மேனாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி. குடும்பத்தினர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா..வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் கழகத் தோழர்கள் உடன் சென்றனர். (சென்னை, 10.4.2024)
---------++++++++--+---++++------++++++-----
நேற்று(09.04.2024) நண்பகல் மறைவுற்ற மேனாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் உடலுக்கு இன்று(10.04.2024) காலை 8.15 மணி அளவில் (தியாகராயர் நகர், திருமலை சாலை) மலர் மாலை வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், தஞ்சை ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார், பிராட்லா, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி துணைச் செயலாளர் சா.தாமோதரன், சூளைமேடு எம்டிசி இராஜேந்திரன், எம்ஜிஆர் நகர் கரு அண்ணாமலை, திடல் கலைமணி மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக