கழகத்தின் களப் பணிகள்
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:
அமைந்தகரை
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் 4.1.2024 அன்று மாலை 6:30 மணிக்கு, அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டம் முதல் சாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல் வன் தொடங்கி வைத்தும், இளைஞரணித் தலைவர் நா.பார்த்தி பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் ச.அரவிந்தகுமார், மகளிரணி செயலாளர் த.மரகதமணி, தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன், மகளிர் பாசறை செயலாளர் மு.பவானி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சாம்குமார், க.நித்யகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். அண்ணா நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ச.பரமசிவம், மாநில கழக இணைஞரணித் துணைச் செயலாளர் சோ.சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி மாநிலச் செயலாளர் பெ.செஞ்சுடர், வி.சி.க.வின் மாணவரணித் தோழர் தமிழினியன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சம்பூர்னானந்த் என்ற பார்ப்பனரின் சிலையைத் திறந்து வைத்த அன்றைய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெஜீவன்ராம் அதன் பின்பு ஜாதி வெறியர்களால் அவமதிக்கப்பட்டதையும், வருகின்ற 2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து மட்டுமே இராமன் கோவில் என்பதை வைத்து பா.ஜ.க. நடத்தி வருகின்ற நாடகத்தையும், “ஸநாதன தர்மத்துக்கு மாறாக பிரதமர் மோடி இராமன் சிலையைத் தொட்டு ‘பிரதிஷ்டை’ செய்வதை நான் அயோத்திக்கு வந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா?” என்று பூரி சங்கராச்சாரியார் பிரதமர் நரேந்திர மோடியை பிறவி ஆணவத்தின்படி இழிவுபடுத்தி உள்ளதையும், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு என மகளிருக்கு முன்னுரிமை தந்து ‘திராவிட மாடல் அரசு’ செய்து வருகின்ற சாதனைகள் பலவற்றைப் பற்றி யும், தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் திரா விடர் கழகத்தை வழிநடத்தி தமிழர்களின் மேம்பாட்டிற் காக செய்து வருகின்ற பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினார்.
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். அண்ணா நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ச.பரமசிவம், வட்ட தி.மு.க. செய லாளர் பி.சந்திரசேகர், துணை செயலாளர் வி.பழனி வேல்ராஜன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மா.மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் ஏ.மோகன், பா.கர்ணா, வழக்குரைஞர் ச.உதய பிரகாஷ், ச.பார்த்தீசுவரன், வெள்ள நிவாரண தொண்ட றப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்த டேனியல் மற்றும் தோழர்களுக்கு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வழக்குரைஞர் திவாகரனுக்கு ச.பரமசிவம் பயனாடை அணிவித்தார்.
தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், துணைத் தலைவர் வை.கலையரசன், கொடுங் கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, தாம்பரம் நகர செயலாளர் ச.மோகன்ராஜ், அழகிரி நரேஷ், படப்பை செ.சந்திரசேகரன், ச.சுரேஷ், சேத்துப்பட்டு லட்சுமணன், கே.ஆர்.ஆர். மன்றம் ஏ.முனியன், வட்ட தி.மு.க. பொருளாளர் செ.குமரன், துணை செயலாளர் ஜெ.வி.முருகன், சர்தார் உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
பொன்னுவேல் பிள்ளைத் தோட்டம் பகுதியில் கழகக் கொடிகள் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தன. அனை வருக்கும் உணவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப் பட்டு வழங் கப்பட்டது. ஆகாஷ் ஜோசானஸ் ரஸ்சல் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக