சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று (29.4.2017) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 127 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2017) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையிலுள்ள அவரது சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் கவுதமன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, கவிஞர் பொன்னடியான், முனைவர் நா.க.மங்களமுருகேசன்,
திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மயிலை காளத்தி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு, பொதுக்குழ உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, மயிலை சேதுராமன், விடுதலை நகர் ஜெயராமன், பெரியார் மாணாக்கன், செல்வி, தொண்டறம், புழல் ஏழுமலை, யாழினி, திருமுகம்,
சேலம் மொக்கையன், கோவிந்தராஜன், செங்குட்டுவன், மணித்துரை, மு.சண்முகப்பிரியன், கொடுங்கையூர் தங்கமணி, த.தனலட்சுமி, வெங்கடேசன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, சோமசுந்தரம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ச.சேரன், அரும்பாக்கம் தாமோதரன், தரமணி மஞ்சுநாதன், பொறியாளர் குமார், அயனாவரம் மாடசாமி, பெரியார் திடல் சுரேசு, மகேஷ், அசோக், அம்பேத்கர், யுவராஜ், செவ்வியன், வேலவன் மற்றும் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
-விடுதலை,29.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக