஏ.வி.என். குணசேகரன்,
அய்.சரவணன், சே.கோபாலகிருஷ்ணன், பா.இராஜேந்திரன், ந.இராமச்சந்திரன், சு.சிவகுமார், க.சுந்தரராஜன்,
வே.பன்னீர்செல்வம், க.செல்லப்பன்,
க. வஜ்ர வேலு, ஆ.வெ. நடராசன், சேத்பட் அ. நாகராசன்,  சா.இராஜேந்திரன், கருமலை கோ. மணிகண்டன், வெ. சித்தார்த்தன், அ.கருப்பையா, ஆ. துரைராவணன், இரா.முருகேசன், ஆனந்த மனோகர்,
சா. ஆனந்தகுமார், வெற்றிச்செல்வன்,
செ. இராகிலாதேவி, இராகவி, ஜி. சுரேஷ், எஸ். மகேஸ்வரன், குமரன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கு. இளமாறன், பி. விக்ரம், ஒ.சுந்தரம்(தி.மு.க),, தி. முரளி, எழும்பூர் சி. செல்வராஜி,, இரா. கயல்விழி, ஆல்பர்ட், எஸ்.ஜெயராமன், ஆனந்தன், சு. நாகராஜன், எ. பிச்சைசாமி, ச.ரவி,
சு. வெற்றிச்செல்வன்

உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அனைவரது உரைகளையும் கேட்டு பயன்பெற்றனர்.

அரும்பாக்கத்தில் நடைபெற்ற ‘சுழலும் சொற்போர்’ நிகழ்வின் மகிழ்வாக அரும்பாக்கம் பகுதி கழக சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ 2000/-  வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக