செவ்வாய், 11 மே, 2021

பெலா. சந்திரா மறைவு

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் பெலாக்குப்பம் முனுசாமி அவர்களின் வாழ்விணையர் சந்திரா அம்மையார் (வயது60) அவர்கள் நேற்று (05.05.2021) இரவு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர்.

அவரது இறுதி ஊர்வலம் 6.5.2021 இன்று மாலை சூளைமேடு, சங்கராபுரம் இரண்டாம் தெருவிலிருந்து புறப்படுகிறது.

குறிப்பு: பெரியார் வலைக்காட்சியில் பணியாற்றிய தோழர் தமிழ்ச்செல்வி அவர்களின் தாயார் ஆவார்.

செல்: 08056119165

தோழர் தமிழ்ச்செல்வி - பழனிக்குமார்

(இணையர்கள்)சூளைமேடு பெரியார் பெருந்தொண்டர் பெலா முனுசாமி அவர்களின் வாழ்விணையர் பெலா சந்திரா அவர்கள் இயக்க நிகழ்வு எவையாக இருப்பினும் தகவல் கிடைத்தவுடன் முதல் ஆளாக இருப்பார் அவர் மறைவுற்ற செய்தி அறிந்ததும் கழக பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் அவர்கள் இறங்கல் தெரிவித்து மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வந்தோர்  மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், ந. இராமச்சந்திரன், கலைமணி மற்றும் ஆனந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக