சென்னை, ஜூலை 4, பெரியார் பெருந்தொண்டர் பகுத்தறிவாளர் சைதை ஆர்.கமலநாபன் (வயது 82) அவர்கள் 30.6.2017 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இதையடுத்து எவ்வித மூடசடங்குமின்றி அவ ரது உடல் சிறீ இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்பட்டது.
சைதை கழகத் தோழர்கள் இரா.எத்திராஜ், இரா.வாசுதேவன் ஆகியோரின் தந்தையும், சென் டிரல் பேங்க் ஆப் இந்தியாவின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான பெரியார் பெருந்தொண்டர் பகுத் தறிவாளர் ஆர்.கமலநாபன் (வயது 82) அவர்கள் 30.6.2017 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.
மறைவு தகவல் அறிந்ததும் கழக பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், தரமணி கோ.மஞ்சுநாதன், ம.தமிழ், சைதை த.ஏ.திருவேங்கடம் மற்றும் திரளான கழகத் தோழர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவுற்ற சைதை ஆர்.கமல நாபன் அவர்களின் உடலுக்கு சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிர மணியம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், தீக்கதிர் நாளிதழ் செய்தி ஆசிரியர் கும ரேசன், மற்றும் சைதை பொது மக்கள் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவுற்ற சைதை கமல நாபன் அவர்களின் இறுதி ஊர் வலம் 1.7.2017 அன்று மாலை 3.30 மணியளவில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவி லிருந்து புறப்பட்டு அவர் வீட் டை சுற்றியுள்ள நான்கு தெருக்கள் வழியாக மக்களிடையே உடல் கொடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் பெருந்திரளாக பங்கேற்று எடுத்து சுற்றி வந்து இறுதியில் அவரின் விருப்பப்படி அவரின் விழிக் கொடை அளிக்கப்பட்டது. உடல் கொடை வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கையும் அச் சிட்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து சிறீ இராமச் சந்திரா மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்துக்கு உடல் கொடை வழங்கி, உடலை மருத்துவ ஊர்தியில் ஏற்றும் போது அனை வரும் வீரமுழக்கமிட்டனர்.
-விடுதலை,4.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக