கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி மாண வர்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர் வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (19.04.2017) மாலை 4மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அள வில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததை ஒட்டி திராவிடர் கழகத் தலைவர் அனைத்து இடங்களிலும் கழகத்தோழர்கள் மற்றும் பொறுப்பாளர் களை இதில் கலந்துகொள்ள ஆணையிட்டிருந்தார். அந்த வகையில் சென்னை யில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையில், நுழைவுத்தேர்வு கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி யான அனில் ரமேஷ் தவே தலைமையிலான அமர்வுக்கே இதற்கான மறு சீராய்வு மனு அளிக்கப்பட்டது. இதுவே பெரிய அளவில் அய்யப்பாட்டை ஏற் படுத்துகிறது என்று கூறிவிட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நுழைவுத் தேர்வு வந்ததிலிருந்து இன்றுவரையிலுமான வரலாற்றையும், பார்ப்பனர் களின் சூழ்ச்சியையும் புள்ளிவிபரங்களு டன் எடுத்துரைத்தார். இது மாநிலங் களின் உரிமையைப் பறிப்பதாகும். ஒரேநாடு இந்துநாடு, ஒரே மொழி சமஸ் கிருதம், ஒரே கலாச்சாரம் பார்ப்பனிய கலாச்சாரம் என்று கொண்டுவருவதற் கான சதிதான் என்றும் ஏன் இதைக் கொண்டுவர நினைக்கிறார்கள் என்பதற் கான பின்னணியைச் சொன்னார். இந்த மண்ணுக்கென்று ஒரு தன்மை உள்ளது. அதை நிறைவேற்ற பெரியாரைத்தான் கையில் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து இதை முறியடிக்க வேண்டும். அதற்கு திராவிடர் கழகம் எல்லா வகை யிலும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறு வனத் தலைவர் அ. மாதவன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டத் தலை வர் கா. வசந்தகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் ப. இரத்தினசபாபதி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் ஆர். பெருமாள்சாமி மற்றும் இந்தக்கூட்டமைப்பின் சார்பில் பல் வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்தக்கோரிக்கை நிறைவேற வருகிற மே 5 ஆம் தேதி சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.மாயவன் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத்தின் தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத்தின் செயலாளர் ஒளி வண்ணன், செந்துறை இராசேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல், பெரியார் திடல் சுரேஷ், அம்பேத்கர், ஆனந்த் மற்றும் கழகத்தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-விடுதலை,20.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக