திங்கள், 13 பிப்ரவரி, 2017

மார்ச் 10 - மனுதர்ம எரிப்பு போராட்டத்திற்கு சென்னை மண்டல கழக மகளிரணி தயார்

சென்னை, பிப். 13- உலக நாத்திக இயக்கங்களின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம் மையாரின் பிறந்த நாள் மார்ச் 10 அன்று திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம எரிப்பு போராட்டம் நடைபெறு வதையொட்டி போராட்டத்தில் பங்கெடுக்கும் கழக வீராங்க னைகளின் பட்டியலை தயா ரிக்க தமிழகம் முழுவதும் நடை பெறும். கழக மகளிரணியின் சுற்றுப்பயணத்தின் இரண்டா வது கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் பிப். 11 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலை மைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை தாங்கி னார். வந்திருந்தோர் அனைவ ரையும் வரவேற்று வடசென்னை கழக மகளிரணி செயலாளர் ச.கி.இன்பக்கனி உரையாற்றி னார். பெரியார் பிஞ்சு யாழினி பாரதிதாசன் கவிதை படித்தார்.

கும்மிடிப்பூண்டி செல்வி, யுவராணி, சுமதி, மோகனப்பிரியா, செங்கை ஆனந்தி ஆகி யோர் கருத்துகளை எடுத்து வைத்த பின்னர், வீராங்கனை கள் பட்டியலை தயார் செய்ய வந்திருந்த பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக மகளிர ணிச் செயலாளர் கலைச்செல்வி, கழக மகளிர் பாசறை செயலா ளர் செந்தமிழ்ச்செல்வி ஆகி யோர் மனுதர்மத்தை ஏன் எரிக்க வேண்டும் என்பது பற்றி தங் களுடைய ஆணித்தரமான கருத் துகளை எடுத்துரைத்தனர்.

முன்னதாக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார் வதி தனது தலைமையுரையில் கழக மகளிரணி மீண்டும் புத் தெழுச்சி பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

முடிவில் போராட்டத்தில் கலந்து கொள்ளும் கழக வீராங் கனைகள் பட்டியல் சிறப்பு விருந்தினர்களிடம் கொடுக்கப் பட்டது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.

சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் உமா நிகழ்ச் சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். வடசென்னை மகளிர் பாசறை அமைப்பாளர் சுமதி நன்றியுரையாற்றினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் சி.வெற்றிச்செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில் குமாரி, பூவை செல்வி, கற் பகம், சோபனா, மரகதமணி, எண்ணூர் விஜயா, வெண் ணிலா, கீதா ராமதுரை, துர்கா, இளையராணி, ரமணி, ஷீலா, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு பொலிவு கூட்ட சிறப்பித்தனர்.
-விடுதலை,13.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக