வெள்ளி, 12 மே, 2017

சென்னை பெரியார் திடலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 120 மாணவர்கள் பயன்பெற்றனர் - புதிய வரவுகளின் எழுச்சி.


 

சென்னை, மே 2- வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, கும்முடிப் பூண்டி ஆகிய மாவட்ட மாணவர்களும், இளைஞர்களும் பங்கு பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சென்னை  பெரியார் திடலில் ஏப்ரல் 29, 30 சனி, ஞாயிறு இரு நாட்களும் நடைபெற்றது.

 

120 மாணவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். 80 பேருக்கு மேல் புதிய வரவுகளாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

 

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘பெரியார் ஒரு அறி முகம்’, ‘திராவிடர் கழக வரலாறு’, பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு’ ஆகிய தலைப்புகளில் வகுப்புகளை நடத்தினார்.

 

பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் ‘சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி வரலாறு’ எனும் தலைப்பி லும், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் ‘புராண, இதிகாச, வேதப் புரட்டு’, ‘இயக்க போராட்டங்கள்’ ஆகிய தலைப்புகளிலும், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ‘இந்துத்துவா’ ‘தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்னும் தலைப்புகளில் வகுப்பு நடத்தினர்.

 

பேச்சுப் பயிற்சி

 

‘இன்றைய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - காரணமும், தீர்வும்’ எனும் தலைப்பில் மாணவர்கள் பங் கேற்ற விவாத அரங்கு 29.4.2017 சனி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது. பங்கேற்ற மாணவர்கள்: பச்சையப்பன், துரை, ப.விடுதலை, செல்வி, யாழினி, ராஜேஷ்கண்ணா, யாழ்விழி, அறிவழகன். பேச்சுப் பயிற்சியிலீடுபட்ட மாணவர்களில் துரை முதல் இடத்தையும், செல்வி இரண்டாமிடத்தையும், விடுதலை மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

 

பெரியார் திரைப்படம்

 

29.4.2017 இரவு பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்காக பெரியார் ஊடகத் துறை சார்பில் ‘பெரியார்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
தமிழர் தலைவர்

எடுத்த வகுப்பு

‘கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 30.4.2017 அன்று வகுப்பு நடத்தினார். மாணவர் களிடம் கேள்விகளை கேட்டும், எளி மையாகவும் சிறப்பாக கருத்துகளை எடுத்துரைத்துடன் மாணவர்கள் அனை வரும் ‘கடவுள் மறுப்பு’ தத்துவத்தை சொல்லும்படி ஆக்கினார் தமிழர் தலைவர்.

 

கேள்வியும் கிளத்தலும்

 

மாணவர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு தமிழர் தலைவர் அருமையாக பதில்களை எடுத்துரைத்தார். தலைவரி டத்திலேயே கேள்வி கேட்பதும், தலை வரே அதற்கு பதில் இருத்ததும் புதிய அனுபவமாக மாணவர்கள் ஆர்வத் துடன் கூறினர்.

 

மாணவர்கள் உரை

 

மாணவர் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஜெயந்தி, ராஜேஷ் கண்ணா ஆகியோர் உரையாற்றினர்.

 

சிறப்பாக குறிப்புகள்

 

சிறப்பாக குறிப்பு எடுத்த மாண வர்கள் மூவருக்கு முதல், இரண்டு, மூன்றாம் பரிசும், ஒருவருக்கு ஆறுதல் பரிசும் கொடுக்கப்பட்டது.

 

புதிய வரவுகளில் பலர் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியும், தொடர்ந்து இயக்கப் பணியில் களப்பணியாளராக செயல்பட இருப்பதாயும் உறுதி அளித்தது. பயிற் சிப் பட்டறையின் பயனை வெளிப் படுத்துவதாக அமைந்தது.

 

அனைவருக்கும் சான்றிதழ்களை கழக நிர்வாகிகள் வழங்கினர். குழுப் படங்கள் எடுக்கப்பட்ட நிலையில் தோழர்கள் விடை பெற்றனர்.
-விடுதலை,2.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக