சனி, 15 அக்டோபர், 2016

சென்னை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் -6.10.16


6.10.16 மாலை 6.30 மணி அளவில் சென்னை பெரியார் மையம், எம்.ஆர்.இராதா மன்றத்தில் சென்னை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று கருத்துரையாற்றினார்.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராசு அவர்கள் முன்னிலையேற்று கருத்துரையாற்றினார்..தென் சென்னை மாவட்டத் துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படவுள்ள ''மருத்துவ வசதி பயண ஊர்தி''க்காக தனது முதல் கட்ட நன்கொடையாக ரூ1000/- வழங்கினார்.

கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக