புதன், 26 ஏப்ரல், 2017

‘பாபா சாகேப்’ அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்குத் தமிழர் தலைவர் மாலைபுரட்சியாளர் ‘பாபா சாகேப்’ அண்ணல் அம்பேத்கரின் 127 ஆம் பிறந்த நாளான இன்று (14.4.2017) சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர் (செய்தி உள்ளே காண்க).

14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2017) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒடுக்கப்பட்ட டமக்களின் உரிமைக் குரலாய் திகழ்ந்த சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத் கரின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2017) சென்னை நேரு விளையாட்டு அரங்க நுழைவு வாயிலில் உள்ள அவரது சிலைக்கு கழ கத் தோழர்கள் புடைசூழ சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலா ளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டலச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தோழர் --தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

-விடுதலை,14.4.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக