திங்கள், 10 ஜூலை, 2017

சென்னை சேத்துப்பட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மாட்டுக்கறியும், மதவெறியும்' கண்டனக் கூட்டம்


சேத்துப்பட்டு, ஜூலை 6 தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் சேத்துப்பட்டு மங்களபுரம் பெரியார் சிலை அருகில் 30.6.2017 அன்று மாட்டுக்கறியும், மதவெறியும் என்கிற தலைப்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புரசை பகுதி செயலாளர் க.பாலமுருகன் தலைமை தாங்கினார். புரசை பகுதி தலைவர் சு.அன்புச்செல்வன் வரவேற் புரை ஆற்றியதை தொடர்ந்து டிஒய்எப்அய் அமைப்பைச் சேர்ந்த சிறீகாந்த், ம.க.இ.க. தோழர் வே.வெங்கடேசன், விடுதலை சிறுத் தைகள் கட்சி பொறுப்பாளர் உமா சங்கர், சி.பி.எம். தோழர் ஆறுமுகம் ஆகியோர் கண் டன உரையாற்றியதை தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் சிறப்புரை யாற்றினார். அவர் தன் உரையில் "மத்திய பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கினை யும், மதவாதப்போக்கினையும் பட்டியலிட்டு உரையாற்றியதோடு, ஜி.எஸ்.டி. பறிபோகிற மாநில உரிமைகளை பற்றியும், குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தை சார்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பினை பற்றியும் விளக்கி உரையாற்றி னார்.

20 ஆண்டுகள் கழித்து சேத்துபட்டு பெரியார் சிலை அருகில் கழக கூட்டம் நடைபெற்றதால் ஏராளமான மக்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை யொட்டி பகுதி முழுவதும் கழக கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

பொது மக்கள் தொடர்ச்சியாக கழக கூட்டங்கள் தங்கள் பகுதியில் நடைபெற வேண்டும் என்றும் அதற்கு தங்களால் ஆன உதவியை செய்வதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்ற தென் சென்னை மாவட்டத் தலைவர்

இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரும் மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட செயலாளர் பொறியாளர் தே.ஒளிவண்ணன், மாணவரணித் துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், யாழ்திலீபன், மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை, இளைஞரணிச் செய லாளர் ச.மகேந்திரன், இளைஞரணித் துணைத் தலைவர் மு.முகிலன் வடசென்னை இளை ஞரணித்தலைவர் தளபதி பாண்டியன், பொறியாளர் ஈ.குமார், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தனலட்சுமி, த.மரகதமணி, உமா மகேஷ்வரி, சேத்துப்பட்டு பாபு, க.எழில், சேகர், பரசுராமன், கோபி, க.விஜயராஜா, சி.பாஸ்கர், சேட்டு, முரளி, வி.சி.க.ஸ்டீபன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கோட்டூர்புரம் ச.தாஸ் இயக்க பாடல்கள் பாடினார். நிகழ்ச்சியை மு.சண்முகப்பிரியன் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக இளைஞரணித் தோழர் மு.திருமலை நன்றியுரையாற்றினார்.

-விடுதலை,5.7.17

குறிப்பு:- 10ஆண்டுகளுக்கு முன் சேத்துப்பட்டு பெரியார் சிலை முன்பாக திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிதி இளம்வழுதியை ஆதரித்து சிறப்புரையாற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக