வருந்துகிறோம்
தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைச் செயலாளர் ஜி.நாகப்பன் அவர்கள் 14.05.2016 முற்பகல் 10.00 மணியவில் காலமானார் (வயது 94). அவருக்கு நான்கு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.
15.05.2016 முற்பகல் 11.00 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரம் 4வது தெருவிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், நுங்கம்பாக்கம் பகுதி தலைவர் மு.கோபால் மற்றும் அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜி.நாகப்பன் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்தனர். மற்றும் முன்னால் மாமன்ற உறுப்பினர் வ.கணேசன் மற்றும் பகுதி திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக