புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
சென்னை, அக்.29 மத்திய அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றம் நடக்கும் காலத்தில் கண்டனப் பேரணியும், கருத்தரங்கமும் டில்லியில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று (29.9.2016) காலை மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அனைத்துக் கட்சியினரும், பல்வேறு சமூக, முன்னேற்ற அமைப்புகளும் இணைந்து மக்கள் விரோதக் கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டுப் போராட்டக்குழுவின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கிவைத்தார்.
தமிழர் தலைவர் தொடக்க உரை
தமிழர் தலைவர் தொடக்க உரை
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசியதாவது:
மிகுந்த எழுச்சியுடன் நடைபெறுகின்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்ற இங்கே கூடியுள்ள அறிவார்ந்த கல்வியாளர் களான பெருமக்களே, அனைத்து இயக்கங் களைச் சார்ந்த அருமைத் தோழர்களே, ஆசி ரியப் பெருமக்களே, பல பள்ளிகளை, முதல் முறை இந்த நாட்டிலே கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்துக்கெல்லாம் கல்விக்கண்ணைக் கொடுத்த பெருமைக்குரிய சிறுபான்மைச் சமு தாயத்தைச் சார்ந்த அருமை கல்வியாளர் களான சான்றோர் பெருமக்களே, ஆசிரியர் பெருமக்களே, மாணவர்களே! இந்த போராட் டத்துக்கு தங்களுடைய அறவழிப்பட்ட ஆதரவைத் தந்து கொண்டிருக்கக்கூடிய அருமை அரசியல் கட்சித் தோழர்களே, உங்கள் எல் லோருக்கும் அன்பான வணக்கம்.
இந்த அமைப்பின் சார்பாக நம்முடைய கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள் செய்தியாளர்களுக்கெல்லாம் இதனுடைய நோக்கத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக் கிறார். நாளைய தினம் செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைந்து விடுவதால் கருத்து களை சொல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் சொன்ன நேரத்திலே ஏராளமான அளவுக்கு இந்த அமைப்பே பலமுறை ஆர்ப்பாட்டங்களை, சிறப்பாக கருத்தரங்கங்களை எல்லாம் நடத்தியிருக்கிறது.
இடையூறுகளைச் செய்யும் புதிய திட்டம்
இந்த நாட்டைப் பொறுத்தவரையிலே எல்லோருக்கும் கல்வி என்று நினைக்க வேண்டும். கல்வி நீரோடை நாடெலாம் பாயவேண்டும் என்று சொன்னால், அதற்கு அடித்தளமாக என்னென்ன இடையூறுகளைச் செய்ய முடியுமோ, அவ்வளவு இடையூறு களையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க வர்ணாசிரம தர் மத்தைப் பாதுகாக்கின்ற ஒரு கல்வித் திட்டம், முழுக்க முழுக்க சிறுபான்மைச் சமுதாயத்தி னுடைய உரிமைகளை அடியோடு பறிக்கின்ற ஒரு கல்வித்திட்டம். சமூக நீதி என்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று சொல்லி, அந்த வாய்ப்பை மறுக்கக்கூடிய ஒரு கல்வித் திட்டம்.
அடுத்த கட்டமாக
டில்லியில் கண்டனப் பேரணி
டில்லியில் கண்டனப் பேரணி
இதையெல்லாம் எதிர்த்து மிகத் தெளிவாக இங்கே விளக்கிச் சொல்ல கல்வியாளர்களும் இருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். இதிலே ஏற்கெனவே நாம் பலமுறை பல அமைப்புகள் சார்பாக உருவாக் கிக்கொண்டிருக்கிறோம். இதை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.
ஆனாலும், அவர்கள் பிடிவாதம் காட்டு கிறார்கள். மீண்டும் தாங்கள் ஏதோ இந்தக் கருத்தையெல்லாம் சொல்லிவிட்டோம். நடத்தி விட்டோம் என்று சொல்லுவதைப்போல சொல்லுகிறார்கள். எனவேதான், இந்த சிறப்பான பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி யாளர்கள் எல்லாத் தரப்பினரும் சேர்ந்து நடத் தக்கூடிய இது சிறப்பான முயற்சி. இதனுடைய அடுத்த கட்டமாக அடுத்து டில்லியிலே நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நேரத்திலே டில்லியிலே மிகப்பெரிய ஒரு பேரணியையும், கருத்தரங்கத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நாம் அனைவரும் சென்று நடத்த வேண்டும். ஏனென்றால், டில்லியினுடைய கேளாக் காது களுக்கும், பார்க்கா கண்களுக்கும், செயல்படாத ஆட்சித் தன்மைக்கும் செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
மாநிலப் பட்டியலில் கல்வி
அடித்தளத்திலேயே மிக முக்கியமான சீர் திருத்தம் என்று சொன்னால், மாநிலப் பட்டி யலிலே கல்வி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். அதிலே நமக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் செய்தால் ஒழிய, கல்வியை இவர்கள் எல்லா இடத்திலும் ஒன்று போல செய்கிறோம் என்று சொல்வதிலே அர்த் தமே இல்லை. ஏற்கெனவே நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்றைத் தெளிவாக சொல்ல வேண்டும். டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலே அமைந்திருக்கின்ற இந்தக் குழு, இந்தக் கல்வியைப்பற்றி, எகனாமிக்கல் பொலிடிகல் வீக்லிÕ (Economical Political weekly) என்ற அரசியல் பொருளாதார வார ஏட்டிலே தெளிவாக ஒரு கட்டுரையை, இந்தக் கல்வித்திட்டத்துக்கு எதிர்ப்பு வந்த பிற்பாடு, இரண்டு மாதங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்.
அதிலே அவருடைய அப்பட்டமான சிந்தனை என்ன என்பதை வெளிப்படையாக சொல்லக் கூடிய அளவுக்கு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் மத்திய அரசாங்கத்திலே மிகப்பெரிய அதிகாரியாக பல ஆண்டு காலம் இருந்து அகில இந்தியாவின் கல்வித் திட்டத்தை, நாட்டில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு இருக்கிற குழுவுக்குத் தலைவராக போடப்பட்ட ஒருவர் அரசமைப்புச்சட்டத்திலே இருக்கிற கருத்துக்கு மாறாக இருக்கின்ற அந்த கருத்துக்கு மாறானவைகளைத்தான் அதிலே எழுதியிருக்கிறார்.
உதாரணமாக சமூக நீதியைப் பொறுத்த வரையிலே,Socially and Educationally என்ற வார்த்தையைத்தான் என்று வருகிற நேரத்திலே, அரசமைப்புச்சட்டத்திலே, அரசமைப்புச்சட்டத் திருத்தம் என்று வந்த நேரத்திலே, தந்தை பெரியாருடைய போராட்டம் இங்கே நடந்தது, பழைய வகுப்புவாரி உரிமை இங்கே செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது.
தமிழ்நாட்டிலே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ச்சி வெடித்தெழுந்தது
1951இலே பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தியாவினுடைய தென்கோடியிலே நடக்கக்கூடிய போராட்டம் என்றுமட்டும் நினைக்கக்கூடாது, மாறாக இந்தியா முழுவதும் நாளைக்கு இதே நிலை வரக்கூடிய சூழல் இருக்குமென்று, அவர்கள் தொலைநோக்கோடு பார்த்து, நல்ல ஜனநாயக வாதி என்ற காரணத்தினாலே பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், சட்ட அமைச்சராக இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் விவாதித்து 15இல் 4 என்ற பிரிவில் இடஒதுக்கீட்டை காப்பாற்றும் வகையிலே அரசமைப்புச்சட்டத் திருத்தமாகக் கொண்டு வந்தார்கள்.
அதிலே மிகப்பெரிய விவாதங்கள் நடந்து, நாடாளுமன்றத்திலே விவாதங்கள் நடைபெற்ற பிற்பாடுதான் Socially and Educationally என்ற வார்த்தையைத் திட்டமிட்டுப் ''போட்டார்கள்.
அப்போது ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள். Economically என்ற வார்த்தையைப்போட வேண்டும் என்று சொன்ன நேரத்திலே, பொருளாதார அளவுகோலையும் திணிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்திலே, அவர்கள் தெளிவாகவே அதற்கு மறுத்தார்கள். என்ன காரணம் என்று சொன்னால், மற்ற இரண்டும் இந்த நாட்டிலே காலம், காலமாக இருக்கின்ற சமுதாயத்திலே கல்வி மறுக்கப்பட்டதைக் குறிக்கும். Socially and Educationally
என்று சொன்னால், சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தையைப் போட்டார்கள்.
என்று சொன்னால், சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தையைப் போட்டார்கள்.
அதிலிருந்து அரசமைப்புச் சட்டத்திலே இருக்கின்ற அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவருகிறது.
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் எழுதியுள்ள கட்டுரையிலே என்ன சொல்லியிருக்கிறார் என்றால், Socially and Economically என்று திரும்ப திரும்ப அக்கட்டுரையில் எழுதுகிறார்கள். அப்படியானால், ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் என்று சொல்லக்கூடிய கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டிருக்கின்ற சமுதாயத்தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. வேறு ஒரு புதிய தத்துவத்தை, ஆதிக்கத்தைக் காப்பாற்றுவதற்காக இன்னும் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அரசமைப்புச்சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற, விவாதித்து சொல்லப்பட்டிருக்கின்ற கருத்தையே ஒப்புக்கொள்ளாத ஒருவர் எப்படி சமூகநீதிக்கான கல்வித்திட்டத்தை உருவாக்குவார் என்ற கேள்வியை நாம் பார்க்க வேண்டாமா? எனவேதான் நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கக்கூடாது. இதுதான் இப்போது முக்கியமானது.
நண்டைச்சுட்டு நரியைக் காவல் வைத்திருக்கிறார்கள். நரி பலி கேட்கிறது. நரியை விரட்டுவதற்கு நாம் அத்தனைபேரும் இன்றைக்குத் திரண்டிருக்கின்றோம். எனவேதான், இதிலே கட்சி இல்லை, இதிலே ஜாதி இல்லை, நம்முடைய இளம் செல்வங்களின் எதிர்காலம் இருக்கிறது. இந்தக் கல்வித் திட்டத்திலே இங்கொன்றும் அங்கொன்றும் ஏதோ பழுது பார்க்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிலே இல்லை. இது பழுது பார்க்கக்கூடிய கட்டடம் அல்ல. இடித்துவிட்டு, புதிய கட்டடத்தைக் கட்டவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ள கட்டடம்.
இந்துத்துவக் கருத்துகளை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே வேறொன்றைப் பேசுகின்றார்கள்.
இந்துத்துவக் கருத்துகளை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே வேறொன்றைப் பேசுகின்றார்கள்.
சிறுபான்மை சமுதாய மக்கள் கல்விக்கூடங்களை நடத்துகிறார்கள். நான் அறைகூவலிட்டுச் சொல்லுகிறேன். இந்த நாட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த சிறுபான்மைச் சமுதாயத்தின் பள்ளிக்கூடங்கள் துவக்கியிருக்காவிட்டால், எங்களைப் போன்றவர்களுக்கே படிப்பு கிடையாது. நிச்சயமாக இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற பாதுகாப்பை, அடிப்படையை அவர்கள் மாற்ற நினைக்கிறார்கள். அரசமைப்பின் அடித்தளமான அடிப்படையை என்று சொல்லுவதிலே இது வருகிறது.
எனவே, இதிலே கை வைக்கக்கூடிய உரிமை இந்தக் கல்வித் திட்டத்துக்குக் கிடையாது. அப்படி கைவைத்தால், இந்தக் கல்வித் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்று காட்டக்கூடிய உணர்வுடன் டில்லிக்கு செல்வோம். அங்கேயே நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நேரத்திலே, அடுத்த கட்டமாக அத்தனைக்கட்சித் தலைவர்களையும் இதேபோல மேடைக்கு அழைப்போம். அங்கே சேர்ந்து நடத்தி மிகப்பெரிய அளவுக்கு அந்த வாய்ப்புகளை உருவாக்குவோம். அங்கே அனுமதி மறுத்தால், சிறைச்சாலைக்கும் செல்வோம். கொளுத்த வேண்டியவற்றை கொளுத்துவோம். தடுக்க வேண்டியவற்றை தடுப்போம். அதற்கு ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர், தமிழ்நாடுதான் இதை முதலில் பேசியிருக்கிறது.
புதிய கல்விக்கொள்கையை ஆச்சாரியார் கொண்டு வந்ததை, பழைய கள் புதிய மொந்தை என்று சொல்வதைப்போல, புதிதாக குலக் கல்வித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
எனவே, இந்தத் திட்டம் சமூகநீதிக்கு விரோதமானது. இந்தத் திட்டம் குலக்கல்வித்திட்டத்தை திணிக்கும் திட்டம். இந்தத் திட்டம் சிறுபான்மை சமுதாயத்தினரை அறவே அழிக்கவேண்டும் என்கிற திட்டம்.
எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் வளர வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல,எல்லோருக்குமான வாய்ப்பை மறுக்கின்ற இந்தக் கல்வித்திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இதிலே எங்களுக்குள் ஜாதி இல¢லை, மதம் இல்லை, கட்சி இல¢லை.
ஒன்றே ஒன்றுதான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் கல்வி என்பதுதான் முக்கியம் என்று சொல்லி, அந்த இலக்கை நோக்கி நடப்போம். வாரீர் வாரீர் என்று சொல்லி இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றிகூறி இதைத் துவக்கிவைப்பதிலே நான் பெருமையடைகின்றேன்.
இந்தக்குரல் இமயம்வரையிலே சென்றாக வேண்டிய குரல். குமரியிலே தொடங்கியிருக்கிறது. இமயம் வரையிலே சென்றாகவேண்டிய குரல்.
எனவேதான் நண்பர்களே, அருமைப் பாதிரிமார்களே, அருமை சிறுபான்மை சமுதாய சகோதரர்களே, அருமை ஒடுக்கப்பட்ட தோழர்களே, ஆசிரியப் பெருமக்களே எல்லோரும் ஒன்று சேருவோம்.
இதிலே ஒரே குரலாக, ஒரே அணியாக டில்லியிலே மீண்டும் பேரணி, இந்தக் கல்வித்திட்டத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, அதிலே புதிய மறுமலர்ச்சியை உருவாக்குபவர்கள் போராடுவோம், போராடுவோம், போராடுவோம். போராடத் தயங்கோம் என்று கூறி தொடங்கிவைக்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
முன்னதாக வழக்குரைஞர் பிரிட்டோ வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் இரத்தினசபாபதி, பொதுச் செயலாளர் பிரின்சு கஜேந்திர பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டி, காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சு, மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மேனாள் துணைவேந்தர் சாதிக், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சமூகநீதிப்பேரவை எஸ்றா சற்குணம், தென்னிந்திய திருச்சபை மதுரை இராமநாதபுரம் பேராயர், மே 17 இயக்கம் திருமுருகன், டிசம்பர் 3 இயக்கம்தீபக், விக்டர்தாஸ், முரளிதரன், லயோலா கல்லூரி, ஸ்டெல்லாமேரி கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை ஜீவா, ந. ராஜேந்திரன், மடிப்பாக்கம் ஜெயராமன், பெரியார் மாணாக்கன் பெரு.இளங்கோ, கும்மிடிபூண்டி மாவட்டத்தலைவர் புழல் ஆனந்தன், புழல் ஏழுமலை, நாகூர் காமராஜ், செஞ்சி ந.கதிரவன், ஆவடி கலைமணி, உடுமலை வடிவேல், யுவராஜ், மகேஷ், அசோக் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சென்னை மண்டல செயலாளர் மாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் திரண்டு முழக்கமிட்டனர். (சென்னை சேப்பாக்கம், 29.9.2016)
--விடுதலை,29.9.16
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் திரண்டு முழக்கமிட்டனர். (சென்னை சேப்பாக்கம், 29.9.2016)
-விடுதலை,29.9.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக