அறிஞர் அண்ணா 108ஆம் ஆண்டு பிறந்த நாள்
சென்னை, செப் 15 அறிஞர் அண்ணா அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2016) அவரது படத்துக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
சென்னை, செப் 15 அறிஞர் அண்ணா அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2016) அவரது படத்துக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர், திமுக நிறுவனர், தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு இன்று (15.9.2016) காலை 11.15 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்கள், தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தும், சிலை யின் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் பெருந்திர ளான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தோழர் களின் தந்தை பெரியார் வாழ்க, அறிஞர் அண்ணா வாழ்க எனும் முழக்கங்கள் வானைப் பிளந்தன.
கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.பி.பாலு, ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், மாவட்ட இளை ஞரணி தலைவர் பொன்னேரி நாகராஜ், செயலாளர் இரணியன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, இரா.பிரபாகரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை டி.ஆர்.சேதுராமன், தரமணி மஞ்சநாதன், நுங்கம்பாக்கம் க.வெற்றிவீரன், வடசேரி நெடுங்கிள்ளி,
பி.வீரமணி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தொழிலாளர் கழகம் நாகரத் தினம், நாகூர் காமராஜ், இள வல், சி.வெற்றிசெல்வி, பசும் பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, மு.பவானி, மதியரசி, தங்க.தனலட்சுமி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், பெரியார் மாணாக்கன், தாம்பரம் கழக மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான பி.சி.ஜெய ராமன், மேடவாக்கம் விஜய் ஆனந்த், சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், தே.சுரேஷ், பெரியார் திடல் சுரேஷ்,
மகேஷ், தமிழ்க்குடிமகன், ரங்கநாதன், சிவக்குமார், காரல் மார்க்ஸ், யுவராஜ், பழனிக் குமார், அசோக், வை.கலை யரசன், க.கலைமணி, செஞ்சி ந.கதிரவன், அம்பேத்கர் உள் பட தாம்பரம், தென்சென்னை, வடசென்னை, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து பலரும் கலந்துகொண்டனர்.
-விடுதலை,15.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக