பெரம்பூர் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சாவூர் ஒன்றியம் புது மாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் வி.பெரியசாமி(88) அவர்கள் 1.6.20 அன்று சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.
அவரது படத்திறப்பு நிகழ்ச்சி 17.6.20 அன்று 12:00 மணி அளவில் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் நடைபெற்றது.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வி.பெரியசாமி அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
பெ. திராவிட செல்வன்(மகன்) அவர்கள் அறிமுக உரையாற்றினார். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எ.அய்.ஆர்.எப். ரயில்வே சங்க பொறுப்பாளர்கள் தாடி மனோகரன், மோகன்தாஸ் ஆகியோர் அவருடைய தொண்டினை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
பெ.அன்பழகன்(இளைய மகன்) நன்றி கூறினார்.
திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ரயில்வே தொழிலாளர்களும் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்டனர்.
தனிமனித இடைவெளியுடன் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக