புதன், 8 பிப்ரவரி, 2017

மதுரை பொதுக்குழுவில் அனல்பறக்கும் தீர்மானங்கள்

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திரம் எரிக்கப்படும்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை:
அனைத்துக் கட்சித் தலைவர்கள் - ஆன்மிகப் பெருமக்கள் - சட்ட வல்லுநர்கள் பங்கேற்கும்
மாபெரும் மாநில மாநாடு வரும் ஏப்ரலில்!
மதுரை பொதுக்குழுவில் அனல்பறக்கும் தீர்மானங்கள்!
மதுரை, பிப்.4- அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான  வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி, செயல்பட வைக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஆன்மிகப் பெருமக்கள்,  சட்ட வல்லுநர்கள் பங்கேற்கும் மாபெரும் இன இழிவு ஒழிக்கும் மாநாடு வரும் ஏப்ரலில் - தலைநகரமாம் சென்னையில் நடைபெறும் என்பது உள்பட பல முக்கிய அனல்பறக்கும் தீர்மானங்கள் மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
4.2.2017 அன்று மதுரையில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:  இரங்கல் தீர்மானம் (3 ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் 2:
மனுதர்ம எரிப்புப் போராட்டம்!
எங்களை இழிவுபடுத்தக்கூடிய வேதம், ஸ்மிருதிகள், இதி காசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவற்றை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகத் தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் திருவாரூரில் 18.12.2016 அன்று நடைபெற்ற திராவிடர் கழக திராவிடர் கழக மகளிர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டின் நிறைவுரையில் அதனை ஏற்று அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி அன்று அதற்கான போராட்ட நாளாக திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.
படுக்கை, ஆசனம், அலங்காரம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற் பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17). இதைவிடப் பெண்களை இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு எழுதிவைக்கப்பட்டுள்ள மனுதர்ம சாஸ்திரத்தின் நகலை பெண்குலத்தின் ஒப்புவமையற்ற வீராங்கனையான அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான வரும் மார்ச் 10ஆம் தேதி (2017) அன்று முற்றிலும் பெண்களின் தலைமையிலேயே பெண்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்தும் உரிமை வேட்கையின் அறிகுறியாக தீயிட்டுக் கொளுத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக் கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பெண்கள் இந்த உரிமை உணர்ச்சி - இழிவு ஒழிப்புப் பெரும் போரில் ஈடுபடுமாறு இப்பொதுக்குழு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
மார்ச் 10ஆம் நாள் திராவிடர் கழக மகளிரணியினர் முன்னின்று நடத்தும் மனுதர்ம சாஸ்திரம் எரிப்புப் போராட்டம் குறித்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
அத்தகு பிரச்சாரக் கூட்டங்களில் மகளிர் அணி, மகளிர் பாசறையைச் சேர்ந்த பெண்கள் முக்கிய இடம் பெறவேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
தீர்மானம் 3:
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகுக்கும் மனித உரிமைப் போராட்டமாகிய தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்தும் வகையில், தி.மு.க. ஆட்சியில் 1970 ஆம் ஆண்டிலும், 2006ஆம் ஆண்டிலும் ஆணைகளும், சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.
நீதிபதிகளைத்தலைவர்களாகக்கொண்டமூன்றுஆணை யங்கள் அமைக்கப்பட்டு, அவ்வாணையங்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் உருவாக்கப்பட்டு, 69 சதவிகித இடஒதுக்கீட்டு அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டு, தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தீட்சையும் வழங்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படவிருந்த ஒரு காலகட்டத்தில், அதனை எதிர்த்து சிவாச்சாரியார்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அதன் மீது தீர்ப்பும்  (16.12.2015) வழங்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடுஅரசால்இயற்றப்பட்டசட்டம்செல்லும்என்றும் கூறியதோடு, மனுதாரர்களால் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடியும் செய்துவிட்டது.
எந்தவித சட்டத் தடையும், நீதிமன்றத்தின் தீர்ப்பும் விரோதமாக இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு ஆகமத்துக்கு உட்பட்ட கோவில்கள், ஆகமங்களுக்கு உட்படாத கோவில் களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியும், தீட்சையும் பெற்ற தகுதியுள்ள 206 பேர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இந்தப் பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் ஒத்த கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிகள், ஆன்மீகவாதிகள், சட்ட வல்லுநர்கள் பங்கேற்கும் மாபெரும் பொது மாநாட்டினை  ஏப்ரல்  இறுதி  வாரத்தில்  தலைநகரான சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4(அ):
தேசிய புதிய கல்விக் கொள்கை - வேண்டாம்!
மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்து மதவாதக் கண்ணோட்டத்தோடு திட்டங்களை அறிவித்துச் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக தேசிய புதிய கல்வி - 2016 - சில உள்ளீடுகள் (National Testing Agency) என்ற பெயரால் மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடியதும், ஒற்றைக் கலாச்சாரத்தை உள்ளடக்கியதும், கல்வியைக் காவியமயமாக்கும் நோக்கம் கொண்டதும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு வழிசெய்யக் கூடியதுமான பிற்போக்குத் தன்மை கொண்டதால் அந்தத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. ‘நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியதுபோல, சட்டப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக ‘‘புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து'' தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு தமிழக முதல் அமைச்சரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
அதுபோலவே மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு ‘நீட்' என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வினைத் திணிக்கக் கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு 2007ஆம் ஆண்டு முதல் சட்டப்படியாக ஒழிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கும் தன்மையில் தமிழ்நாடு அரசின் கருத்தினைக் கூடக் கேட் காமல், தன்னிச்சையாக மத்திய அரசின் நீட் திணிப்பினை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி வந்தது. தமிழ்நாட்டுக்கு நிரந்தர விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டம் ஒன்றை இயற்றுமாறு தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஒத்த அமைப்புகளை இணைத்து, திராவிடர் கழகம் கோரிக்கை வைத்துவந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் அந்த வகையில் சட்டம் இயற்றியமைக்காக (31.1.2017) தமிழக முதல் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நம்மோடு இப்பிரச்சினையில் பயணித்துவரும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஆசிரியர் அமைப்பினர், கல்வியாளர்கள் அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 (ஆ):
நுழைவுத் தேர்வை நடத்துவதற்கென்றே தனி முகமையின் நோக்கம்
நீட் உள்பட பல்வேறு அகில இந்திய நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வை நடத்துவதற்கென்றே தேசிய தேர்வு முகமை(National Testing Agency) என்ற ஒன்றை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. பொதுவாக இத்தகைய அகில இந்திய தேர்வுகள் என்றாலே மேட்டுக்குடி மக்களுக்கும், தலைமுறை தலைமுறையாகப் படித்த கூட்டத்துக்கும், வசதிவாய்ப்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே நல்ல தீனியும் - வேட்டையும் என்பதைப் புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இதனை எதிர்த்துக் கிளர்ந்து எழவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. நுழைவுத் தேர்வுகளால் பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுதான் ஆட்சி அமைக்க முடிகிறது என்பதை மறந்து, அம்மக்களுக்கே துரோகம் செய்யும் ஆட்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவில் பள்ளிக் கூடத்துக்கே போகாதவர்கள் ஆறரைக் கோடி பேர் என்பது அதிர்ச்சிக்குரியது. மத்திய அரசு முதலில் இதுபோன்றவற்றில் கவனம் செலுத்தட்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 (இ):
மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கு
எக்சிட் தேர்வு எதற்கு?
இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குப் பிறகு மருத்துவர்களுக்கு தேசிய உரிமத் தேர்வு (National Licentiate Test)என்ற Exit Test தேர்வு ஒன்றினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதானது தேவையற்றது. மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் மாணவர்கள் பயிலுகின்றனர். மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்படும் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்றுதான் டாக்டர்களாகும் தகுதியினைப் பெறுகிறார்கள். அதன் பின் பயிற்சி மருத்துவத்தையும் (House Surgeon) முடித்து, மருத்துவர்களாகப் பதிவு செய்து கொண்டு மருத்துவப் பணியை ஆற்றிவரும் மருத்துவர்களுக்கு, மற்றொரு தகுதித் தேர்வு என்பது தேவையற்றது. அவர்களுக்குக் கல்வி அளித்த அரசையும், மருத்துவக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் சிறுமைப்படுத்துவதால் அந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதேபோல சட்டம் படித்து பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து, வழக்குரைஞர் தொழில் நடத்தி வருபவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மறு தகுதி தேர்வு என்பதும் பெற்ற பட்டத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்பதைத் தெரிவித்து இந்த முறையையும் கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்  5(அ):
தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று இடஒதுக்கீடுமத்திய அரசு துறைகளில்உண்டுஎன்றுசொன்னாலும்கிளாஸ்1 முதலியபணிகளிலும்,வங்கிஅதிகாரிகளிலும்,அரசு செயலாளர்கள்போன்றபெரும்பதவிகளிலும்இவர் களுக்கான இடஒதுக்கீடு எட்டப்படவில்லை; அளிக்கப்பட வில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பெற சட்டப்படி உரிமை உண்டு என்றாலும் 12 சதவீதத் தைக்கூட அவர்கள் தாண்டவில்லை என்பது அதிர்ச்சிக்கு உரியதாகும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் சட்டப்படி உரிய சதவீத அளவில் இப்பதவிகள் அளிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இந்த அதிமுக்கியமான பிரச்சி னைக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்றத்தில் ஒரே குரலாய் எழுந்து நின்று வலியுறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தருமாறு இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.
முக்கியமான துறைகளும், தொழிற்சாலைகளும் தனி யார்க் குத் தாரை வார்க்கப்படுவதால் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தினைக் கொண்டுவருமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் மத்திய அரசை இந்த வகையில் வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5(ஆ):
மிக முக்கியமாக நீதித் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. குறிப் பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் இருப்பதால், இனி செய்யப்படும் நியமனங்களில் பார்ப்பனர்களை அறவே தவிர்க்கவேண்டும் என்றும், தாழ்த் தப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை திடீரென்று குறைந்து போனதால் அடுத்தடுத்த நியமனங்களில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகத்திற்கான நீதிபதிகள் நியமனம் மிக மிக அவசியம் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6(அ):
ஜாதி ஒழிப்புக்கான
நடவடிக்கைகள் தேவை!
ஜாதி வெறியை விசிறிவிட்டு தேர்தலில் வாக்குப் பிரிக்கும் கீழ்த்தரமான போக்கினை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. போதிய வயதடைந்த ஆண் - பெண் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதை இப்பொதுக்குழு வரவேற்கிறது. இதற்கு எந்த வகையிலும் முட்டுக்கட்டை போடுவதும், தொல்லைகளைத் தருவதும் சட்டப்படியும் மனித உரிமைப்படியும் பெருங் குற்றமாகும்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரின் வாரிசு களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
‘கவுரவக் கொலை' என்ற சொல்லாடல் அகவுர வமானது, நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் திட்டவட்டமாக இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. ஜாதி போதைக்கு ஆளாகி, பெற்ற மகளையே கொலை செய்யும் போக்கிற்கு முடிவினை ஏற்படுத்தி, இதன் மீதான குற்ற வழக்கை விரைவில் விசாரித்து, கடும் தண்டனை கொடுத்து, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
ஜாதி ஒழிப்புக்கு - கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது பெரும் உந்துதலாக இருக்குமாதலால் தீண்டாமை எந்த வகையிலும் குற்றமானது என்ற அடிப் படையில், உடனடியாக அனைத்துக் கோயில்களிலும் தாழ்த்தப்பட்டவருக்கு அர்ச்சகர் ஆகும் வாய்ப்பு அளிக் கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் அதற்குப் பூரண ஆதரவு தருமாறு நீதிமன்றங்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 70 ஆண்டுகள் ஓடிய பிறகும் சேரிகள் என்றும், காலனிகள் என்றும் பிரித்து வைப்பதும், சுடுகாடுகளில்கூட பேதம் இருப்பதும் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத்தக்கதுமாகும்.
இந்த அடிப்படைத் துவேசத்தை, இழிவை உடனே தடுத்து நிறுத்திட ஆவன செய்யுமாறு மத்திய, மாநில அரசு களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6 (ஆ):
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு
கவுரக்கொலை என்னும் ஜாதி ஆணவ எதிர்ப்பு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடைபெறும். அம் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார் என்று இப்பொதுக்குழு முடிவு  செய்கிறது.
தீர்மானம் 6(இ):
இந்து முன்னணியின்  அராஜகம்!
அரியலூர் மாவட்டம் சிறு கடம்பூரைச் சேர்ந்த 16 வயது டைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தினியை காதலிப்பதாகக் கூறி, கர்ப்பமடையச் செய்ததோடு, தன் நண்பர்களோடு கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தி, படுகொலை செய்து பாழுங் கிணற்றில் வீசி எறிந்த கொடுமை நடந்திருக்கிறது. இவர்கள் அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களே. அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி, அழுத் தம் கொடுத்ததற்குப் பிறகே கைது செய்யப்பட்டனர். வழக்கைப் பதிவு செய்யவும் காலதாமதப்படுத்தினர்.  இந்து முன்னணி செயலாளர் குண்டர் சட்டத்தின்கீழ் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கும்பலுக்குப் பின்னணிப் பலமாக இருக்கக் கூடிய மாவட்ட இந்து முன்னணி செயலாளரை அடையாளப்படுத்தி நந்தினியின் குடும்பத்தினர் கூறியும், பொதுமக்கள் வலியுறுத்தியும், அவரைக் காவல்துறை இதுவரை கைது செய்யாதது கண்டனத்திற்குரியதாகும். தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமைக்குக் காரணமான இந்து முன்னணிக்காரர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது. இல்லையெனில் வெகுமக்கள் போராட்டத்தைத் தொடர நேரிடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
தீர்மானம் 7(அ):
தமிழ்நாட்டின் உரிமைகள்
மறுப்பு - பறிப்பு!
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் பறிக்கப்படுவது அண்டை மாநிலங்களால் மட்டுமல்ல; மத்திய அரசின் பங்கும் இதில் பெரும் அளவு உண்டு என்பதை இப் பொதுக்குழு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறது. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், உச்சநீதிமன்றத்திற்கே சவால் விடும் மத்திய அரசின் போக்கில், கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இலாபம் ஈட்டும் சுயநல அரசியல் தன்மை வெளிப்பட்டுவிட்டது. இதன்மூலம் மத்திய பி.ஜே.பி. அரசு மத்திய அரசுக்குரிய கடமையிலிருந்து கீழிறக்கம் பெற்றுவிட்டது என்று  இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டுக்கு சட்டப்படியாகக் கிடைக்க வேண்டிய நீர், தொடர்ந்து அண்டை மாநிலங்களால் தடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தமிழ்நாடே பஞ்சப் பிரதேசமாக மாறிடக் கூடிய பேரபாயம் சூழ்ந்து நிற்கிறது. இந்திய தேசியத் தைப் பற்றி ஒரு பக்கத்தில் வாய்க் கிழியக் கத்தும் கட்சிகள், நடப்பில் குறுகிய கண்ணோட்டத்தோடு நடந்துகொள்வதற்கு வெட்கப்படவில்லை. தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசும் கண்டும் காணாமல் அரசியல் லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் வெறும் காகித அம்புகளாகிவிட்டன. இதுதான் இன்றைய சுதந்திர இந்தியாவின் இலட்சணம் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிலை நீடித்தால், சோவியத் ருசியாவிற்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் நேரிட்டால் அதற்கு முழுப்பொறுப்பு மத்திய அரசும், தேசியக் கட்சிகளும்தான் என்பதைச் சுட்டிக் காட்டி இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. நதிநீர்ப் பிரச்சினைக்கு நதிகளை தேசிய மயமாக்கல், நதிகள் இணைப்பு இவைதான் தீர்வு என்று இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 7(ஆ):
விவசாயப் பாதிப்பும் - நிவாரணமும்
பருவமழை பொய்த்துப் போனதாலும், கருநாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு சட்டப்படி, நியாயப்படி அளிக்க வேண்டிய தண்ணீரைத் தர மறுத்ததாலும்,  தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே அறவே மரணித்துவிட்ட பெருங்கொடுமை நிகழ்ந்துவிட்டது; விவசாயிகளின் தற்கொலைகளும், மர ணங்களும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வார்தா புயல் பாதிப்புக் காரணமாகவும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் பெரும் அளவில் உருக்குலைந்து போயின.
இந்த நிலையில் மத்திய அரசு, இழப்பின் அளவை சரியாகக் கணிக்காமல், பிச்சை போடுவதுபோல நிதி உதவி அளிப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைப் பார்வையிடும் மத்தியக் குழுவின் வருகை காலதாமதமாக இருப்பதால், உண்மையான பாதிப்பின் அளவைக் கணிப்பதிலும், இழப்பீடுகளை வழங்குவதிலும் பெருங் குறைபாடுகள் ஏற்பட வழிவகுக்குகிறது. இந்த நிலை கண் டிப்பாகத் திருத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை முழுமையாக வழங்குமாறும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கதுதான் என் றாலும், நிவாரணத் தொகை மிக மிகக் குறைவு என்ற எண்ணம் - வருத்தம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஓங்கி இருப்பதால், நிவாரணத் தொகையின் அளவை அதிகரிக்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
விவசாயப்  பாதிப்பால் தற்கொலைகள் செய்து கொண்ட வர்கள், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக மதிப்பிடப்படவில்லை என்ற குறைபாடும் விவசாயிகள் மத்தியில் இருப்பதால் இதுகுறித்தும் மறுபரிசீலனை செய்யு மாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8:
ராமர் கோயிலைக் கட்டுவோம் என்கிற பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை கண்டிக்கத்தக்கது - சட்ட விரோதமானது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை தன்மைக்கு முற்றிலும் விரோதமாகவும், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால தீர்ப்புக்கு எதிராகவும், உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றால் ராமன் கோயில் கட்டுவோம் என்று பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதற்கு இப்பொதுக்குழு தன் வன்மையான கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தேர்தல் ஆணையம் இதன் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9(அ):
பி.ஜே.பி.யின் மதவாத அரசியல்
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கும், சோசலிசத்துக்கும் நேர் எதிராகப் பயணிப்பது என்பது வெளிப்படை. குடியரசு நாள் விளம்பரத்திலேயே அரச மைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற்களை வேண்டுமென்றே நீக்கி வெளியிடுகிறது என்றால் பி.ஜே.பி. அரசின் அரசியல் சட்ட விரோதப் போக்கை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
காவிக் கல்விக் கொள்கை, வரலாறு காவிமயமாய் ஆக்கப்படுதல், பசுவதைத் தடைச் சட்டம் - அதன் பெய ரால் சிறுபான்மையினர் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் வன்முறை, படுகொலை, யூனிபார்ம் சிவில்கோட், அயோத்தியில் ராமன் கோயில், ராமன் பாலம் என்று வளர்ச்சித் திட்டத்தை முடக்குதல், சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பூட்டும் பேச்சுகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசுப் பணிகளில் சேரலாம் என்ற அறிவிப்பு - இன்னோரன்ன செயல்பாடுகளோடு, இந்து வெறி ஆட்சி நடத்தும் பி.ஜே. பி.யை தேர்தல் களத்தில், குறிப்பாக 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து முற்றாகத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று சமூகநீதி, மற்றும் மதச்சார்பின்மை சக்திகளை இப்பொதுக்குழு  வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9 (ஆ):
பி.ஜே.பி. ஆட்சி வளர்ச்சியல்ல -வீழ்ச்சியே!
மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடையும் வகையில்தான் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடத்திவருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சிப் பணி என்பது முடங்கிப் போய்விட்டது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததன்மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அறவே தோல்வி அடைந்துவிட்டது. கறுப்புப் பணம் என்பது நிலங்களாகவும், தங்கங்களாகவும், கட்டடங்களாகவும் அசையாச் சொத்துக் களாகவும் இருக்கும் நிலையில், நிஜத்தை விட்டு நிழலோடு சண்டை போட்ட  கதையாகிவிட்டது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளியில் கொண்டுவருவோம் என்ற பேச்செல்லாம் வெற்று ஆரவாரமே என்பதும் வெளியாகிவிட்டது. அந்தக் கறுப்புப் பணத்தை மீட்டு தலா 15 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று நரேந்திர மோடி, கடந்த மக்களவைத் தேர்தலின்போது பேசியது எல்லாம் அரசியலுக்காக - பேசப்பட்டதாக சொல்லு வது மக்களை ஏமாற்றுவதாகும்.
மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் - நாட்டின் வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று மேனாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக் கதாகும்.
நாடெங்கும் விவசாயிகள் தற்கொலைகளும், விவசாயத் தொழில் பாதிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு மரணங்களும் பெருகி வருகிறது. பிரதமர் இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் சுற்றுவதுதான் அதிகம். நாடாளுமன்றத்திற்கு வந்து மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துவது, கருத்துக்களைக் கூறுவது எதிர்க் கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்வது என்ற ஜனநாயகக் கடமையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்று வருகிறார். நிதிநிலை அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி அறிவிப்பு இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
தேர்தலுக்கு முன்பு அவரைப் பற்றியிருந்த பிம்பம் இப் பொழுது முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது என்பது உண்மை. இதற்குப் பிறகாவது தம் கைகளில் இருக்கும் வாக்குச் சீட்டை யாருக்குச் செலுத்துவது என்பதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வாக்காளர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10:
முள்ளிவாய்க்கால் படுகொலை விசாரணை தாமதம் ஏன்?
உலகம் கண்டிராத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஏழரை ஆண்டுகள் ஓடிய நிலையில் அதன் விசாரணை மேலும் ஓராண்டு தள்ளிப் போகும் என்பது மன்னிக்கவே படமுடியாத முடிவாகும்.
சர்வதேச விசாரணை வேண்டும் என்ற வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டு, இலங்கை அரசே விசாரிப்பதற்கு அய்.நா. ஏற்றுக்கொண்டதேகூட ஒரு அவலமே! 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த மைத்ரிபால சிறிசேனா விசாரணையைக் காலந்தாழ்த்தும் யுக்தியை மேற்கொண்டு வருகிறார். விசாரணையை மேலும் தள்ளிப் போடுவது முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நிகரானதே! அய்.நா. இதில் தலையிட்டு சர்வதேச விசாரணைக்கு உத்தர விட்டு உரிய நீதி கிடைக்க வழிகாண வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11:
தமிழக மீனவர்கள் பிரச்சினை
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் - மத்தியில் ஆட்சி மாறினாலும், பழைய நிலையே தொடர்ந்து வருகிறது. இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு - இரு நாட்டு அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் ஒரு நாள் செய்தி என்பதைத் தவிர வேறு உருப்படியாக தமிழக மீனவர்கள் உரிமை மீட்புக்கோ, மீட்சிக்கோ, அன்றாடம் அவர்களின் மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டுக்கோ உதவுவதாக இல்லை. மாறாக, அவர்கள் மீது தாக்குதலும், அவர்களின் படகுகள், வலைகள் பறிமுதலும்  என்பது தொடர்கதையாகவே இருந்து வருவது மிகப் பெரிய அவலமாகும்.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் உயிர்நாடி வாழ்வாதாரமான படகுகள் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்ற இலங்கை அரசின் முடிவானது - தமிழக மீனவர்கள் பிரச்சினையையும் கடந்து இந்திய இறையாண்மைக்கே ஒரு குட்டி இலங்கை நாடு விடுக்கும் சவாலாகவே அது கருதப்பட வேண்டும்.
இதற்கு மேலும் மத்திய அரசு இப்பிரச்சினையில் அமைதி காப்பது விரும்பத்தக்கதல்ல. கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதி இப்பிரச்சினையில் ஒரு சிறிய அளவில்கூட காப்பாற்றப்படவில்லை.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பட்டினிப் போராட்டமெல்லாம் நடத்திக் காட்டியும், இந்திய அரசின் மவுனம், தமிழக மீனவர்கள் மத்தியில் மத்திய அரசின்மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு மேலும் காலந்தாழ்த்தாது - தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைக்குத் தக்கதோர் உறுதிப்பாட்டை, தக்க ஒப்பந்த ரீதியாக ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது; தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசுக்கு வலிமையான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.
தீர்மானம் 12:
தேவை முழு மதுவிலக்கு
மதுப் போதையால் தனி மனிதனும், குடும்பங்களும் முற்றாக நாசமாகி வருவதால் முழு மதுவிலக்கை செயல்படுத்துமாறு மாநில அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது. மது விலக்கைக் கொள்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு, மாநிலங்களில் கொண்டுவரப்படும் மது விலக்கால் ஏற்படும் பொருள் இழப்பை ஈடுகட்டும் வகையில் மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி செய்யுமாறு இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13:
மாணவர்கள் - இளைஞர்கள்
எழுச்சியும் - எதிர்பார்ப்பும்
ஏறு தழுவுதல் உரிமை வேண்டி மாணவர்கள், இளைஞர்கள் இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டு தமிழ் நாடு முழுவதும் அறப் போராட்டத்தினை கட்டுப்பாடாக நடத்தியமைக்காக இப்பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
இதுபோன்று தமிழர்களின் பொதுப் பிரச்சினைகளான சமூகநீதி, மதச்சார்பின்மை, நதிநீர் உரிமைப் பிரச்சினைகள், தமிழக உரிமைகள் பறிப்பு, ஜாதி தீண்டாமை ஒழிப்பு, தமிழ்ப் பண்பாடு மீட்பு போன்ற முக்கியமான பொதுப் பிரச்சினைகளிலும் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!' என்று ஏறு தழுவுதல் உரிமைக்காகக் கொடுத்த குரலை மேலும் விரிவுபடுத்த வேண்டும்; நீட்டிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்களை - இளைஞர்களை இப்பொதுக்குழு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 14:
பெல் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக!
திருச்சி திருவெறும்பூரில் ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந் தத் தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரு கிறார்கள். அவர்களில் பட்டதாரிகளும் உண்டு. அத்தகு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1075. இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற இந்த கோரிக்கைக்காக திராவிடர் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே போராடி வருகிறது.
அரித்துவார், அய்தராபாத் ஆகிய இடங்களில் இதே ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந் தரப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், திருவெறும்பூர் ‘பெல்' நிறுவனத்தில் மட்டும் விடாப்பிடியாக தொழிலாளர் விரோதப் போக்கில் நிருவாகம் ஈடுபட்டு வருகிறது.
‘நவரத்தினா' என்று அழைக்கப்படும் ஒன்பது நிறு வனங்களில் ‘பெல்' நிறுவனமும் ஒன்று.  இலாபம் கொழிக்கும் நிறுவனமாக இது ஒளி விடுவதற்கு முக்கிய காரணமே இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடும் உழைப்புதான்! எல்லாத் துறைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனாலும், தொழிலாளர் விரோதப் போக்குடன் இந்த நிருவாகம் நடந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
இதுகுறித்து திராவிடர் கழக அமைப்பான பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் பல காலமாக வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவை தொழிலாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தும், அதனைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து எதையாவது சொல்லி நிறுவனத்தின் செல வில் தொடர்ந்து நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து கொண்டே வருகிறது. தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி, மத்திய அரசுடன் தொடர்புகொண்டு, திருவெறும்பூர் பெல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை நலன் கோரும் விடயத்தில் அக்கறை செலுத்துமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. அவர்களின் நீண்டகால உழைப்புக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருமாறும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. பலரும் ஓய்வு பெறும் வயதினை எட்டிக்கொண்டுள்ளனர் என்ற உண்மையையும் இப்பொதுக்குழு நினைவூட்டுகிறது.
தீர்மானம் 15 (அ):
தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
மத்திய அரசு
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் 3,960 மெகாவாட் அனல்மின் அமைப்புத் திட்டம் 1998ஆம் ஆண்டு முதல் வெறும் காகித அறிவிப்பாகவே இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அந்தத் திட்டத்திற்கான நிலத்தினை ஒதுக்கியும், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராமல், ஒரிசா மாநிலத்திற்கு அத்திட்டத்தைக் கொண்டு செல்லுவது கடும் கண்டனத்திற்குரியதாகும். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் என்ற பெயர்ப் பலகையிலிருந்து நெய்வேலி என்ற பெயரையும் நீக்கி தமிழ்நாட்டை அவமதிக்கும் போக்கையும் தொடர்ந்து மத்திய அரசு கடைப்பிடிக்கிறது.
அதேபோல ஜெயங்கொண்டத்திலும் அமைப்பதாகக் கூறப்பட்ட மின்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலைகளை மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டுக் கான திட்டங்களை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இலாபம் கொழிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பி வந்தாலும் அவ்வப்போது அந்த வேலையில் மத்திய அரச ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி.யில் பணியாற்றிட வெளியிலிருந்து பொறி யாளர்கள்,  அதிகாரிகளை தேர்வு செய்யும் போக்கினை நிர்வாகம் மேற்கொண்டு வருவதற்கு இப்பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. வேலை வாய்ப்பின்றி பல்லாயிரக்கணக்கில் பொறியாளர்களும், பட்டதாரிகளும் தமிழ்நாட்டில் இருக்கும்பொழுது, அவர் களைப் புறந்தள்ளி, வெளியிலிருந்து கொண்டுவருவது தமிழ்நாட்டையும், தமிழர்களையும் வஞ்சிக்கக் கூடியதாகும்.
30 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தர மின்றி ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக என்.எல்.சி.யில் பணியாற்றி வருகிறார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும், தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தும், பொதுத்துறை நிறுவனங்கள் மேட்டுக்குடி மனப்பான்மையோடு நடந்துவருவது கண்டிக்கத்தக்கது.
தொழிற்சங்கங்கள் மேலும் வீரியத்துடன் முன்னெ டுத்து இதற்கொரு முடிவைக் காண வேண்டும் என்று இப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.  எய்ம்ஸ் மருத்துவமனை கிளை ஒன்றை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு உறுதி அளித்திருந்தும், அந்த முடிவைக் கைவிட்டு, ஆந்திராவிற்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை விரைவில் துவக்குமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. சேலம் இரும்பாலையைத் தனியார்க்குத் தாரை வார்க்கும் திட்டத்தையும் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 15 (ஆ):
கீழடி அகழ்வாராய்ச்சியைத் தொடருக!
சிவகங்கையையடுத்த கீழடி என்னும் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு திடீரென்று நிறுத்தப் பட்டுள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டன. 293 நகரங்கள் வைகை நதிக்கரையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன. 100 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அகழ்வாராய்ச்சிப் பணி வெறும் 10 சென்ட் அளவில் முடக்கப்பட்டது அதிர்ச்சிக்குரியது.
இந்தியா எங்கும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் இதுவரை 45 மய்யங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு என்றால் பாராமுகம் என்ற மத்திய அரசின் மனப்பான்மைக்கு இப்பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசுக்கு மாநில அரசும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்து தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் சிறப்புகளையும் வெளியில் கொண்டுவர ஆவன செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 16(அ):
சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுக!
தமிழ்நாட்டில் இவ்வாண்டு 57 விழுக்காடு பருவமழை பொய்த்துவிட்டது. அதிகரித்து வரும் வாகனங்களாலும், பிளாஸ்டிக் போன்ற பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாலும், காற்று மாசுபடுவதாலும், ஆற்று மணல் சுரண்டப்படுவதாலும், புவி வெப்பம் அதிகரித்து வருவதாலும், மக்கள் மற்றும் உயிர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது.
இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி, மரம் வளர்ப்பு, வாகனங்களின் புகைக் கட்டுப்பாடு, மணல் கொள்ளைத் தடுப்பு, தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டல் தடுப்பு உட்பட பல அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் ஒழுங்குமுறைக்குக் கொண்டு வருதல் உயிர்ப் பிரச்சினை என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது.
தீர்மானம் 16 (ஆ):
பெப்சி, கோக் போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்களின் பொருள்களை விற்பதில்லை என்று தமிழ்நாடு வணிக சங்கங்கள் அறிவித்திருப்பதை இப்பொதுக்குழு வரவேற்கிறது.
நீண்டகாலப் பாதுகாப்பு என்ற பெயரால்  இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி டின்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மீது குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுப்பதோடு, அத்தகு பண்டங்களால் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, இரசாயனக் கலவை மூலம் முட்டைக்கோஸ் உருவாக்கம், இரசாயன முறையில் பழங்களை சீக்கிரம் பழுக்க வைத்தல் என்பவை மூலம் மனித வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்கும் மனிதகுல விரோதிகளை சட்டத்தின் மூலம் கடுமையாக ஒடுக்க ஆவன செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 17 :
அரசியல் பண்பாடு, நனிதக்க நாகரிகம் தழைக்கட்டும்!
தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அண்மைக்கால அறிவிப்புகளும் செயல்முறைகளும் அவரை நாடே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடும் மனிதர்கள் அனைவரும் சமநிலை உடையவர்கள் என்பதே! இந்த நிலையில் காலில் விழும் கலாச்சாரம் என்பது எல்லை கடந்து போய்விட்ட நிலையில், தி.மு.க.வின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில் முதல் அறிவிப்பாக காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம் என்று திட்டவட்டமாக அவர் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.
அதுபோலவே ‘கட் அவுட்' கலாச்சாரம், முகம் சுளிக்கும் அளவுக்கான வெளிச்சம் போடும் விளம்பரப் பதாகைகள், வளைவுகள் தேவையில்லை - தவிர்க்கப்பட வேண்டுமென்றும், அதற்குப் பதிலாகக் கழகச் கொடிகளைக் கம்பீரமாகப் பறக்க விடுங்கள் என்றும், வீண் புகழ்ச்சிப் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்கின்ற அவரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை மட்டுமல்ல; மற்ற அமைப்புகளாலும், தனி மனிதர்களாலும் பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகும்.
மற்றொரு அரசியல் நாகரிகமும் குறிப்பிடத்தக்க தாகும்!
முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததும், அதுபோலவே தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும் மக்களைவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரையும், அமைச்சர்களும் நேரில் சென்று விசாரித்ததும் தமிழகப் பொது வாழ்வில் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
சென்னை காமராசர் கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் பயணித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒதுங்கிச் சென்ற நனிநாகரிகமும் மெச்சத் தகுந்தது என்பதில் அய்யமில்லை. சட்டமன்றத்திலும் வெளியிலும் இத்தகு நயத்தக்க நாகரிகம் பேணப்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும், இதன்மூலம் தமிழ்நாட்டின் மதிப்பும் மரியாதையும் உலக அரங்கில் உயரும் என்பதையும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. காலில் விழும் கலாச்சாரம், ஆடம்பர விளம்பரங்கள் தவிர்ப்பு, திகட்டும் புகழுரைகள் கூடாது என்பதெல்லாம் தி.மு.க. மட்டத்தில் மட்டுமல்லாமல், அதன் தாக்கம் மற்ற மற்ற முகாம்களிலும் எதிரொலிக்கும் - எதிரொலிக்கவும் வேண்டும் என்றும் இப்பொதுக்குழு எதிர்பார்க்கிறது.
  
1.            மேனாள் இந்தியக் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் (வயது 84 - மறைவு - 26.7.2015)
2.            தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா (வயது 68 - மறைவு 5.12.2016)  ஆகியோர் மறைவிற்கு இப் பொதுக்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
3.            சிங்கப்பூர் மேனாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (மறைவு - 22.8.2016)
4.            மேனாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளரும்  பெரியார் பற்றாளருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி (வயது 82 - மறைவு - 10.12.2016)
5.            ஜப்பான் தமிழ் அறிஞர் - நெபோரு கரஷிமா (வயது 82 - மறைவு - 25.11.2015)
6.            அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் இணை வேந்தர் எம்.ஏ.இராமசாமி (வயது 82 - மறைவு 2.12.2015)
7.            மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் என்ற இரா.பெரிய கருப்பன் (வயது 88 - மறைவு 29.12.2015)
8.            முதுபெரும் தமிழ் ஆய்வாளர் ச.வே.சுப்பிர மணியம்          (வயது 87 - மறைவு 12.1.2017)
9.            தமிழறிஞர் சரவணமுறுவல் (மறைவு 6.11.2015)
10.          உரத்தநாடு புலவர் சாமி.திராவிடன்
11.          நாட்டுப்புற இசைக்கலைஞரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் (வயது 78 - மறைவு 19.1.2016)
12.          சமச்சீர் கல்வி விற்பன்னர் பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன் (வயது 84 - மறைவு 14.4.2016)
13.          காந்தியவாதி - மதுவிலக்குக்காக தன் உயிரையே மாய்த்துக்கொண்ட சரவண பெருமாள் (வயது 59 - மறைவு 31.7.2015)
14.          ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போராளி - காந்தியவாதி டேவிட்  (வயது 92 - மறைவு 14.10.2016)
15.          ஈழ தமிழ் விடுதலை அய்க்கிய முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்விணையர் மங்கையர்க்கரசி (மறைவு 9.3.2016)
16.          ஈழத்தமிழ்ப் போராளி அமெரிக்கா - டாக்டர் வின்ஸ் டன் பஞ்சாட்சரம்
17.          யாழ்ப்பாண சமூக ஆர்வலர் காந்தி சச்சிதானந்தம் (மறைவு 31.12.2015)
18.          புதுச்சேரி சமூக ஆர்வலர் சாய்குமாரி (மறைவு 21.9.2015)
19.          கோரா நாத்திக மய்யம் - டாக்டர் இலவணம் (14.8.2015)
20.          இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் (வயது 92 - மறைவு 2.1.2016)
21.          இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், மேனாள் மத்திய இணை அமைச்சருமான இ.அகமது (1.2.2017)
22.          தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் மேனாள் அமைச்சர் சற்குணபாண்டியன் (மறைவு 13.8.2016)
23.          தி.மு.க. மேனாள் அமைச்சரும் சோழ மண்டல தளபதி என்ற பெருமைக்குரியவருமான கோ.சி.மணி (வயது 87 - மறைவு 2.12.2016)
24.          மும்பைப் பெரியார் பெருந்தொண்டர் தி.மு.க. பொறுப்பாளர் த.மு.ஆரியசங்காரன் (வயது 91 - மறைவு 29.1.2016)
25.          தி.மு.க பகுத்தறிவு கலை, இலக்கிய அணி செயலாளர் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் செங்கை சிவம் (வயது 64 - மறைவு 11.11.2015)
26.          சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் அன்புக் குரிய நண்பர் கா.ஜெகவீரபாண்டியன் (வயது 69 - மறைவு 15.10.2016)
27.          விசாலாட்சி நெடுஞ்செழியன் (வயது 93 - மறைவு 14.11.2016)
28.          முதுபெரும் பொதுவுடைமைவாதி திருவைகாவூர் கோ.பிச்சை (வயது 96-8.3.2016)
29.          குடிசை மாற்று வாரிய தலைவர் தஞ்சை தங்கமுத்து (மறைவு 20.7.2015)
30.          பாவலர் இன்குலாப் (வயது 72 - மறைவு 1.12.2016)
31.          கவிஞர் நா. முத்துக்குமார் (மறைவு 14.8.2016)
32.          பத்திரிகையாளர் நாத்திகம் பாலு (வயது 76 - மறைவு 5.10.2015)
33.          கல்வியாளர் லியோ முத்து (மறைவு 10.7.2015)
34.          தொழிலதிபர் மன்னை கதிர்வேல் (மறைவு 17.5.2016)
35.          தமிழ்ச் சான்றோர் பேரவை தோற்றுநர் - மாணவர் நகலகம் அருணாசலம் (வயது 77 - மறைவு 23.5.2016)
36.          மக்கள் கலையரசி மனோரமா (வயது 78 - மறைவு 10.10.2015)
37.          நகைச்சுவை நடிகர் குமரிமுத்து (வயது 77 - மறைவு 1.3.2016)
38.          துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி (மறைவு 6.12.2016)
39.          காஷ்மீரில் பனிப் பொழிவால் மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சுந்தரபாண்டியன், இளவரசன் ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர்களுக்கும், உற்றார் உற வினர்களுக்கும், நண்பர்களுக்கும் இப்பொதுக்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.
40.          காளாஞ்சிமேடு 101 வயது முதிர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முருகையா (மறைவு 14.10.2016)
41.          திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் - பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் (வயது 77 - மறைவு 14.11.2015)
42.          திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் திருத்தணி சண்முகம் (வயது 51 - மறைவு 30.8.2015)
43.          திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் திருவள்ளூர் அமல்ராசு (வயது 43 - மறைவு 22.7.2016)
44.          இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.ச.கருப்பையா (மறைவு 11.9.2016)
45.          பட்டுக்கோட்டை வட்டம் சேதுபாவாசத்திரம் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் - ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி மூ.சுந்தரமூர்த்தி (மறைவு 15.6.2015)
46.          செந்துறை தமிழ் மறவர் வை.பொன்னம்பலனார் அவர்களின் மகள் பேராசிரியர் பொன்.பகுத்தறிவு (மறைவு 29.6.2015)
47.          நெய்வேலி நகர திராவிடர் கழக முன்னாள் செயலாளர் திருவாரூர் எஸ்.நாராயணசாமி (மறைவு 5.7.2015)
48.          கல்லக்குறிச்சி மறைந்த கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் மகள் வழக்குரைஞர் ஜி.எஸ்.செல்வி (வயது 48 - மறைவு 12.7.2015)
49.          சென்னைப் பெரவள்ளூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மு.கோவிந்தன் (வயது 92 - மறைவு 14.7.2015)
50.          செஞ்சி வட்டம் மலையரசன்குப்பம் கழகத் தோழர் ஆறுமுகம் (வயது 43 - மறைவு 22.7.2015)
51.          குடந்தை பெரியார் பெருந்தொண்டர் ஆர்.அன்பாளன் (வயது 82 - மறைவு 22.8.2015)
52.          சேலம் பெரியார் பெருந்தொண்டர் அப்பாயி (வயது 75 - மறைவு 12.9.2015)
53.          அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் ஓட்டுநர் ஏழுமலை (மறைவு 1.9.2015)
54.          சிவகங்கை மாவட்டம் சின்னப்பிச்சைப் பிள்ளைக் கிராமம் திருபுவனம் ஒன்றிய பெரியார் பெருந்தொண்டர் துரை.கதிரவன் (வயது 82 - மறைவு 20.9.2015)
55.          தேவக்கோட்டை பகுத்தறிவாளர் கமலம் செல்லதுரை (வயது 80 - மறைவு 26.9.2015)
56.          சேலம் ஆத்தூர் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்த அமுதா வெங்கடாசலம் (வயது 80 - மறைவு 6.10.2015)
57.          சென்னை பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம் (மறைவு 2.10.2015)
58.          தாராபுரம் நகர திராவிடர் கழகத் தலைவர் தி.நாகசுந்தரம் (மறைவு 6.10.2015)
59.          லால்குடி வட்டம் புள்ளம்பாடி கழகச் செயலாளர் துரைசாமி (வயது 52 - மறைவு 11.10.2015)
60.          சேலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.எஸ்.அழகரசு (வயது 86 - மறைவு 18.10.2015)
61.          விருத்தாசலம் பெரியார் பெருந்தொண்டர் இரா.செழியன் (வயது 73 - மறைவு 5.11.2015)
62.          விழுப்புரம் மாவட்டம் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் அனந்தபுரம் குருசாமி (வயது 92 - மறைவு 20.11.2015)
63.          சீர்காழி நகர திராவிடர் கழக முன்னாள் தலைவர் நடராசன் (வயது 90 - மறைவு 24.11.2015)
64.          ஆலந்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செ.இராமச்சந்திரன் (வயது 94 - மறைவு 29.11.2015)
65.          லால்குடி வட்டம் மேலவாலாடி பெரியார் பெருந்தொண்டர் திருவோணம் (வயது 80 - மறைவு 1.12.2015)
66.          திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் ஆ.பெரியசாமி (மறைவு 4.12.2015)
67.          திருச்சி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் சோமாக்குடி பிச்சையப்பா (வயது 74 - மறைவு 10.12.2015)
68.          விருகம்பாக்கம் திராவிடர் கழக தலைவர் பழனிச்செல்வம் (வயது 76 - மறைவு 26.12.2015)
69.          சிதம்பரம் வட்டம் ஓடாக்கநல்லூர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் க.கருணானந்தம் (வயது 95 - மறைவு 26.12.2015)
70.          லால்குடி ஒன்றியம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மணக்கால் பேச்சுமுத்து (வயது 82 - மறைவு 31.12.2015)
71.          ஜெயங்கொண்டம் உட்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சிங்காரமாணிக்கம்   (வயது 72 - மறைவு 2.12.2016)
72.          கரூர் - கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டளை ஊர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் முத்து (வயது 80 - மறைவு 5.1.2016)
73.          திருக்கோயிலூர் வட்டம் மணலூர்ப்பேட்டை ஜம்பை கிளைக்கழகத் தலைவர் அருணகிரி (மறைவு 6.1.2016)
74.          கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குளித்தலை ஒன்றியக் கழக செயலாளர் - இலுங்கூர் விஜயலிங்கம் (வயது 68 - மறைவு 8.1.2016)
75.          தேனி மாவட்டம் கோம்பை  பெரியார் பெருந் தொண்டர் ஆர்.டி.சாமிநாதன் (வயது 78 - மறைவு 21.1.2016)
76.          திருவத்திபுரம் நகர திராவிடர் கழக தலைவர் டி.பி.திருச்சிற்றம்பலம் (வயது 84 - மறைவு 1.2.2016)
77.          எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான மறைந்த தருமராசன் அவர்களின் இணையரும், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீர சேகரன் அவர்களின் அன்னையாரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மணியம்மையார். (வயது 84 - மறைவு 5.2.2016)
78.          கரூர் வெங்கமேடு பெரியார் பெருந்தொண்டர் இரா.தியாகராஜன். (வயது 77 - மறைவு 10.3.2016)
79.          சேலம் ஆத்தூர் பெரியார் பெருந்தொண்டர் டி.எம்.தாண்டவராயன்.      (மறைவு 18.2.2016)
80.          பெரம்பலூர் பெரியார் பெருந்தொண்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி.                 (மறைவு 24.2.2016)
81.          திண்டுக்கல் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பி.வி.ஆர்.செயராமன். (வயது 68 - மறைவு 25.3.2016)
82.          உளுந்தூர்பேட்டை கழக செயலாளர் க.சந்திர சேகரன். (மறைவு 26.3.2016)
83.          திருவள்ளூர் மாவட்டம் நல்லிச்சேரி பெரியார் பெருந்தொண்டர் பி.பொன்னுசாமி (வயது 78 - மறைவு 23.3.2016)
84.          கும்மிடிப்பூண்டி வட்டம் மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சண்முகசாமி (வயது 78 - மறைவு 4.4.2016)
85.          சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றிய முன்னாள் கழக செயலாளர் இராமலிங்கம் (மறைவு 17.4.2016)
86.          திருப்பத்தூர் வட்டம் கந்திலி ஒன்றிய கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அ.வையாபுரி. (மறைவு 17.4.2016)
87.          உரத்தநாடு பெரியார் பெருந்தொண்டர் புலவர் அன்பரசு (வயது 83 - மறைவு 21.4.2016)
88.          ஜோலார்ப்பேட்டை சுயமரியாதைச் சுடரொளி கே.கே.மணி அவர்களின் வாழ்விணையரும் கழகப் போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டவருமான கிருஷ்ணவேணி. (வயது 80 - மறைவு 24.4.2016)
89.          கழக பொதுக்குழு உறுப்பினர் நாமக்கல் காசி (மறைவு 30.4.2016)
90.          அந்தியூர் கழகத் தோழர் ஜூலியஸ் (வயது 51 - மறைவு 10.5.2016)
91.          திருச்சி மாவட்டம் - கள்ளிக்குடி கழகத் தலைவர் தி.தையல் என்ற நாத்திகன் (வயது 87 - மறைவு 24.5.2016)
92.          ஒட்டன்சத்திரம் முதுபெரும் சுயமரியாதை வீரர் - கல்வியாளர் நாச்சிமுத்து (வயது 93 - மறைவு 21.10.2016)
93.          லால்குடி ஒன்றிய நன்னிமங்கலம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எம்.கே.கனகராசு (வயது 82 - மறைவு 31.5.2016)
94.          குடந்தை வழக்கறிஞர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் (வயது 74 - மறைவு 1.6.2016)
95.          நீலகிரி மாவட்டம் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லி (மறைவு 1.6.2016)
96.          கன்னட மொழியில் தந்தை பெரியார் நூல்களை மொழிபெயர்த்த பெங்களூர் பெரியார் பெருந்தொண்டர் வேமன்னா என்னும் வி.சி.வேலாயுதம். (வயது 89 - மறைவு 8.6.2016)
97.          திருவாரூர் மாவட்டம் அன்னவாசல் கழகத் தோழர் அம்பேத்கர் (மறைவு 10.6.2016)
98.          திருவையாறு ஒன்றியம் கண்டிகை பெரியார் பெருந்தொண்டர் அற்புதம்       (வயது 83 - மறைவு 16.6.2016)
99.          திருச்சி மாநகர முன்னாள் செயலாளர் கி.துரைராசு (வயது 47 - மறைவு 19.6.2016)
100.        தஞ்சை செங்கிப்பட்டியைச் சேர்ந்த காதாபட்டி - பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை அய்யாசாமி (மறைவு 27.6.2016)
101.        இயக்க நூல்கள் விற்பனையாளர் காஞ்சிபுரம் முத்தரசன் (மறைவு 30.6.2016)
102.        குறிஞ்சிப்பாடி முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் அ. மஜித் (வயது 95 - மறைவு 22.7.2016)
103.        கருநாடக மாநில கழக செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.பிரேம்குமார் (வயது 75 - மறைவு 24.7.2016)
104.        மதுக்கூர் ஒன்றிய நெம்மேலி பெரியார் பெருந் தொண்டர் பெ.உத்திராபதி (மறைவு 27.7.2016)
105.        அரியலூர் பெரியார் பெருந்தொண்டர் புலவர் சி.தமிழ்மணி (மறைவு 1.8.2016)
106.        நாமக்கல் வட்டம் கபிலர்மலை ஒன்றிய கழக தலைவர் பொத்தனூர் முத்துசாமி என்ற சத்தியசீலன் (வயது 85 - மறைவு 6.8.2016)
107.        அந்தணர்ப்பேட்டை ஏ.ஜி.கஸ்தூரி ரெங்கன் (மறைவு 10.8.2016)
108.        நன்னிலம் பெரியார் பெருந்தொண்டர் இரணியன் (மறைவு 10.8.2016)
109.        திருக்கோயிலூர் வட்டம் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.தமிழ்மணி (மறைவு - 10.8.2016)
110.        அம்பத்தூர் - குப்பம் - பெரியார் பெருந்தொண்டார் தே.முத்து. (மறைவு 11.8.2016)
111.        நாகூர் சி.பெரியார் செல்வன் (வயது 58 - மறைவு 20.8.2016)
112.        தூத்துக்குடி பெரியார் பெருந்தொண்டர் மும்பை சி.நவநீதகிருட்டிணன் (வயது 87 - மறைவு 21.8.2016)
113.        கோவை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கணபதி ராமசாமி (வயது 90 - மறைவு 28.8.2016)
114.        சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் கழகத் தலைவர் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் கே.சி.கந்தசாமி சாலை விபத்தில் மரணம் (வயது 75 - மறைவு 7.9.2016)
115.        திருச்சி பொன்மலை கழகத் தலைவர் மு.இராமச் சந்திரன் (வயது 70 - மறைவு 19.9.2016)
116.        பெரியார் பெருந்தொண்டர் கீழ்வேளூர் ஆசிரியர் இராமதாசு (வயது 85 - மறைவு 26.9.2016)
117.        இராயத்தநல்லூர் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் முத்துசாமி (மறைவு 26.9.2016)
118.        ஊற்றங்கரை முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சி.சுவாமிநாதன் (வயது 84 - மறைவு 24.9.2016)
119.        பெரியார் பெருந்தொண்டர் வாழப்பாடி வட்டம் பெருமாள்பாளையம் அ.சுப்பிரமணி (மறைவு 24.10.2016)
120.        கும்பகோணம் வட்டம் கோவிந்தகுடி ஆசிரியர் மாசிலாமணி (வயது 87 - மறைவு 10.11.2016)
121.        மயிலாடுதுறை வட்டம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மாதிரிமங்கலம் பி.கலியபெருமாள் (வயது 85 - மறைவு 7.11.2016)
122.        வேலூர் - திருப்பத்தூர் வட்டம் பூங்காவனம் பெரியார் பெருந்தொண்டர் வெ.இராகவன் (வயது 96 - மறைவு 3.3.2016)
123.        சோலை பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாசலம் (வயது 90 - மறைவு 11.3.2016)
124.        செயங்கொண்டம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கழக வீராங்கனை ராமஜெயம் (வயது 72 - மறைவு 18.4.2016)
125.        திருவண்ணாமலை தண்டராம்பட்டு பெரியார் பெருந்தொண்டர் பா.சீ.இராமச்சந்திரன் (மறைவு 20.4.2016)
126.        குறிஞ்சிப்பாடி திராவிடர் கழக மகளிர் அணி அமைப்பாளர் சர்வேஸ்வரி அம்மாள் (மறைவு 8.8.2016)
127.        அறந்தாங்கி வட்டம் கீரமங்கலம் அடுத்த பனங்குடி முதுபெரும் பெரியார் பெருந்தலைவர் தனபாலன் (வயது 85 - மறைவு 21.9.2016)
128.        குமரி மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் திங்கள் சந்தை ம.ப.நூர்தீன் (மறைவு 25.10.2016)
129.        புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் - என். பாளையம் கிளைக் கழகத் தலைவர் அ.ஏழுமலை (மறைவு 13.11.2016)
130.        கூடுவாஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் கே.காளிமுத்து (மறைவு 10.11.2016)
131.        தர்மபுரி அரூர் பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.வெங்கடாசலம் (மறைவு 6.12.2016)
132.        மயிலாடுதுறை புத்தகரம் முதுபெரும் பெருந் தொண்டர் நாகரத்தினம் (வயது 88 - மறைவு 11.12.2016)
133.        குடியாத்தம் நகர கழக செயலாளர் க.த.சந்திரன் (மறைவு 12.12.2016)
134.        கோவை மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் துரை.நாச்சியப்பன்                 (அமெரிக்காவில் மரணம் - 13.12.2016)
135.        நீடாமங்கலம் அடுத்த ராயபுரம் பெரியார் பெருந் தொண்டர் ப.ஆறுமுகம் (வயது 74 - மறைவு 14.12.2016)
136.        செய்யாறு கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் பெ.சத்தியமூர்த்தி (வயது 37 - மறைவு 13.12.2016)
137.        குமாரமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கே.பி.குழந்தை (மறைவு 27.12.2016)
138.        திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அ.ராஜாராம் (வயது 96 - மறைவு 31.12.2016)
139.        திண்டிவனம் - தழுதாளி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சண்முகம் (வயது 88 - மறைவு 6.1.2017)
140.        திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றிய கழக தலைவர் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் கொண்டன் (வயது 76 - மறைவு 6.1.2017)
141.        இயக்க மூதாட்டி குடந்தை சரசு பழனி (வயது 87 - மறைவு 11.1.2017)
142.        செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் எஸ்.பி.துரைராஜன் (வயது 84 - மறைவு 9.1.2017)
143.        சேலம் ஆத்தூர் மேனாள் கழக மாவட்டத் தலைவர் கொமுரு  (வயது 78 - மறைவு 14.1.2017)
144.        கரூர் பெரியார் நகர் பெரியார் பெருந்தொண்டர் கோ.முத்துவீரன் (வயது 75 - மறைவு 18.1.2017)
145.        சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் உ.துரைசாமி (வயது 75 - மறைவு 18.1.2017)
146.        மன்னார்குடி சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஜி.கோபால் (வயது 93 - மறைவு 23.1.2017)
147.        கழகப் பொதுக்குழு உறுப்பினர் புலவஞ்சி இராமய் யன் (மறைவு 28.1.2017)
148.        பட்டுக்கோட்டை வட்டம் பெருமாள்கோயில் கோவிந்தராசு
149. பொள்ளாச்சி ஆசிரியர் நடராசன் (மறைவு 3.2.2017)
150. திருவையாறு ஒன்றிய கழக துணைத் தலைவர் பெரம்பூர் குணசேகரன் (மறைவு 3.2.2017)
151. திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் ஆசிரியர் சீனிவாசன் (மறைவு 14.1.2017
ஆகிய திராவிடர் கழகத் தொண்டறச் செம்மல்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் ஆறுதலைக் கூறி, அப்பெருமக்களின் விலைமதிக்க முடியாத தியாகத்துக்கும், தொண்டுக்கும் இப்பொதுக்குழு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது
உடற்கொடை அளித்த பெருமக்கள்
1.            தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் பெருந் தொண்டர் எம்.பி.வெங்கடாசலம் (மறைவு 6.12.2016 - தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை)
2.            குடியாத்தம் நகர திராவிடர் கழக செயலாளர் க.சு.சந்திரன் (மறைவு 12.12.2011 - உடற்கொடை, கண்கொடை)
3.            நீடாமங்கலம் - ராயபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஆறுமுகம் (வயது 74 - மறைவு 14.12.2016) உடற்கொடை: திருச்சி கி.ஆ.பெ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
4.            ஓசூர் கழகத் தோழர் இளையபெருமாள் அன்னை யார் தனம் (மறைவு 9.12.2016) (உடற்கொடை ஆந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைப்பு)
5.            பட்டுக்கோட்டை வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி மூ.சுந்தரமூர்த்தி - மறைவு 15.6.2015 (தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைப்பு)
6.            ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் இரா.இராமகிருட்டிணன் அவர்களின் வாழ்விணையர் சரோஜா (வயது 68 - மறைவு 18.6.2015 புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பு - 18.6.2015)
7.            கோரா - நாத்திக மய்யம் லவணம்  (மறைவு 14-8-2015)  (விஜயவாடா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை)
8.            சென்னை அம்பத்தூர் ஒரகடம் ஓட்டுநர் ஏழுமலை உடற்கொடை - போரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (19.9.2015)
9.            விருத்தாச்சலம் பெரியார் பெருந்தொண்டர் இரா.செழியன் (வயது 73 - மறைவு  5.11.2015)
10.          வேலூர் மகளிர் பாசறைத் தலைவர் ந.தேன்மொழி அவர்கள் மாமனார் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இர.அன்பரசன் தந்தையார் ந.இரத்தினம் (உடற்கொடை சி.எம்.சி.மருத்துவமனை, வேலூர்)
11.          திருச்சி கல்லுக்குடி தி.தையல் என்ற நாத்திகன் (வயது 87 - மறைவு 24.5.2016) (உடற்கொடை: திருச்சி கி.ஆ.பெ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை)
12.          திருச்சி பொன்மலைக் கழகத் தலைவர் மு.இராமச் சந்திரன்.     (வயது 70 - மறைவு 19.9.2016) (உடற்கொடை: திருச்சி கி.ஆ.பெ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை)
13.          கோவை - தேன்மொழி அவர்களி தந்தையார் பெரி யார் பெருந்தொண்டர் வெங்கடாசலம்  (வயது 90 - மறைவு 11.3.2016) (உடற்கொடை: கோவை அரசு மருத்துவமனை)
14.          குறிஞ்சிப்பாடி கழக மகளிர் அணி அமைப்பாளர் சர்வேஸ்வரி அம்மாள். (உடற்கொடை: புதுச்சேரி வெங்க டேஸ்வரா மருத்துவமனை)
15.          தஞ்சாவூர் நகர திராவிடர் கழக அமைப்பாளர் வெ. இரவிக்குமார் அவர்களின் அன்னையார் வி.எஸ்.சரோஜினி அம்மையார்  (மறைவு 25.1.2017) (உடற்கொடை: தஞ்சை மருத் துவக் கல்லூரி மருத்துவமனை 27.1.2017)
தமது மறைவிற்குப் பிறகும் தமது உடல் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார் தொண்டறத்தைப் பேணிய பெருமக்களுக்கும், அவர் களுக்குத் துணை நின்ற குடும்பத்தினருக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. கருஞ்சட்டைக் குடும்பத்தினரும் இவ்வழியைப் பின்பற்றிட இது ஊக்கம் அளிக்கிறது என்பதையும் இப்பொதுக்குழு தெரி வித்துக்கொள்கிறது.
-விடுதலை,4.2.17
-விடுதலை,6.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக