மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து
தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றப்படட்டும்!
தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றப்படட்டும்!
எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்
இல்லை என்றால் மக்கள் மன்றத்திலே தீர்மானிக்கப்படும்!
இல்லை என்றால் மக்கள் மன்றத்திலே தீர்மானிக்கப்படும்!
புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பிரகடனம்
சென்னை, ஆக.8 மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் - இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் - அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவர்: புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையினுடைய தேசியக் கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடு என்ற ஆவணத்திலே குறிப்பிடப்பட்டு இருப்பதுபோல இதில் யாரையும் கலந்து உருவாக்கவில்லை. தெளிவாகவே அதைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்னார். அய்ந்துபேர் கொண்ட குழுவிலே ஒரே ஒரு கல்வியாளர், அதுவும் ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் எனவே, இது ஓர் ஆர்.எஸ்.எஸ்-. கல்வித் திட்டமே!
ஆர்.எஸ்.எஸ்சினுடைய கல்வித் திட்டம் பன்மதங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருக்கிற இந்த நாட்டில் என் மதம் மட்டுமே ஆளவேண்டும், என் மொழி சமஸ்கிருதம் மட்டுமே பொதுமொழியாக இருக்க வேண்டும், என் கலாச்சாரம் பார்ப்பனீய, சமஸ்கிருத கலாச்சாரமே இருக்க வேண்டும் என்று சொல்வற்கு அடையாளமாகத்தான் இங்கேயே அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டத்திலே எட்டாவது அட்ட வணையிலே 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த 22 மொழிகளிலே மக்கள் மத்தியிலே பேசப் படாமல் இருக்கக்கூடிய ஒரே செத்த மொழி சமஸ் கிருதம்தான். ஆனால் அந்த சமஸ்கிருதத்தையே முன்னிலைப்படுத்தக்கூடிய அளவிற்கு இந்த கல்வித் திட்டத்தில் இருக்கிறதென்பதற்கு இரண்டு அடையாளங்கள் இருக்கின்றன.
இந்திய பண்பாடு உள்ளூர் மரபாம்!
அதாவது தெளிவாக கல்வியும், மொழியும் பண்பாடும் (Language, Culture and Education) என்று இருப்பதிலே அவர்கள் சொல்லுகிறார்கள். இந்திய பண்பாடு, உள்ளூர் மரபு வழி அறிவு ஆகியவற்றில் பள்ளிக்கல்வியில் போதிய இடமளிக்கப்படும் என்று சொல்லிவிட்டு அடுத்தபடியாக சொல்கிறார்கள்.
இந்திய மொழியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக்கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும்.
பொருளாதாரப் புதுக்கரடி
இதுதான் இந்தக் கல்விக்கொள்கையினுடைய மிக முக்கியமான நோக்கம். பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில், பல்கலைக்கழக நிலையில் அம்மொழியை கற்பிப்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் செய்யப்படும். ஆகவே, மற்ற 21 மொழிகளுக்கு செம்மொழி தமிழ் உள்பட வாய்ப்புகள் கிடையாது. அவற்றுக்கு பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - இது ஒன்று. இரண்டாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று ஒரு புதுக்கரடியை விட்டிருக்கிறார்கள். இதுவரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு என்று எங்கும் கிடையாது. அதைவிட சமூகநீதிக்கு இதிலே இடமில்லை. சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் குறிவைத்து, அவர்களுக்கும் பொருளாதார பின்தங்கிய அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இரண்டு வகையான பிரிவு எஸ்.எஸ்.எல்.சி.யிலே ஆங்கிலம், கணிதம் அறிவியல் இதிலே அதிக மதிப்பெண் பெற்றால் ‘ஏ’ பிரிவு சரியாக படிக்காவிட்டால் அவர்கள் ÔபிÕ பிரிவுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வியிலே ஒரு நவீன வருணாசிரம தர்மத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஊர்ப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுடைய திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. ஆகவே, பள்ளிக்கூட நேரத்துக்குப்பின்னாலே தொழில் அடிப்படையில் படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு, ஊர்ப்புற கிராமப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என்றால் என்ன அர்த்தம்? அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்று அர்த்தம். ஆகவே, இந்த வாய்ப்புகள், இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்: சட்டமன்றத்திலே இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், ஒரு வார காலமாகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அரசுக்கு நீங்கள் விடுக்கின்ற கோரிக்கை என்ன?
தமிழர் தலைவர்: தமிழக சட்டமன்றத்திலே கல்வி மான்யம் வருகிறது. ஏனென்றால், மாநில உரிமை பறிபோகிறது இதிலே. அண்ணாவுடைய இருமொழிக் கொள்கைத் திட்டத்தையும், இவர்கள் கேலி செய்யக்கூடிய மாதிரி, மறைமுகமான மும்மொழித் திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
எனவே, இந்த அரசுக்கும் ஆதரவாகவே இந்தப் போராட்டம். எனவே, அரசு செய்ய வேண்டிய பணி இது. எனவே, ஒட்டு மொத்தமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால், அது ஏக மனதாக நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சித் தலைவருடைய அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுவரலாம். இல்லையென்றால், அவர்களே (ஆளுங்கட்சியினரே) தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும்.
இந்த இரண்டையும் ஏற்கமாட்டோம் என்றால், அதை அத்தனைக் கட்சிகளும் சேர்ந்து தமிழகத்தில் தமிழ்நாடு முழுக்க மக்கள் மன்றத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்தப் போராட்டம் ஒரு துவக்கம். முடிவல்ல.
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறி£னர்.

மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
சென்னை - வள்ளுவர்கோட்டம் அருகில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் (8.8.2016)
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தளபதி மு.க. ஸ்டாலின் போர் முழக்கம்!
சென்னை, ஆக.8- மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கை என்ற குலக் கல்வியை எதிர்த்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்டால் 1939ஆம் ஆண்டில், 1965ஆம் ஆண்டிலும் தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய போராட்டம் மீண்டும் வெடித்துக் கிளம்பும் என்று போர் முரசு கொட்டினார், திமுக பொருளாளரும், தமிழக சட்டப் பேரவை எதிர் கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின்!
இன்று (8.8.2016) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்க்கக் கூடிய வகையில், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தப் போராட்டத்தினுடைய தலைவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
அன்பிற்குரிய அண்ணன் சுப.வீ. அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன் னோடிகளே, திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளே, விடுதலை சிறுத்தை கட்சியைச் சார்ந்த நண்பர்களே,
சட்டமன்ற உறுப்பினர்களே, திராவிட முன் னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களே,
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக வருகை தந்திருக்கக்கூடிய பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
தாய் வீட்டார் நடத்தக்கூடிய போராட்டம்
தாய் வீட்டார் நடத்தக்கூடிய போராட்டம் - இந்தப் போராட்டம். திருமணமான பெண் பிறந்த வீட்டிற்கு வருகிற போது, எந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு வருவாளோ, அதே உணர்ச்சியோடு, அதே பெருமையோடு திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் எல்லாம் இந்தப் பேரா£ட்டத்தில் பங்கேற்க வந்திருக்கின்றோம்.
பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை என்பதைத் தொடர்ந்து நமக்கு ஊட்டிவரக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆணையினை ஏற்று இந்தப் போராட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாமும் பங்கேற்க வந்திருக்கின்றோம்.
சமூகநீதிக்கு சவால் வருகிறபொழுதெல்லாம் சங்கநாதம் எழுப்புக்கூடிய இயக்கம்தான் திராவிடர் கழகம் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
நோய் வந்தால், மருத்துவரை நாடிச் செல்கிறோம். தாவாவைத் தீர்க்கவேண்டும் என்று சொன்னால், வழக்குரைஞர் களை தேடி அவர்கள் நாடிச் செல்வார்கள்.
ஆனால், நோயைப் போக்க, வழக்குரைஞர்களைத் தேடி யாரும் செல்லக்கூடாது; செல்லவும் மாட்டார்கள்.
தாவாவைத் தீர்க்க மருத்துவர்களைத் தேடி எந்த முட்டாளும் போகமாட்டார்கள்.
மத்திய அரசு ஒரு ஆபத்தான புதிய கல்விக் கொள்கையை வகுக்க திட்டமிட்டிருக்கிறது
தாவாவைத் தீர்க்க மருத்துவர்களைத் தேடி எந்த முட்டாளும் போகமாட்டார்கள்.
மத்திய அரசு ஒரு ஆபத்தான புதிய கல்விக் கொள்கையை வகுக்க திட்டமிட்டிருக்கிறது
ஆனால், இன்றைக்கு நிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கு ஒரு கொடுமையான நிலையில் சிக்கி, ஒரு கொடுமையான ஒரு கல்விக் கொள்கையைப் புகுத்தக் கூடிய நிலையில் மத்திய அரசு இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறது.
ஆகவே, அதனை எதிர்க்கக்கூடிய வகையில்தான், திராவிடர் கழகம், அதனுடைய தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்று தலைமையேற்று, இந்தப் போராட்டத்தை நடத்த முன்வந்திருக்கிறார். ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிடர் கழகமும். இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதற்கு எத்தனையோ சாட்சிகள், உதாரணங்கள், சான்றுகள் உண்டு.
அந்த அடிப்படையில்தான் இந்தப் போராட்டமும் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு ஒரு ஆபத்தான புதிய கல்விக் கொள்கையை வகுக்க திட்டமிட்டிருக்கிறது.
அப்படி திட்டமிட்டிருக்கக்கூடிய அந்தக் கொள்கையில், அதனுடைய வரைவாக, அந்த வரைவினுடைய முகப்பில் பிரியாம்பிள் என்று சொல்லக்கூடிய அந்த அடிப்படையில், இரண்டாவது வரியாக அதில் குறிப்பிட்டிருப்பது,
அதாவது, பலருடைய பண்டைய இந்தியாவில் முதன்முதலில் வேதத்தின் அடிப்படையில்தான் கல்வி முறை இருந்தது. அதனைத் தொடர்ந்து நான்காவது வரியாக அவர்கள் சொல்வது,
அதாவது குருக்கள் முறை - குருவுக்கும், சிஷ்யருக்கும் இடையேதான் உறவை வளர்ப்பது. ஆக, இதைத்தான் நாம் இன்றைக்கு எதிர்க்க முற்பட்டிருக்கிறோம்.
1968 இல் புதிய கல்விக் கொள்கை!
இந்தியாவில் முதன்முதலில் 1968 இல் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கல்வி அறிக்கை உருவாக்கப்பட்டது.
கோத்தாரி தலைமையில் அந்தக் குழு உருவானது. அதன்பிறகு, 1986 இல் கல்விக் கொள்கை வெளியானது. 1992 இல் சில திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்றைக்கு மோடி அவர்கள் தலைமையில் இருக்கக்கூடிய பி.ஜே.பி.யினுடைய மத்திய ஆட்சி சமூகநீதி, மதச்சார்பின்மை, தமிழ்மொழி - அனைத்திற்கும் சவால்விடக் கூடிய வகையில், இந்தப் புதிய கல்விக் கொள்கையை புகுத்துகின்ற முயற்சியில் ஈடுட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை இந்தப் போராட்டத்தின்மூலமாக நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இங்கே அண்ணன் சுப.வீ. அவர்கள்குறிப்பிட்டுச் சொன்னார்கள், 5 பேர் கொண்ட ஒரு கமிட்டி - மதிப்பிற்குரிய டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் அமைந்த அந்தக் குழு,
கல்வியாளரான ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர்
அந்தக் குழுவில் ஒருவரைத்தவிர மற்ற நான்கு பேரும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள். அவர்கள் இப்பொழுது பணியாற்றுகின்ற அய்.ஏ.ஏஸ். அதிகாரிகளா? என்றால், அதுவும் கிடையாது. ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள்.
அதிலும் ஒரே ஒரு கல்வியாளர் யார் என்று சொன்னால், அந்தக் கல்வியாளர் யார் என்று கேட்டால், அவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்தக் கமிட்டியில் கல்வியாளர்கள் இல்லை, ஆசிரியர்களுடைய பிரதிநிதிகள் இல்லை. மாணவர்களுடைய பிரதிநிதிகள் யாரும் இந்தக் கமிட்டியில் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை!
யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்று சொன்னால், அவர்கள் ஒரு செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாவட்டங்கள் அனைத்து மட்டத்திலும் கருத்துகள் கேட்கப்பட்டிருப்பதாக, ஒரு அபாண்டமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. யாரிடமும் கேட்கவில்லை. எந்தப் பயனும் விளையவில்லை.
மக்களிடத்தில் சென்று அவர்களுடைய கருத்துகளைக் கேட்டார்களா? என்றால், அதுவும் கிடையாது.
மக்களிடத்தில் சென்று அவர்களுடைய கருத்துகளைக் கேட்டார்களா? என்றால், அதுவும் கிடையாது.
ஆகவே, இந்திய அரசியல் சட்டத்திற்கு பன்முகத் தன்மையான ஒரு ஆபத்து - சமூகநீதிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக, ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள்’ என்பதுபோல, இந்த நிலை - இன்றைய நிலை உருவாகியிருக்கிறது. நான் இன்னொன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தியாவைப் பொருத்தவரையில் பல மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல்வகை பண்பாடுகள் நிறைந்திருக்கக்கூடிய நாடு நம்முடைய இந்தியத் திருநாடு.
காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான கல்விக் கொள்கை பொருந்தி வருமா? நிச்சயமாக வராது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்களும், வேட்டி - சட்டைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? முடியவே முடியாது.
அதேபோன்று இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களில் உள்ளவரும் ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிடவேண்டும் என்று அவர்களை வற்புறுத்த முடியுமா? கட்டாயப்படுத்த முடியுமா? அதற்காக ஒரு சட்டம் கொண்டுவர முடியுமா?
அரிசி சோறுதான் எல்லா மாநிலங்களிலும் உள்ளவர்கள் சாப்பிடவேண்டும் என்றால் அதனை யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
நாம் அதைத்தான் இந்தப் போராட்டத்தின் மூலமாக உங்களுக்கெல்லாம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆகவே, இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை நிச்சயமாக நிறைவேற்ற முடியுமா? என்று கேட்டால், நிச்சயமாக முடியாது.
நான் இன்னொரு செய்தியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
விடுதலை நாளிதழில் வெளிவந்த ஒரு மாணவியின் கடிதம்!
கடந்த 5 ஆம் தேதி, நம்முடைய ‘விடுதலை’ ஏட்டில் ஒரு கடிதம் வந்தது. சென்னை சாந்தோம் பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மாணவியின் பெயர் தங்கமணி, அந்த மாணவி கடிதம் எழுதி, அது விடுதலை ஏட்டில் வெளிவந்திருக்கிறது.
அந்தக் கடிதம் வருமாறு:
மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு, ஆர்.எஸ்.எஸின் பேச்சைக் கேட்டு நாட்டை எவ்வளவு சீரழிக்க முடியுமோ, அவ்வளவு சீரழித்துவிட்டது. ஆனால் தற்பொழுது தன்னுடைய எல்லையை மீறி மாணவர்களின் கல்வியிலும் கை வைத்து விட்டது. கடந்த ஜீன் 30 ஆம் நாள் “தேசிய கல்விக் கொள்கை வரைவு, 2016” என்ற வரைவு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதே தவிர தமிழில் தரப்படவில்லை. எனினும், ஜூலை 30-க்குள் நம்முடைய பதிலை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமாம் (ஆகஸ்டு 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது), இதற்கென டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் ஒரு அய்வர் குழுவை அமைத்தது. இக்குழுவில் ஒரே ஒருவர் தான் கல்வியாளர். அவரும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர். அவர்கள் 217 பக்கமுள்ள அறிக்கையை சுருக்கமாக 43 பக்கங்களில் இவ்வரைவை வெளியிட்டனர். அவர்களின் இக்கொள்கையைப் பார்த்தால் எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி கற்பார்களா என் அச்சம் எழுகிறது.
அக்கொள்கையைப் பற்றி நாம் இப்போது காண்போம்....
அக்கொள்கையைப் பற்றி நாம் இப்போது காண்போம்....
பார்ப்பனீய வேதக்கல்வியையும், குருகுலக்கல்வி முறையையும் இலட்சியக் கல்வியாக முன்னிறுத்துகிறது. பள்ளிகளை அருகிலுள்ள ஆசிரமங்களுடன் தொடர்புபடுத்த முயல்கிறது. அடிப்படையில் இத்தகைய கல்விமுறை சாதி அடிப்படையிலான வருணாசிரம தர்மத்தின் வழிப்பட்டது. ஒரு மேல் ஜாதிக் குருவை மய்யமாகக் கொண்டு சுழல்வது - கேள்விகளுக்கும் ஆய்வுகளுக்கும் இடமில்லை. நூலகங்கள், ஆய்வகங்கள் குருகுலத்திற்கு அப்பாற்பட்டவை. அறிவு வளர்ச்சியிலும் புதிய கண்டு பிடிப்புகளிலும் அக்கறை கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது.
தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஸ்கிருதம் சிறப்புப் பங்காற்றியுள்ள தென இக்கொள்கை குறிப்பிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது. சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி. தமிழுக்கு சமஸ்கிருதத்துடன் ஒரு ஒட்டும் இல்லை, உறவுமில்லை. இவ்வுண்மையை இக்கொள்கை இருட்டடிப்பு செய்கிறது. இக்கொள்கை நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லவே உதவும். இதனை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஏற்க இயலாது.
இக்கல்வி கொள்கை யோகாவைக் கட்டாயப்படுத்துகிறது. ‘யோகா’ பாடத்தைப் பள்ளி அங்கீகாரத்தின் நிபந்த னையாக்குகிறது. அதன் முன்னுரையில் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகிறார்.
இக்கல்வி கொள்கை, பத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டாகத் தரம் பிரிக்க முயல்கிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் இவற்றில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை உயர்கல்விக்குரியவர்கள் எனவும், பின் தங்கும் மாணவர்களை தொழிற்கல்விக்குரியவர்கள் எனவும் வேறுபடுத்தி, இரு பிரிவினருக்கும் இருவேறு தேர்வுகளை நடத்த முற்படுகிறது. இது கிராமப்புற ஏழை மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். மீண்டும் வர்ணாசிரமக் குலக்கல்விக்கும், குலத்தொழிலுக்கும் இது வழிகோலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது.
பள்ளிகள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாடத்திட்டம் முழுவதும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்புதிய கொள்கை, மாநிலத் தின் அதிகாரத்தைப் பறிக்கின்றது. கணிதம், அறிவியல், ஆங்கிலத்தில் தேசிய பாடத்திட்டத்தை கொண்டு வர முயல்கிறது.
இப்படி பல அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து எங்கள் பள்ளி உள்பட பல பள்ளிகள் (30.7.2016) அன்று சேப்பாக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. திராவிடர் கழகம் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கருத்தரங்கத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கு அனைத்து மாணவர்களும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.
என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆகவே, மீண்டும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில செய்திகள்!
ஒரு புதிய கல்விக் கொள்கையை வகுத்து, அதன் வரைவை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மனிதவள மேம்பாட்டுத் துறை இணைய தளத்தில் அதனை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள சில செய்திகளை உங்களுக்குச் சொல்கிறேன்.
அகில இந்திய கல்விப் பணி உருவாக்கப்படவேண்டும். அதுவரை ஆசிரியர்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்வு செய்யப்படவேண்டும்.
5 ஆம் வகுப்புவரை பெயில் பண்ணாமல் பாஸ் செய்யவேண்டும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், கல்வி உரிமைச் சட்டப்படி, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும்.
உட்கட்டமைப்பு குறைவாகவும், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடவேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுக்கவேண்டும்.
மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு, தேசிய அளவிலான தகுதித் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
பதவியில் இருக்கும் ஆசிரியர்கள், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறையும், புதிதாகப் பொறுப்பேற்கும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மத்திய அரசு தேர்வு எழுதி லைசென்ஸ் பெறவேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களைப் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு - இன்கிரிமெண்ட் போன்றவற்றை தகுதியின் அடிப்படையில் கொடுக்கவேண்டும்.
கல்வித் துறையில் - இயக்குநர் பொறுப்பு உள்பட, பல முக்கிய அதிகாரிகளின் பதவிகளுக்கு - இந்தியக் கல்விப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையே நியமிக்கவேண்டும்.
பள்ளிகளில், பள்ளிக் கல்வியில் இரு வேறு கலாச்சாரத்தைப் போதிக்க உரிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க தாராளமாக வசதிகளை செய்து தரவேண்டும்.
200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கவேண்டும் என்று இப்பொழுது ஒரு வரைவை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனால் வரக்கூடிய ஆபத்துகள் என்ன? அதனை உணர்த்துவதற்காகத்தான் இந்தப் போராட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த ஆபத்துகளில் ஒன்று இரண்டை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
பா.ஜ.க.வின் இந்தக் கல்விக் கொள்கையின்படி, 14 வயது வரை இலவச கல்வி என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் பறிக்கப்படுகிறது.
பா.ஜ.க.வின் இந்தக் கல்விக் கொள்கையின்படி, 14 வயது வரை இலவச கல்வி என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் பறிக்கப்படுகிறது.
சத்துணவு அமைப்பாளர்களின் பதவிகள் நீக்கப்படும் அபாயமும் உருவாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் நியமன அதிகாரத்தை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளக்கூடிய கொடுமை உருவாகிறது.
சிறுபான்மையினர் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சட்டப்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படியும் இருக்கக்கூடிய அந்த உரிமையும் பறிக்கப்படுகிறது.
பள்ளிகளை மூட புதிய கல்விக் கொள்கை வித்திடுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் உள்ளே நுழைய அனுமதித்து - இங்கே உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு சதித் திட்டம் தீட்டியிருக்கிறது.
தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ்கிருதத்திற்குத் தாலாட்டுப் பாட நினைக்கிறது மத்திய அரசு. திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற முகமூடி போட்டு, குலக்கல்வித் திட்டம்
உயர்கல்வியில் நுழைவுத் தேர்வை புகுத்துகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற முகமூடி போட்டு, குலக்கல்வித் திட்டம் தமிழகத்தில் குடியேற செய்வதற்கு மத்திய அரசு இன்றைக்கு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
ஆகவேதான், இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றுகூடி நீதிக்காக, நம்முடைய சமத்துவத்திற்காக போராடக்கூடிய கூடிய வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றோம். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று, கவன ஈர்ப்புத் தீர்மானம் என்கிற அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் எல்லாம், அங்கே பேரவைத் தலைவரிடத்தில் விண்ணப்பித்திருக்கின்றோம், கடிதத்தைக் கொடுத்திருக்கின்றோம். கொடுத்து இதுவரை ஒரு வார காலம் ஆகியிருக்கிறது. இதுவரையில் இந்தப் பிரச்சினையை இந்த அரசு எடுக்க முன்வரவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தப் போராட்டத்தின்மூலமாக சொல்கிறேன், தலைவர் கலைஞர் அவர்களுடைய அனுமதியோடு சொல்கிறேன், இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்களுடைய அனுமதியோடு நான் இங்கே சொல்கிறேன்,
சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்!
சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனைக் கண்டிக்க தயாராக இருக்கின்றோம். எனவே, இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றவர்கள், சட்டமன்றத்தில் இதனைக் கண்டித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும் என்று இந்த நேரத்தில், இந்தப் போராட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தனித்தீர்மானமாகக் கொண்டுவருவோம்!
ஒருவேளை அவர்களுக்கு மனமில்லை என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்களே, ஒரு தனித் தீர்மானமாகக் கொண்டு வந்து, அதனை எழுப்புவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆகவே, நான், இந்தப் போராட்டம் முடிந்தவுடன், சட்டமன்றத்திற்குச் சென்றவுடன், உடனடியாக ஒரு தனித் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும். கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நீங்கள் இன்னும் எடுக்கவில்லை. எனவே, இதனைத் தனித் தீர்மானமாகக் கொண்டு வந்து, நிறைவேற்றுகின்ற பணியில் ஈடுபடவேண்டும் என்று, தலைவருடைய, ஆசிரியர் அனுமதியோடு அந்தக் கடிதத்தை நான் வழங்கிடவிருக்கிறேன். வழங்கியவுடன், நடவடிக்கை எடுக்கிறார்களா? இல்லையா? என்று பார்ப்போம்.
1938 ஆம் ஆண்டில் நடைபெற்றது போன்ற ஒரு போராட்டம்தான் தமிழகத்தில் உருவாகும்!
இல்லை என்று சொன்னால், அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்னதுபோல, மற்றவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னது போல, மீண்டும் தமிழகத்தில் 1938-1939 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது போல, அதேபோல, 1965 ஆம் ஆண்டில் நடைபெற்றது போன்ற ஒரு போராட்டம்தான் தமிழகத்தில் உருவாகக்கூடிய நிலை - உருவாகும் என்பதை நான் இங்கே மிகப்பெரிய எச்சரிக்கையோடு இன்றைக்கு மத்திய அரசிற்கு நினைவுபடுத்தி, இந்தப் போராட்டத்தில் இதுவரை என்னுடைய உணர்வை பகிர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து, குறிப்பாக இந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்களுக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.
- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் முழக்கம்!
விடமாட்டோம், விடமாட்டோம்!
தமிழகத்துக்குள் நுழைய விடமாட்டோம்!
வருணாசிரமக் கல்வித் திட்டத்தை,
தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்!
பொருளாதார அளவுகோலை
மீண்டும் நுழைய விடமாட்டோம்
தமிழகத்தினுடைய கல்வி உரிமையை,
மாநிலங்களின் கல்வி உரிமையை
மத்திய அரசு பறிப்பதை
வேடிக்கை பார்க்க மாட்டோம்!
வேடிக்கை பார்க்க மாட்டோம்!!
இது மாறாவிட்டால்
போராட்டம், போராட்டம்!
சிறை நிரப்பும் போராட்டம்!!
சிறை நிரப்பும் போராட்டம்!!!
கட்சி இல்லை! ஜாதி இல்லை!!
மதம் இல்லை! இனம் இல்லை!
சமூகநீதி உண்டு!! சமூகநீதி உண்டு!!
அனைவருக்கும் அனைத்தும்
என்ற சமூகநீதியை
அந்தக் கொடியை
தமிழகத்திலே, பெரியார் மண்ணிலே
அவர்கள் ஏற்றிய, திராவிடர் இயக்கம் ஏற்றிய
அந்தக்கொடியை கீழே இறக்க
எந்தக் கொம்பனையும்
அனுமதியோம்! அனுமதியோம்!!

நன்றி, வணக்கம்.
- புதிய கல்விக் கொள்கை
- புதிய கல்விக் கொள்கை
கண்டன ஆர்ப்பாட்டத் தில் தலைவர்
தமிழர் தலைவர் முழக்கம்
தமிழர் தலைவர் முழக்கம்
“தளபதி சொன்னதை வழி மொழிகிறேன்!" தமிழர் தலைவர்
மிகுந்த தெளிவோடும், உறுதியோடும் போர் முரசு கொட்டி யிருக்கிறார் நம்முடைய திராவிடத் தளபதி அவர்கள்.
அவர்கள் முன்மொழிந்த மிக முக்கியமான ஒரு தீர்மானம் - என்னுடைய உரை கடைசியில் இருக்கும். அவர்கள் செல்வதற்கு முன்பாக சொல்லவேண்டும் என்பதற்காக நான் இடைமறித்து இதனைச் சொல்கிறேன்.
அவர்கள் முன்மொழிந்த, சட்டமன்றத்தில் அத்துணை கட்சிகள் ஏனென்றால், இது மாநிலத்தினுடைய பறிக்கப்பட்ட உரிமையை, மீண்டும் பெற்று எடுக்கக்கூடிய, மீட்டெடுக்கக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு தமிழக அரசிற்கும் கிடைத்திருக்கிறது. ஆகவே, அந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், எதிர்க்கட்சிகள் எல்லாம் கொடுத்திருக்கின்றன.
இதில் ஒன்று, எல்லோரும் ஆளுங்கட்சியும் இணைந்து அந்தத் தீர்மானத்தை ஒருமுகமாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நிறைவேற்றவேண்டும் என்று அவர்கள் சொன்னதை நாங்கள் வழிமொழிகிறோம்.
அப்படி அவர்கள், ஆட்சியாளர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம், இன்னமும். ஒருவேளை அவர்கள் செய்யத் தவறினால், கட்சிக் கண்ணோட்டமோ, வேறு கண்ணோட்டமோ குறுக்கிட்டால், இதுபோன்று நாடு முழுவதும், தளபதி அவர்கள், கலைஞர் அவர்களுடைய ஆணையின்படி, தளபதி அவர்களும், நாங்களும் சேர்ந்து மக்கள் மன்றத்தில் நிறைவேற்ற, தமிழ்நாட்டை ஒரு போராட்ட பூமியாக மாற்றிக் காட்டுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கழக மகளிர் அணியினர் (சென்னை வள்ளுவர் கோட்டம் - 8.8.2016)
மத்திய அரசின் புதிய குலக்கல்விக் கொள்கையை எதிர்த்து
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, ஆக. 8 மத்திய அரசின் புதிய குலக்கல்வி கொள்கையை எதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (8.8.2016) காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மற்றும் பல் வேறு அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரை யாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார். மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு ஒலி முழக்க மிட்டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், இலக்கிய செல்வர் குமரி அனந்தன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரை அடுத்து இறுதியாக தமிழர் தலைவர் ஆர்ப்பாட்ட தலைமை உரையை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
திராவிடர் கழக பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், கவிஞர் கண் மதியன், பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் கரூர் பழ.ராமசாமி, கிருட்டிணராயபுரம் கழக ஒன்றியத் தலைவர் கரூர் ஆர்.பெருமாள், புதுச்சேரி கழகப் பொதுக் குழு உறுப்பினர் எல்.பழநி, புதுச்சேரி வில்லியனூர் கழக தலைவர் கரு.சி.திராவிட செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு.
கடலூர்
கடலூர் மண்டல செயலாளர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், வடலூர் புலவர் இராவணன், திராவிடன், சேகர், இரா.தமிழன்பன், நூலகர் கண்ணன், வழக்குரைஞர் திராவிட அரசு, வடலூர் தீனமோகன்
விழுப்புரம்
விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், திண்டி வனம் மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, இளைஞரணி பாபு
திமுக
திமுக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுமான்கான், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், கிழக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர் பாபு, தெற்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம், வடக்கு மாவட் டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மாத வரம் எஸ்.சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன்,. ஆலந்தூர் சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர், விஜயா தாயன்பன், துறைமுகம் காஜா, அண்ணா அறிவாலயம் சதாசிவம், ஆயிரம் விளக்கு உசேன், சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், கயல் தினகரன், திமுக மாணவரணி செய லாளர் கடலூர் இள.புகழேந்தி, மா.பா.அன்புதுரை, ராயப்பேட்டை க.வே.செழியன், நுங்கை வி.எஸ்.ராஜ், ஜெ.எஸ்.சகாயபாபு, திமுக தொழிலாளரணி துணை செயலாளர் செல்வராஜ், சைதை எஸ்.குணசேகரன், வழக்குரைஞர் சிம்லா, முன்னாள் மேயர் சா.கணேசன்.
மாநில திமுக தொண்டர் அணி செயலாளர் நாகை முருகேசன், காஞ்சி சுகுமார், சென்னை மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.கே.அண்ணா துரை, சென்னை தெற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.சசிகுமார், க.சமையன், என்.தீனதயா ளன், எம்.சேகர், தே.நாராயண ராவ், திருவாரூர் கந்தசாமி,
பங்கேற்ற
பிற அமைப்புகள்
இனிகோ இருதயராஜ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் எழுத்தாளர் ஓவியா, புதிய குரல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொறுப்பாளர் ஜெயினுலாபிதீன், மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஷேக் மதார், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இரத்தினசபாபதி,கோ.கருணாநிதி (பொதுச்செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப் பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சேகர் பதிப்பகம் வெள்ளையாம்பட்டு சுந்தரம் சமாஜ்வாடி மாநில பொதுச் செயலாளர் ச.வாசு,தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்க பொதுச் செயலாளர் வீர.பெருமாள்,கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் அய்.பி.கனகசுந்தரம், மாணவர் இந்தியா மாநில பொறுப்பாளர் முகமது அசாருதீன், முதுகளத்தூர் வியாபாரிகள் நல அறக்கட்டளை சார்பில் அதன் பொருளாளர் ஜாகிர் உசேன்
தமுமுக சார்பில் குனங்குடி அனீபா
இந்திய சமூகநீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், மார்ட்டின், இம்மானுவேல், சுந்தர்சிங், திமோதி, ஜோஸப், ஜான்சன், ஸ்டீபன் கிருத்துவ நல்லிணக்க இயக்க துணைத் தலைவர் கிறிஸ்டோபர், பொதுச் செயலாளர் விஸ்டனூர் தளபதி, மதன், சவால்ராம், தியாகு, வழக்குரைஞர் குமார், மதுரை சுரேசு
திராவிடர் இயக்க தமிழர் பேரவை சென்னை மண்டல செயலாளர் மாறன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முகமது
கழக தோழர்கள்: வடசென்னை
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், கருங்குழி கண்ணன், கி.இராமலிங்கம், சொ.அன்பு, பொறியாளர் ச.இ.முகி லரசு, பா.கோபால கிருட்டிணன், கு.சவுந்தர்ராசன், கு.ஜீவா, ந.இராசேந்திரன், பெரு.இளங்கோ, பாலமுரு கன், தா.கருத்தோவியன், கோ.கதிரவன், மணி காளியப் பன், வ.தமிழ்ச்செல்வன், இளைஞரணி அன்புச் செல்வன், தளபதி பாண்டியன், அ.செந்தமிழ்தாசன், டி.ஜி.அரசு
தென் சென்னை
மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சா.தாமோதரன், அ.செல்வராசன், க.தமிழ்ச்செல்வன், கோ.மஞ்சநாதன், அ.பாபு, க.வெற்றிவீரன், மதுரவாயல் தமிழ்செல்வன், சூளைமேடு பி.ராஜஜேந்திரன், து.தமிழ்ச்செல்வன், நல்லாசிரியர் சண்முகசுந்தரம், டி.ஆர்.சேதுராமன், சி.தங்கவேலு, கோ.வீ.ராகவன், மைலாப்பூர் கோ.செல் வராஜ், மு.ஈழமுகிலன், ந.இராமச்சந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் வ.கணேசன், ஆ.வீரமர்த்தினி, சைதை தென்றல், வி.வளர்மதி, இரா.பிரபாகரன், செஞ்சி கதிரவன், சி.செங்குட்டுவன், ச.மகேந்திரன்
தாம்பரம் மாவட்டம்
மாவட்டத் தலைவர் ப.முத்தையன், இளைஞரணி இரா.சிவசாமி, மாணவரணி பொழிசை கண்ணன், நாத்திகன் சு.மோகன்ராஜ், கடப்பேரி சோமசுந்தரம், அரசன்கழனி குணசேகரன், குரோம்பேட்டை சட்ட நாதன், ஊரப்பாக்கம் சிகாமணி, தொழிலாளரணி நாகரத்தினம், விடுதலைநகர் ஜெயராமன், ஆசிரியர் சங்கரலிங்கம், ராமாபுரம் ஜனார்த்தனம், வழக்குரைஞர் உத்திரகுமார், சுரேசு, கலாநிதி, உமர், பாபு, பொய்யா மொழி, மா.இராசு
கும்மிடிப்பூண்டி
மாவட்டம்
மாவட்ட தலைவர் செ.உதயகுமார், ந.சனாதிபதி, க.நாகராஜ், வே.அருள், க.ச.க.இரணியன், ஏ.முரளி. அய்.அருணகிரி, பி.ஜெகன்னாதன், புழல் டி.பி.ஏழு மலை, கும்மிடிப்பூண்டி உத்திரகுமாரன், ர.விஜயகுமார், ப.சக்கரவர்த்தி, ந.கஜேந்திரன்
ஆவடி மாவட்டம்
மாவட்ட தலைவர் பா.தென்னரசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பெரியார் பாசறை கோபால், இளவரசன், விமலன், இராமலிங்கம், சிவக்குமார், பெரியார் மாணாக்கன், சம்பத், ஆவடி கந்தசாமி, முருகன், கலைமணி, தமிழ்மணி, உடுமலை வடிவேல், இளங்கோவன், இராமநாதன், செல்வி (பாசறை செயலாளர்), ஜெயந்தி, கற்பகம், முத்து கிருட்டிணன், சோபன்பாபு, வேலு, உ.கார்த்தி

கழக மகளிரணி
க.பார்வதி, க.வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, பொறி யாளர் ச.இ.இன்பக்கனி, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, பசும்பொன் செந்தில் குமாரி, தங்க.தனலட்சுமி, பா.மணியம்மை, க.சுமதி, த.மரகதமணி, செ.கனகா, பூங்குழலி, மு.பவானி, வளர்மதி, மணிமேகலை, சீர்த்தி, கலைமதி, சண்முக லட்சுமி, பி.அஜந்தா, கண்மணி பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், சுரேசு, ஆனந்த், சங்கர், மகேசு, சிறீராம் மற்றும் ஏராளமான கழகத்தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

-விடுதலை,8.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக