சென்னை, ஏப். 14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2024) காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், த.மரகதமணி, அமராவதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், சைதை தென்றல், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், காப் பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன், ச.இராசேந்திரன், தொழிலாளரணி பெ.செல்வராஜ், சி.செல்லப்பன், கொடுங்கையூர் கோ.தங்க மணி, தங்க.தனலட்சுமி, க.கலைமணி, அரூர் பேராசிரியர் வடிவேலன், கவின், பா.பார்த்திபன், அண்ணா மாதவன், செல்வகுமார், கொடுங்கையூர் செந்தமிழ் சேகுவேரா மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று அண்ணல் அம்பேத்கர் வாழ்க என ஒலி முழக்க மிட்டு மரியாதை செலுத்தினர்.
ஞாயிறு, 14 ஏப்ரல், 2024
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக