தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம், தலைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில்
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து
எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ. 4- தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம், தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம் இணைந்து ஹிந்தி மொழியை மாநிலங்களின் துறைகள் தோறும் திணிப்பதைக் கண்டித்தும், ஒன்றிய அரசு புதிய மருத்துவக் கல்வியில் ஹிந்தி மொழியைப் பாடமாக்கு வதை எதிர்த்தும் தமிழ் மரபு சித்த மருத்துவர், பாக்கம்
தமிழன் அவர்களின் தலைமையில், நேற்று முன்தினம் (2.-11.-2022) பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. என்னா ரெசு பெரியார், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சுரேஷ், தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா. வில்வநாதன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ் பண் பாட்டு அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக