புதன், 10 ஏப்ரல், 2024

ஈக்காட்டுத்தாங்கல் நடைபெற்ற பரப்பரைக் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் எதிர்க்கட்சிகளின் அண்டப்புளுகுக்கு பதிலடி!


எதிர்க்கட்சிகளின் அண்டப்புளுகுக்கு பதிலடி!

விடுதலை நாளேடு
Published April 10, 2024

இன்றைக்கு இந்தியாவிலேயே பா.ஜ.க. தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று கையேந்தி நிற்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அவர்களோடு யார் சேர்ந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார் ’பாட்டாளி மக்கள் கட்சி’ யின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள். அவரை சில நாட்களுக்கு முன், ‘பா.ஜ.க.வுக்கு நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு, “பூஜ்யம் மதிப் பெண்” என்று பதில் சொன்னார். அப்படிப்பட்டவர் களுடன் இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார். ‘பிரதமரை எப்படி மதிக்கிறோமோ அப்படித்தான் மாநில முதலமைச்சர்களையும் மதிக்க வேண்டும்’ என்று மோடி சொன்னார். இன்றைக்கு இரண்டு மாநில முதலமைச்சர்கள் சிறையில். இவர் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அரியலூரில் ஹிந்தியில் பேசத்தொடங்கினார். மக்கள் சாரை சாரையாக கலைந்து சென்றுகொண்டிருந்தனர். காலியான இருக்கைகள் முன்பு சிறிது நேரம் பேசிவிட்டு அவரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

மோடி மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கருத்தும் இல்லை. அவர் சொல்லுவதும், செயல்படு வதும் வேறாக இருக்கிறது என்பதுதான் அவரை நாங்கள் எதிர்ப்பதற்குக்கான அடிப்படைக் காரணம். இன்றைக்கு 417 வேட்பாளர்களை பா.ஜ.க. இந்தியா முழுவதும் அறிவித்திருக்கிறது. அதில் 116 வேட் பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள். சொந்தக் கட்சியில் அவர்களால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து பணம், பதவி ஆசை காட்டி சேர்த்திருக்கிறார்கள். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது என்ன சொன் னார்? ’நீட்’, ‘ஜி.எஸ்.டி.’ ஆகியவற்றை எதிர்ப்பேன் என்றார். இன்றைக்கு அவர் பிரதமராக இருக்கும் போது ‘நீட்’ டை ஒழித்து விட்டாரா? ‘ஜி.எஸ்.டி’யை ஒழித்து விட்டாரா?

‘நீட்’ டைக் கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் என்று ஒரு அண்டப்புளுகை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘நீட்’ காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தபோது வந்தது உண்மைதான். அந்த ’நீட்’ கொண்டுவரப்பட்டபோது, முதல் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக்கூடாது. பின்னாலே உச்சநீதிமன்றத்திற்கு அந்த வழக்கு சென்றது. 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ‘நீட்’ செல்லாது என்று சொல்லிவிட்டது. மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தவே என்பவர் ’நீட்’ தேவை என்று சொன்னார்.

இரண்டு நீதிபதிகள் சொன்ன ஒருமித்த தீர்ப்பு காரணமாக ’நீட்’ ரத்தாகிவிட்டது. ஆக காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே ‘நீட்’ இல்லை யென்று உச்சநீதிமன்றம் கறாராக சொல்லிவிட்டது. அப்படியென்றால் உச்சநீதிமன்றம் சொன்ன பின் னாலும் இன்றைக்கு ’நீட்’ இருக்கிறதே, எப்படி? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அதற்கு தலைமை ஏற்றது – ஏற்கெனவே ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பு எழுதிய நீதிபதி தவே. அந்த நீதிபதி தவே தான் ‘நீட்’ செல்லும் என்று சொன்னார். காங்கிரஸ் ஆட்சியின் போது நீட் செல்லாது என்று தீர்ப்பு வந்துவிட்டது. மோடி பிரதமராக வந்தபின் தான், ’நீட்’ செல்லும் என்ற நிலையை உருவாக்கினார் என்பதை உணர வேண்டும். ஆகவே, இப்படிப்பட்டவர்களைத் தோற்கடிக்க, தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண் டியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

(சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் – 9.4.2024)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக