சென்னையில் நடைபெற்ற கழகத்தின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.23 தமிழகத்தின் எல்லைப்புற மாநிலங்களில் அணைகள் கட்டி, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் செயல்களைக்கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் நடத்தும் என்று அறிவித்ததன்பேரில், சென்னை, தருமபுரி இரு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மா.சிங்காரவேலர் மாளிகை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் இன்று (23.2.2017) முற்பகல் 11 மணியளவில் நடை பெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் வரவேற்றார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையாற்றினார்.
சென்னை மண்டலத்தில் உள்ள தென்சென்னை, வடசென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் ஆகிய அய்ந்து கழக மாவட்டங்களின் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானவர்கள் பெருந் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப் பாட்ட முடிவில் வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரே சன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, தொழிலாளர் கழக செயலாளர் பெ.செல்வராசு, பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தி.வே.சு.திருவள்ளுவன், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் அம்பத்தூர் சிவக்குமார், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் நாகராஜ் உள்பட ஏராளமான வர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கழகப்பொதுச்செயலாளர் தொடக்க உரை
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையில் குறிப்பிட்டதாவது:
மார்ச் மாதம் 27ஆம் தேதி 2015 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஏற்கெனவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. பிறகு பிரதமர் மோடியை ஜூன் 14, 2016ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் சந்தித்து அணை கட்டப்படுவதை எதிர்த்து மனுவையும், கடிதத்தையும் அளித்தார்கள். இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.
தொடர்ந்து தமிழர்களை புறக்கணிக்கும் மத்திய அரசாக இருக்கிறது என்பது வெட்கக்கேடானது.
அணை கட்டுவதற்காக மாநில கருநாடக அரசு ரூ.5,912கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அணை கட்டு வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து ஆறு ஒப் பந்ததாரர்கள் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள் ளார்கள். இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தயாராக உள்ளார்கள். தொடர்ந்து கவனித்து வந்தோ மானால், ஒரு பக்கம் ஆந்திராவில் அணை, கேரளாவில் இன்னொருபக்கத்தில் அணை, இந்த பக்கத்தில் கரு நாடகாவில் ஓர் அணை என்று தமிழர்கள் குறிப்பாக நம்முடைய விவசாயிகளின் வாழ்வுரிமை, வாழ்வாதாரம் என்ன ஆவது? அவர்களின் நிலைமைகள் என்ன என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இங்கே நடைபெறுகிறது. நம் தமிழ்நாட்டு மக்கள், விவசாயிகள் வாழ்வுரிமை களுக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆர்ப்பாட்டத் தலைமையுரை வருமாறு:
கருநாடகத்தில் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் ஒரு சூழ் நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையிலும், தருமபுரியிலும் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு எந்தெந்த வகைகளில் எல்லாம் வஞ்சிக் கப்படுகிறதோ, உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அப்போ தெல்லாம் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
காவிரிநீர் பிரச்சினைக்காக, முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக இதே இடத்திலே பலமுறை ஆர்ப்பாட் டங்களை நடத்தியிருக்கிறோம். இப்பொழுது மேகதாது என்ற இடத்திலே கருநாடக மாநிலத்தில் அணை கட்டுவதற்காக அதற்கான நிதியைக் கூட, அந்த மாநில அரசு ஒதுக்கி செயல்படுத்த முனைந்து நிற்கின்ற இந்த நேரத்தில், அது கண்டிப்பாக தடுக்கப்பட்டாகவேண்டும். அந்த அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் விவசாயம் முற்றிலுமாக நாசமாகி, இப்பொழுதே விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையில் அந்த அணை கட்டப்படக்கூடாது, மத்திய அரசு தலை யிட்டு அதனைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், காவிரி நீர் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, வெறும் 10 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியில் விவசாயத்தை மேற்கொண்டிருந்த கருநாடக மாநிலம் இன்றைக்கு 19 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு அங்கே விவசாயத்தை விரிவு படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 22 லட்சம் ஏக்கர் நிலங்களில் காவிரி பாசனம் இருந்த நிலை மாறி, இன்றைக்கு வெறும் 16 லட்சம் என்கிற நிலைக்கு குறுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடந்த சில ஆண்டு களாக முற்றிலும் விவசாயமே செய்ய முடியாத ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
அதேபோலவே, தமிழ்நாட்டைச்சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களும் தமிழ்நாட்டினுடைய நீர்ப் பாசனத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையில், தமிழ் நாட்டிற்கு அறவே நீர் கிடைக்கக்கூடாது என்ற தன்மையிலே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பாலாறு என்பதைப் பொருத்த வரையிலே, ஆந்திர மாநிலம் அங்கே தடுப்பணையைக் கட்டிக்கொண்டி ருக்கிறது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 49ஆயிரம் ஏக்கர் நிலம் இன்றைக்கு பாதிக்கப்பட்டி ருக்கிறது. அதேபோல 300 ஏரி, குளங்கள் வற்றிப்போய் இருக்கின்றன.
1892ஆம் ஆண்டிலே தமிழ்நாட்டிற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் பாலாற்றுப்பிரச்சினையிலே ஒப்பந்தம் இருந்தும், அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத் தாமல், தான்தோன்றித்தனமாக ஆந்திர மாநிலம் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல, கேரளாவை எடுத்துக்கொண்டாலும்கூட, இப்பொழுது பவானி, பாம்பாறு பகுதியிலே அணை களைக் கட்டக்கூடிய ஒரு முயற்சியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்பட முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல நகரங்களுக்கு குடிநீர் வசதியும் மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு முற்றிலும் பாலைவனம் ஆகிவிடும். காவிரி நீர்ப்பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக, நியாய விரோதமாக தீர்ப்புகளுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்துவருகிறது.
தொடர்ந்து நாமும் 50, 60 ஆண்டு காலமாக எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை பல வடிவங்களில் நடத்தி இருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை தொடர் பிரச்சாரத்தைக் கூட வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுÕ பற்றி நாம் நடத்தி இருக்கிறோம்.
உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ உச்சநீதிமன்றம் இதில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி கூறுவதில் உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு இன்றைக்கு மத்திய அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதற்குக்காரணம் அடுத்த ஆண்டு கருநாடக மாநிலத்திலே சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தப்பிரச்சினையில் நியாயமாக நடந்துகொண்டால், கருநாடகத்திலே தாங்கள் தேர்தலிலே மக்கள் செல்வாக்கைப்பெறமுடியாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இன்றைக்கு உச்சநீதிமன்றத்துக்கே அறைகூவல் விடக்கூடிய ஒரு கேடு கெட்ட, மோசமான அரசாக மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது-.
நிவாரண உதவிகள் வழங்குவது என்பது ஒரு தற்காலிக அணுகுமுறையே தவிர, நிரந்தரமானது அல்ல. விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட, மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தேவைப்பட்டால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இதற்கு நல்லதொரு முடிவைக்காண வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய வேண்டுகோளாகும்.
இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகின்ற வகையில், வாழ்வா? சாவா? என்கின்ற ஒரு கேள்வி எழுந்துள்ள நிலையில் தமிழ்நாட்டினுடைய உரிமையை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசு இதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் சென்னையிலும், தருமபுரியிலும் நடத்தி கொண்டிருக்கிறது.
தொடர்ந்து வெற்றி பெறும்வரையில் திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும்.
இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
தென் சென்னை: மு.ந.மதியழகன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இரா.பிரபாகரன், வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, மயிலை பாலு, சு.செல்வம் (புதுவண்ணை), க.வெற்றிவீரன், ந.இராமச்சந்திரன், ந.கதிரவன், அ.செல்வராசு, அ.பாபு, மு.சண்முகப்பிரியன், சைதை தென்றல், ச.மகேந்திரன், மு.ஈழமுகிலன்
வடசென்னை: இன்பக்கனி, கோபி, ந.ராஜேந்திரன், கதிரவன் (ஏழு கிணறு), க.சுமதி, செ.உமா, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, கோபால், பாஸ்கரன், மு.மாணிக்கம், யுவராணி, செம்மொழி (பெ.பிஞ்சு), சே.தமிழரசி, எஸ்.வாசு, விமலாதேவி, செல்வராசு, தாமோதரன், புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன்
தாம்பரம்: ஜெயராமன், விஜய் ஆனந்த், சோமசுந்தரம், ஜெனார்த்தனம், இராமண்ணா, தொழிலாளரணி நாகரத்தினம், மா.ராசு, சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், விஜயகுமார், சுரேசு.
ஆவடி: குப்புராசு, கோ.முருகன், இ.ரகுபதி, பன்னீர், கலைமணி, உடுமலை வடிவேல், மணிமேகலை, கலையரசன், உ.கார்த்தி, பூவை.செல்வி, பெரியார் மாணாக்கன், சிவக்குமார், ஜெயந்தி, ராமதுரை, சம்பத், முத்துகிருட்டிணன், ராமண்ணா, தமிழ்செல்வன், பிரபாகரன்
கும்மிடிப்பூண்டி: பன்னீர்செல்வம், அருள், ஆனந்தன், நாகராஜ், இரணியன், அருணகிரி, சேட்டு, சம்பத், முரளி, பாலு, செல்வி, இரமேஷ், ரவி, சக்கரவர்த்தி, கஜேந்திரன், உதயகுமார், பகலவன்.
பெரியார் திடல்: சுரேஷ், கலைமணி, கலையரசன், யுவராஜ், காரல்மார்க்ஸ், கலைமதி, சுதன் மகேஷ் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வெற்றி பெறும்வரையில் திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும்.
இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
தென் சென்னை: மு.ந.மதியழகன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இரா.பிரபாகரன், வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, மயிலை பாலு, சு.செல்வம் (புதுவண்ணை), க.வெற்றிவீரன், ந.இராமச்சந்திரன், ந.கதிரவன், அ.செல்வராசு, அ.பாபு, மு.சண்முகப்பிரியன், சைதை தென்றல், ச.மகேந்திரன், மு.ஈழமுகிலன்
வடசென்னை: இன்பக்கனி, கோபி, ந.ராஜேந்திரன், கதிரவன் (ஏழு கிணறு), க.சுமதி, செ.உமா, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, கோபால், பாஸ்கரன், மு.மாணிக்கம், யுவராணி, செம்மொழி (பெ.பிஞ்சு), சே.தமிழரசி, எஸ்.வாசு, விமலாதேவி, செல்வராசு, தாமோதரன், புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன்
தாம்பரம்: ஜெயராமன், விஜய் ஆனந்த், சோமசுந்தரம், ஜெனார்த்தனம், இராமண்ணா, தொழிலாளரணி நாகரத்தினம், மா.ராசு, சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், விஜயகுமார், சுரேசு.
ஆவடி: குப்புராசு, கோ.முருகன், இ.ரகுபதி, பன்னீர், கலைமணி, உடுமலை வடிவேல், மணிமேகலை, கலையரசன், உ.கார்த்தி, பூவை.செல்வி, பெரியார் மாணாக்கன், சிவக்குமார், ஜெயந்தி, ராமதுரை, சம்பத், முத்துகிருட்டிணன், ராமண்ணா, தமிழ்செல்வன், பிரபாகரன்
கும்மிடிப்பூண்டி: பன்னீர்செல்வம், அருள், ஆனந்தன், நாகராஜ், இரணியன், அருணகிரி, சேட்டு, சம்பத், முரளி, பாலு, செல்வி, இரமேஷ், ரவி, சக்கரவர்த்தி, கஜேந்திரன், உதயகுமார், பகலவன்.
பெரியார் திடல்: சுரேஷ், கலைமணி, கலையரசன், யுவராஜ், காரல்மார்க்ஸ், கலைமதி, சுதன் மகேஷ் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக