புதன், 5 ஜூலை, 2017

மயிலை எம்.கே.காளத்தி மறைவு தமிழர் தலைவர் மலர்மாலை வைத்து மரியாதை

சென்னை, ஜூலை 4 தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை எம்.கே.காளத்தி அவர்கள் உடல் நலக்குறைவால் 2.7.2017 அன்று இரவு மறைவுற்றார்.
அவர் மறைவுற்ற தகவல் அறிந்ததும் நேற்று (3.7.2017) பிற் பகல் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது இணையர் திருமதி மோக னா அவர்களுடன் சென்னை மயிலாப்பூர் அப்பாசாமி கோயில்தெருவில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த எம்.கே.காளத்தி உடலுக்கு மலர் மாலை வைத்து இரங்கல் அறிக் கையை அவரது குடும்பத்தாருக்கு கொடுத்து, காளத்தி அவர்களின் இணையர் கரு¬ணா அம்மாள், மகன் கா.அசோகன், மகள்கள் கா.அமுதா, கா.அன்பு மற்றும் அவரின் அண்ணன் மகன் சுப்ரமணியம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நட ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், செயாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர் தமிழ் சாக்ரட்டீசு, டி.கிருஷ்ணன் ஆகி யோரும் காளத்தி அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட கழக நிர்வாகிகள் கோ.வி.ராகவன், இரா.பிரபாகரன், துணை வேந்தன், அரும்பாக்கம் தாமோதரன், சைதை மதியழகன், மயிலை ரவி, தரமணி மஞ்சு நாதன், மயிலை குமார், மகேந் திரன், முகிலன் சண்முகப்பிரியன், செங்குட்டுவன், மயிலை மோகன், சந்தோஷ், இனியன் மற்றும் திரளான கழக தோழர் களும் பிற இயக்கங்களின் தோழர் களும் பொது மக்களும் பங்கேற்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் சென்னை மயிலாப்பூர் இடு காட்டில் உடல் எரியூட்டப்பட்டது.
-விடுதலை,4.7.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக