தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 1.7.16 முற் பகல் 11.00மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்(துறைமுகம் எதிரில்) 'சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
பெரும்பான்மையோர்
பேசாத மொழியை திணிக்கிறார்கள்!
முன்பு இந்தியைத் திணிக்கின்ற நேரத்தில் என்ன சொன் னார்கள், பெரும்பான்மையோர் பேசுகிறார்கள், ஆகவே அதனைப் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அதே வாதத்தை இப்பொழுது திருப்பிப் போட்டால், பெரும்பான்மையோர் பேசாத மொழியை, ஏன் மிகச் சிறுபான்மையோர்கூட பேசாத மொழியை திணிக்கிறீர்களே என்று கேட்டால்,
அவர்கள் சொல்கிறார்கள், இதுதான் கலாச்சாரத்தின் அடையாளம்; இதுதான் இந்தியாவின் ஆத்மா என்று கூறுகிறார்கள்.
தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொன்னார்கள்; தமிழை நீஷ பாஷை என்று சொன்னார்கள்
.
இங்கே சகோதரர் குமரி அவர்கள் சொன்னதைப்போல, தமிழன் கட்டிய கோவிலில், தமிழன் அர்ச்சகனாகவும் இல்லை, தமிழ் அர்ச்சனை மொழியாகவும் இல்லை. அதனை நினைத்து நாம் வேதனைப்படவேண்டும் - மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு
எனவேதான், இந்தப் போராட்டம் என்பது ஒரு பண் பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்ட மாகும். இந்தப் போராட்டம் முதல் கட்ட போராட்டம். இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு, ஒரு கலாச்சார திணிப்பு. இந்த மக்களை காலங்காலமாக அடிமையாக்கக்கூடிய மீண்டும் மனுதர்ம ஆட்சியை கொண்டு வருவதற்காக, பூர்வாங்க ஏற்பாட்டின் முதல் தொடக்கம். ஆகவே, இதனை நன்றாகப் புரிந்து கொண்டு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் சிறப்பான வகையில் இங்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
சமஸ்கிருத மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு - வேறு எந்த மொழியைச் சொன்னாலும், அந்த மொழியிலிருந்துதான் சொற்களைச் சொல்வார்கள். ஆனால், சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றால், ஆங்கில மொழியின் உதவியோடுதான் சொல்லிக் கொடுப்பார்கள்.
இதுவரையில் பார்த்தீர்கள் என்றால், ஆங்கில உதவி யோடுதான் சமஸ்கிருத வகுப்பு நடக்கும். இனிமேல்தான், சமஸ்கிருத மொழியை வைத்தே சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். இதனைவிட பரிதாபம் வேறு எதுவும் கிடையாது.
நாம் ஒருபோதும் ஏமாளிகளாக
இருப்பதற்குத் தயாராக இல்லை
நாம் எல்லாம் ஏமாளிகளா? அவர்கள் கோமாளிகளாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒருபோதும் ஏமாளிகளாக இருப்பதற்குத் தயாராக இல்லை. அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவேதான், இது முதற்கட்ட போராட்டம்.
அடுத்த நிலையில், வெகுவிரைவில் இதுபோன்ற அறிஞர்கள், மொழி அறிஞர்கள், பண்பாட்டுக் காவலர்கள், அனைத்துக் கட்சியினர், ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து, சென்னையில் ஒரு மாபெரும் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக் குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, ஒரு பிரம்மாண்டமான போராட்டத் திட்டம் தேவை. வந்திருக்கின்ற ஆபத்து சாதாரணமானதல்ல. இப்பொழுதுதான் தொடக்கம். அவர்கள் சொன்னதுபோல, பாம்பு உள்ளே நுழைந்துவிட்டது, எனவே, அது படமெடுத்து ஆடுவதற்கு முன்பாக அதனுடைய நச்சுப் பல்லை பிடுங்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், அப்படிப்பட்ட ஒரு மாநாடு, உங்களைப் போன்றவர்கள், தமிழறிஞர்கள், இன உணர்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டமில்லாமல் எல்லோரையும் அழைக்கிறோம். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு மாநாட்டுத் திட்ட அறிவிப்பை கொடுக்கிறோம்.
நச்சுப் பாம்பின் பல்லை பிடுங்குவதற்குத்
தயாராக இருக்கவேண்டும்!
கலைஞர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள், சமஸ் கிருதத் திணிப்பா? சவுக்கை எடுங்கள் என்று சொன்னார்கள்.
அந்தப் பாம்பின் நச்சுப் பல்லை பிடுங்குவதற்குரிய கருவிகளோடு தயாராக இருக்கவேண்டும்.
ஆகவே, ஒன்றுபடுவோம், முறியடிப்போம்! ஒன்றுபடு வோம், முறியடிப்போம்! இதுதான் நம்முடைய முழக்கமாக இருக்கவேண்டும்.
எதிர்த்தாகவேண்டிய மகத்தான பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு
நம்முடைய பிள்ளைகளுக்கு இன்னும் தமிழே சரிவர பேச வரவில்லை. தமிங்கலம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழும், ஆங்கிலமும் கலந்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தினுடைய சாதனைகளில் ஒன்று, தனித்தமிழ் உணர்வு. அதனை அழிப்பதற்கான பெருமுயற்சிதான் சமஸ்கிருத திணிப்பு. வடமொழித் திணிப்பு. ஆகவே, எல்லா கோணங்களிலும் அதனை எதிர்த்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
எனவேதான், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. நம்முடைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறி, இந்தப் போராட்டத்தைத் தொடருவோம், தொடருவோம் என்று கூறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
இன்று (26.6.16)மாலை 4.00 மணி அளவில் காமராசர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் எதிரில் சென்னை வானொலி நிலையம் அருகில் நொச்சி நகர் மற்றும் மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து 1.7.16 முற்பகல் 11.00மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டம் குறித்து விளம்பர நெகிழித்திரை வைக்கப்பட்டது.
-விடுதலை,27.6.16
செத்த மொழியான சமஸ்கிருதத்தின்மூலம் ஆரிய பண்பாட்டுப்
படையெடுப்பை அரங்கேற்றுகிறது மத்திய அரசு
இது முதற்கட்ட போராட்டம் - விரைவில் ஒத்த கருத்துள்ள
அனைவரையும் இணைத்து மாபெரும் மாநாட்டை நடத்துவோம்
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்
சென்னை, ஜூலை 1- சமஸ்கிருத திணிப்பு மூலம் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை அரங்கேற்றுகின்றனர். இது முதற்கட்ட போராட்டம் விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் கட்சி வித்தியாசம் பாராமல் அழைத்து சமஸ்கிருத எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தும் - மாநாட்டில் போராட்ட திட்டம் வகுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
1.7.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:
அனைத்து மாவட்டங்களிலும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
முதலாவதாக சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் - சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்ற இந்தப் போராட்டம் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தமிழ் நாட்டினுடைய அனைத்து மாவட்டங்களிலும் இப்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இங்கே நண்பர்கள் அழகாக எடுத்துக்காட்டியதைப்போல, மேனாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அய்யா பலராமன் அவர்கள் சொல்லியதுபோல, இது ஒரு அச்சாரப் போராட்டம். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல.
என்றைக்கு அந்தக் கட்டாய திணிப்பு ஒழிக்கப்படுகிறதோ அன்றுவரையில் தொடர் போராட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்ற ஒரு தெளிவான நோக்கத்தோடு தொடங்கப்படுகின்ற போராட்டம் இது.
தயவு செய்து இங்கே சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊடகவியலாளர்களுக்கு கடைசியில் சுருக்கமாகக் கூட சொல்லுவேன்.
செத்த மொழிக்கு மீண்டும்
உயிரூட்ட முயற்சிக்கிறார்கள்
ஏதோ ஒரு மொழிக்கு எதிராக இவர்கள் எல்லாம் திரண்டு இருக்கிறார்களே, யார் எத்தனை மொழி படித்தால் என்ன? இவர்கள் ஏன் தடுக்கவேண்டும்? என்று நினைக்கிறார்கள். நண்பர்களே, வடமொழி என்கிற சமஸ்கிருத மொழி இருக் கிறதே, அந்த மொழி, நண்பர்கள் சொன்னதைப்போல, செத்த மொழிக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மொழி என்ற முறையில் யாரும் படித்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவ தில்லை. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடையறாமல் சொல்லிக் கொடுத்து, சமஸ்கிருதம் படிக்க வாருங்கள், சாப்பாடு கொடுக்கிறோம், மற்றவை எல்லாம் உங்களுக்கு செய்கிறோம் என்று அழைக்கிறார்கள். அது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அவையெல்லாம் இப்பொழுது மானியத்தோடு நடைபெறுவதற்கான திட்டம் இந்தத் திட்டம்.
அதன் பின்னால் ஒளிந்திருக்கின்ற மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ். ஆபத்து இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. அவர்களுடைய கொள்கையை இதன்மூலம் திணிக்கிறார்கள். மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற பா.ஜ.க.வினுடைய ஆட்சியில், மூன்றை தெளிவாகச் சொல்வார்கள்.
இந்துத்துவா ஆட்சி - பல மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற நாட்டில்,
என் மதம்தான் ஆளவேண்டும் - அதுதான் இந்து மதம் என்கிற ஆரிய, பார்ப்பனிய, வேத மதம்.
ஒரே மதம் - இந்து மதம் இருக்கவேண்டும்; ஒரே மொழி - சமஸ்கிருத மொழி இருக்கவேண்டும். ஒரே கலாச்சாரம் - சமஸ்கிருத கலாச்சாரம் என்ற பெயரால் பாரதீய இந்துத்துவ கலாச்சாரம் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிப்படையான கொள்கையாகும்.
அதைத்தான் தங்கள் ஆட்சியில், தங்களுக்குக் கிடைத் திருக்கின்ற பெரும்பான்மை வாய்ப்பை வைத்துக்கொண்டு, இந்த மக்களிடம் அதனைத் திணிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டு, இப்பொழுது வெளிப்படையாகவே வந்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு அறிஞர் பெருமக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு ஆதாரபூர்வமான செய்தி, பல ஊடகங்கள்கூட அதிகமான முக்கியத்துவத்தை இவைபோன்றவைகளுக்குக் கொடுப்பதில்லை.
கோபால்சாமி அய்யங்கார்
தலைமையில் ஒரு குழு!
சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கக்கூடிய கோபால்சாமி அய்யங்கார் அவர்களுடைய தலைமையில், சமஸ்கிருதத்தை மேலும் பத்தாண்டு காலத்திற்கு எப்படி திணிப்பது? எப்படி பெருக்குவது? என்பதற்காக போடப்பட்டது.
அந்த அறிக்கையின் பெயர் Vision and Road map for the Development of Sanskrit ten year perspective plan.
மூன்று மாதங்களில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிவித்துள்ளது - எல்லா பள்ளிக்கூடங்களிலும், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இருந்து பல்கலைக் கழகம் வரை இதனைத் திணிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். படிப்படியாக எல்லாம் ஒரே நேரத்தில் செய்யவேண்டும் என்று. அதனுடைய முதல் தொடக்கம்தான் இங்கே தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வெறும் மொழிக்காக அல்ல; ஒரு கலாச்சார திணிப்பு - ஆரிய பண்பாட்டுத் திணிப்பு என்பதுதான் மிக முக்கியம்.
இங்கே சொன்னார்கள், 22 மொழிகள் அரசியல் சட்டத் தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று. அதில் இருக்கின்ற 22 மொழிகளில், பேசப்படாத மொழி ஒன்று இருக்கிறது என்றால், அது சமஸ்கிரும்தான். அதுமட்டுமல்ல நண்பர்களே, செத்த மொழி என்ற பெருமை பெற்ற ஒரு மொழி உண்டென்றால், அது சமஸ்கிருதம்தான்.
அதுமட்டுமல்ல, இதைத் தெரிந்தவர்கள் 000 என்று போட்டு புள்ளி ஒன்று என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கக்கூடியது சமஸ்கிருதம்.
அனைத்து மாவட்டங்களிலும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
முதலாவதாக சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் - சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்ற இந்தப் போராட்டம் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தமிழ் நாட்டினுடைய அனைத்து மாவட்டங்களிலும் இப்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இங்கே நண்பர்கள் அழகாக எடுத்துக்காட்டியதைப்போல, மேனாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அய்யா பலராமன் அவர்கள் சொல்லியதுபோல, இது ஒரு அச்சாரப் போராட்டம். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல.
என்றைக்கு அந்தக் கட்டாய திணிப்பு ஒழிக்கப்படுகிறதோ அன்றுவரையில் தொடர் போராட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்ற ஒரு தெளிவான நோக்கத்தோடு தொடங்கப்படுகின்ற போராட்டம் இது.
தயவு செய்து இங்கே சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊடகவியலாளர்களுக்கு கடைசியில் சுருக்கமாகக் கூட சொல்லுவேன்.
செத்த மொழிக்கு மீண்டும்
உயிரூட்ட முயற்சிக்கிறார்கள்
ஏதோ ஒரு மொழிக்கு எதிராக இவர்கள் எல்லாம் திரண்டு இருக்கிறார்களே, யார் எத்தனை மொழி படித்தால் என்ன? இவர்கள் ஏன் தடுக்கவேண்டும்? என்று நினைக்கிறார்கள். நண்பர்களே, வடமொழி என்கிற சமஸ்கிருத மொழி இருக் கிறதே, அந்த மொழி, நண்பர்கள் சொன்னதைப்போல, செத்த மொழிக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மொழி என்ற முறையில் யாரும் படித்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவ தில்லை. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடையறாமல் சொல்லிக் கொடுத்து, சமஸ்கிருதம் படிக்க வாருங்கள், சாப்பாடு கொடுக்கிறோம், மற்றவை எல்லாம் உங்களுக்கு செய்கிறோம் என்று அழைக்கிறார்கள். அது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அவையெல்லாம் இப்பொழுது மானியத்தோடு நடைபெறுவதற்கான திட்டம் இந்தத் திட்டம்.
அதன் பின்னால் ஒளிந்திருக்கின்ற மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ். ஆபத்து இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. அவர்களுடைய கொள்கையை இதன்மூலம் திணிக்கிறார்கள். மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற பா.ஜ.க.வினுடைய ஆட்சியில், மூன்றை தெளிவாகச் சொல்வார்கள்.
இந்துத்துவா ஆட்சி - பல மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற நாட்டில்,
என் மதம்தான் ஆளவேண்டும் - அதுதான் இந்து மதம் என்கிற ஆரிய, பார்ப்பனிய, வேத மதம்.
ஒரே மதம் - இந்து மதம் இருக்கவேண்டும்; ஒரே மொழி - சமஸ்கிருத மொழி இருக்கவேண்டும். ஒரே கலாச்சாரம் - சமஸ்கிருத கலாச்சாரம் என்ற பெயரால் பாரதீய இந்துத்துவ கலாச்சாரம் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிப்படையான கொள்கையாகும்.
அதைத்தான் தங்கள் ஆட்சியில், தங்களுக்குக் கிடைத் திருக்கின்ற பெரும்பான்மை வாய்ப்பை வைத்துக்கொண்டு, இந்த மக்களிடம் அதனைத் திணிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டு, இப்பொழுது வெளிப்படையாகவே வந்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு அறிஞர் பெருமக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு ஆதாரபூர்வமான செய்தி, பல ஊடகங்கள்கூட அதிகமான முக்கியத்துவத்தை இவைபோன்றவைகளுக்குக் கொடுப்பதில்லை.
கோபால்சாமி அய்யங்கார்
தலைமையில் ஒரு குழு!
சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கக்கூடிய கோபால்சாமி அய்யங்கார் அவர்களுடைய தலைமையில், சமஸ்கிருதத்தை மேலும் பத்தாண்டு காலத்திற்கு எப்படி திணிப்பது? எப்படி பெருக்குவது? என்பதற்காக போடப்பட்டது.
அந்த அறிக்கையின் பெயர் Vision and Road map for the Development of Sanskrit ten year perspective plan.
மூன்று மாதங்களில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிவித்துள்ளது - எல்லா பள்ளிக்கூடங்களிலும், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இருந்து பல்கலைக் கழகம் வரை இதனைத் திணிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். படிப்படியாக எல்லாம் ஒரே நேரத்தில் செய்யவேண்டும் என்று. அதனுடைய முதல் தொடக்கம்தான் இங்கே தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வெறும் மொழிக்காக அல்ல; ஒரு கலாச்சார திணிப்பு - ஆரிய பண்பாட்டுத் திணிப்பு என்பதுதான் மிக முக்கியம்.
இங்கே சொன்னார்கள், 22 மொழிகள் அரசியல் சட்டத் தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று. அதில் இருக்கின்ற 22 மொழிகளில், பேசப்படாத மொழி ஒன்று இருக்கிறது என்றால், அது சமஸ்கிரும்தான். அதுமட்டுமல்ல நண்பர்களே, செத்த மொழி என்ற பெருமை பெற்ற ஒரு மொழி உண்டென்றால், அது சமஸ்கிருதம்தான்.
அதுமட்டுமல்ல, இதைத் தெரிந்தவர்கள் 000 என்று போட்டு புள்ளி ஒன்று என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கக்கூடியது சமஸ்கிருதம்.
பெரும்பான்மையோர்
பேசாத மொழியை திணிக்கிறார்கள்!
முன்பு இந்தியைத் திணிக்கின்ற நேரத்தில் என்ன சொன் னார்கள், பெரும்பான்மையோர் பேசுகிறார்கள், ஆகவே அதனைப் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அதே வாதத்தை இப்பொழுது திருப்பிப் போட்டால், பெரும்பான்மையோர் பேசாத மொழியை, ஏன் மிகச் சிறுபான்மையோர்கூட பேசாத மொழியை திணிக்கிறீர்களே என்று கேட்டால்,
அவர்கள் சொல்கிறார்கள், இதுதான் கலாச்சாரத்தின் அடையாளம்; இதுதான் இந்தியாவின் ஆத்மா என்று கூறுகிறார்கள்.
தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொன்னார்கள்; தமிழை நீஷ பாஷை என்று சொன்னார்கள்
.
இங்கே சகோதரர் குமரி அவர்கள் சொன்னதைப்போல, தமிழன் கட்டிய கோவிலில், தமிழன் அர்ச்சகனாகவும் இல்லை, தமிழ் அர்ச்சனை மொழியாகவும் இல்லை. அதனை நினைத்து நாம் வேதனைப்படவேண்டும் - மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு
எனவேதான், இந்தப் போராட்டம் என்பது ஒரு பண் பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்ட மாகும். இந்தப் போராட்டம் முதல் கட்ட போராட்டம். இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு, ஒரு கலாச்சார திணிப்பு. இந்த மக்களை காலங்காலமாக அடிமையாக்கக்கூடிய மீண்டும் மனுதர்ம ஆட்சியை கொண்டு வருவதற்காக, பூர்வாங்க ஏற்பாட்டின் முதல் தொடக்கம். ஆகவே, இதனை நன்றாகப் புரிந்து கொண்டு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் சிறப்பான வகையில் இங்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
சமஸ்கிருத மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு - வேறு எந்த மொழியைச் சொன்னாலும், அந்த மொழியிலிருந்துதான் சொற்களைச் சொல்வார்கள். ஆனால், சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றால், ஆங்கில மொழியின் உதவியோடுதான் சொல்லிக் கொடுப்பார்கள்.
இதுவரையில் பார்த்தீர்கள் என்றால், ஆங்கில உதவி யோடுதான் சமஸ்கிருத வகுப்பு நடக்கும். இனிமேல்தான், சமஸ்கிருத மொழியை வைத்தே சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். இதனைவிட பரிதாபம் வேறு எதுவும் கிடையாது.
நாம் ஒருபோதும் ஏமாளிகளாக
இருப்பதற்குத் தயாராக இல்லை
நாம் எல்லாம் ஏமாளிகளா? அவர்கள் கோமாளிகளாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒருபோதும் ஏமாளிகளாக இருப்பதற்குத் தயாராக இல்லை. அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவேதான், இது முதற்கட்ட போராட்டம்.
அடுத்த நிலையில், வெகுவிரைவில் இதுபோன்ற அறிஞர்கள், மொழி அறிஞர்கள், பண்பாட்டுக் காவலர்கள், அனைத்துக் கட்சியினர், ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து, சென்னையில் ஒரு மாபெரும் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக் குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, ஒரு பிரம்மாண்டமான போராட்டத் திட்டம் தேவை. வந்திருக்கின்ற ஆபத்து சாதாரணமானதல்ல. இப்பொழுதுதான் தொடக்கம். அவர்கள் சொன்னதுபோல, பாம்பு உள்ளே நுழைந்துவிட்டது, எனவே, அது படமெடுத்து ஆடுவதற்கு முன்பாக அதனுடைய நச்சுப் பல்லை பிடுங்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், அப்படிப்பட்ட ஒரு மாநாடு, உங்களைப் போன்றவர்கள், தமிழறிஞர்கள், இன உணர்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டமில்லாமல் எல்லோரையும் அழைக்கிறோம். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு மாநாட்டுத் திட்ட அறிவிப்பை கொடுக்கிறோம்.
நச்சுப் பாம்பின் பல்லை பிடுங்குவதற்குத்
தயாராக இருக்கவேண்டும்!
கலைஞர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள், சமஸ் கிருதத் திணிப்பா? சவுக்கை எடுங்கள் என்று சொன்னார்கள்.
அந்தப் பாம்பின் நச்சுப் பல்லை பிடுங்குவதற்குரிய கருவிகளோடு தயாராக இருக்கவேண்டும்.
ஆகவே, ஒன்றுபடுவோம், முறியடிப்போம்! ஒன்றுபடு வோம், முறியடிப்போம்! இதுதான் நம்முடைய முழக்கமாக இருக்கவேண்டும்.
எதிர்த்தாகவேண்டிய மகத்தான பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு
நம்முடைய பிள்ளைகளுக்கு இன்னும் தமிழே சரிவர பேச வரவில்லை. தமிங்கலம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழும், ஆங்கிலமும் கலந்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தினுடைய சாதனைகளில் ஒன்று, தனித்தமிழ் உணர்வு. அதனை அழிப்பதற்கான பெருமுயற்சிதான் சமஸ்கிருத திணிப்பு. வடமொழித் திணிப்பு. ஆகவே, எல்லா கோணங்களிலும் அதனை எதிர்த்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
எனவேதான், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. நம்முடைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறி, இந்தப் போராட்டத்தைத் தொடருவோம், தொடருவோம் என்று கூறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
சென்னை, ஜூலை 1- மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழர் தலைவர் தலைமை யில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழறிஞர்கள், கழகத் தோழர்கள், தோழியர்கள் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இன்று (1.7.2016) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பைக்கண்டித்து வானைப் பிளக்கும் கண்டன ஒலிமுழக்கங்களை அனை வரும் மிகவும் எழுச்சியுடன் எழுப்பினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். காங்கிரசு பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார். காங்கிரசு கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.பலராமன், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதியன், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் தலைமையுரை ஆற்றினார். தமிழர் தலைவர் ஆற் றிய கண்டன உரையின் போது, இப்போராட்டம் ஒரு தொடக்கமே என்றும், தமிழறிஞர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்புத் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் மாநாடு செப்டம்பருக்குள் நடைபெறும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அம்மாநாட்டில் மாபெரும் போராட்ட அறிவிப்பும் வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை மண்டல கழக மாவட்டங்களான தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழ கம், தொழிலாளரணி, இளைஞரணி, மாணவ ரணி, மகளிரணித் தோழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத் தினசாமி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம் பரம் மாவட்டத் தலைவர் தாம்பரம் முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும் முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதய குமார், வட சென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட் டச் செயலாளர் கு.ஆறுமுகம், ஆவடி மாவட்டச் செயலாளர் இல.குப்புராசு, கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் த.ஆனந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், மாநில மாணவரணி துணைச் செய லா ளர் நா.பார்த்திபன், மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.இர.சிவசாமி, புடையூர் சோழதரம் இராமதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அணித்தலை வர் வழக்குரைஞர் த.வீரசேகரன், அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரை ஞர்கள் செ.துரைசாமி, ம.வீ.அருள்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், சைதை எம்.பி.பாலு, தி.வே.சு. திருவள்ளுவன், வெ.மு.மோகன் மற்றும் பெரியார் களம் இறைவி, நாகூர் சி.காமராஜ், காரைக்குடி மாவட்டச் செயலாளர் என்னாரெசு பிராட்லா, பேராசிரியர் மங்களமுருகேசன், கவி ஞர் வா.மு.சே.திருவள்ளுவர், பேராசிரியர் சிவப் பிரகாசம், திராவிட இயக்க தமிழர் பேரவை மண் டல செயலாளர் சிந்தாதரிப்பேட்டை மாறன், வங்கிப்பணியாளர் கூட்டமைப்பு சேலம் ராஜூ, பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், புதுக்கோட்டை நகர செயலாளர் ரெ.மு. தர்மராசு உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
தென் சென்னை
மு.ந.மதியழகன், சா.தாமோதரன், மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.மஞ்சநாதன், வி.வளர்மதி, இரா.பிரபாகரன், பி.அஜந்தா, மு. காமாட்சி, சேத்துப்பட்டு பாபு, மயிலை பாலு, கோ.வீ.ராகவன், சி.செங்குட்டுவன், க.தமிழ் செல்வன், கு.சோமசுந்தரம், க.வெற்றிவீரன், அ.செல்வராசன், மு.சண்முகப்பிரியன், மு.ஈழ முகிலன், கு.செல்வேந்திரன், ந.இராமச்சந்திரன், ச.மகேந்திரன், மா.சண்முகலட்சுமி
வடசென்னை
கருங்குழி கண்ணன், கி.இராமலிங்கம், சொ. அன்பு, பெ.செல்வராஜ், செல்வம், இன்பக்கனி, முகிலரசன், அன்புச்செல்வன், ச.சிற்றரசு, வ.கலைச்செல்வன், நா.பார்த்திபன், இராசேந் திரன், பா.பார்த்திபன், தளபதி பாண்டியன், தமிழினியன், கருத்தோவியன், அம்பத்தூர் துரை, கு.ஜீவா, கதிரவன், அன்பு, சிங்காரவேலு, நாத்திகன் சேகர், பொன்.இராமச்சந்திரன், விஸ் வநாதன், அரங்க.நாராயணன், கணேசன், பெரி யார் திடல்: காரல்மார்க்ஸ், யுவராஜ், ரேவந்த், பழனிகுமார்
தாம்பரம்
கோ.நாத்திகன், மோகன்ராஜ், அனகை சரவணன், குணசேகரன், விடுதலை நகர் செயரா மன், கூடுவாஞ்சேரி ம.இராசு, நாகரத்தினம், விஜய் ஆனந்த், சன் பிரபாகரன், தமிழினியன், கூடுவாஞ்சேரி நூர்சகான், சோமசுந்தரம், பொய் யாமொழி, ஆ.அய்யப்பன், ஏசா, அர்ச்சுனன், கரைமாநகர் கண்ணதாசன், சன் யுவராஜ், செஞ்சி ந.கதிரவன்
பெரியார் நூலக வாசகர் வட்டம்
கி.சத்தியநாராயணன், கு.மனோகரன், ச.சேரன், பேராசிரியர் சிவப்பிரகாசம், பொன்.இராமச் சந்திரன், ஜெ.ஜெனார்த்தனன், கிண்டி.இராமச் சந்திரன், இரா.கோபாலன், அரங்கநாதன், அ.வெ.நடராசன், அ.சீ.அருணகிரி, ச.கணேசன், மூ.விசுவநாதன், கு.சோமசுந்தரன், பெ.சண்முகந £தன், இல.ராசாமணி
ஆவடி கழக மாவட்டம்
கோ.முருகன், பூ.ராமலிங்கம், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, கற்பகம், ராம துரை, மணிவண்ணன், உ.மோகனபிரியா, நடரா ஜன், முத்துகிருட்டிணன், உடுமலைவடிவேல், கலைமணி, கலை அரசன், தமிழ்செல்வன், தங்க. சரவணன், மனோகரன், பன்னீர்செல்வம், செல்வி முரளி, வெ.கார்வேந்தன், பழ.முத்துக்குமார், கோபால், விமலன், ஜெயபிரகாஷ், புகழேந்தி, ஜெயந்தி சிவக்குமார், கனகசபை, க.வனிதா, திராவிட பாண்டியன், வேலு, மணிமேகலை, உ.கார்த்தி.
கும்முடிப்பூண்டி கழக மாவட்டம்
க.சா.க.இரணியன், நாகராசன், ராஜ்குமார், ரவி.
மகளிரணி
சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, வளர் மதி, அஜந்தா, பசும்பொன், விஜயா, இளவரசி, மரகதமணி, சீர்த்தி, கலைமதி, பவானி, தமிழ் செல்வி, சுமதி, செல்வி, தமிழ்செல்வி, தமிழரசி, மாலதி, அருணா, சண்முகலட்சுமி, ஜெயந்தி, கனகா, மணியம்மை, பெரியார் பிஞ்சு: யாழ் தமிழ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
1) ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழக ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழக ஆர்ப்பாட்டம்
2) மத்திய அரசே, மத்திய அரசே
திணிக்காதே, திணிக்காதே -
சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
திணிக்காதே, திணிக்காதே -
சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
3) செத்துப்போன செத்துப்போன
சமஸ்கிருத மொழிக்கு
சிங்காரமா, சிங்காரமா?
சிம்மாசனமா, சிம்மாசனமா?
சமஸ்கிருத மொழிக்கு
சிங்காரமா, சிங்காரமா?
சிம்மாசனமா, சிம்மாசனமா?
4) பாரதிய ஜனதா அரசா
பார்ப்பனிய ஜனதா அரசா,
பார்ப்பனிய ஜனதா அரசா?
பார்ப்பனிய ஜனதா அரசா,
பார்ப்பனிய ஜனதா அரசா?
5) படையெடுப்பு படையெடுப்பு
சமஸ்கிருதத்தின் பெயராலே
பண்பாட்டுப் படையெடுப்பு!
சமஸ்கிருதத்தின் பெயராலே
பண்பாட்டுப் படையெடுப்பு!
6) முறியடிப்போம் முறியடிப்போம்
பண்பாட்டுத் திணிப்பை
முறியடிப்போம் முறியடிப்போம்!
பண்பாட்டுத் திணிப்பை
முறியடிப்போம் முறியடிப்போம்!
7) மத்திய அரசே மத்திய அரசே!
சமஸ்கிருதத்தின் பெயராலே
திணிக்காதே, திணிக்காதே
பார்ப்பனீய கலாச்சாரத்தை
திணிக்காதே - திணிக்காதே!
சமஸ்கிருதத்தின் பெயராலே
திணிக்காதே, திணிக்காதே
பார்ப்பனீய கலாச்சாரத்தை
திணிக்காதே - திணிக்காதே!
8) மக்கள் வரிப்பணத்தை
மக்கள் வரிப்பணத்தை
செத்த மொழிக்கு
கொட்டியழுவதா?
மக்கள் வரிப்பணத்தை
செத்த மொழிக்கு
கொட்டியழுவதா?
9) மத்திய அரசே மத்திய அரசே
ஆட்சி மொழியாக்கு
தமிழ் உட்பட தமிழ் உட்பட
ஆட்சி மொழியாக்கு
தமிழ் உட்பட தமிழ் உட்பட
22 மொழிகளையும்
ஆட்சி மொழியாக்கு!
ஆட்சி மொழியாக்கு!
10) இந்தியும் - சமஸ்கிருதமும்
ஆரியக் குடும்பத்தின்
மொழிகளே, மொழிகளே!
அனுமதியோம் அனுமதியோம்
ஆரிய படையெடுப்பை
அனுமதியோம் அனுமதியோம்!
ஆரியக் குடும்பத்தின்
மொழிகளே, மொழிகளே!
அனுமதியோம் அனுமதியோம்
ஆரிய படையெடுப்பை
அனுமதியோம் அனுமதியோம்!
11) இந்தி திணிப்பும், சமஸ்கிருத திணிப்பும்
இந்து ராஜ்ஜியத்தின்
ஏற்பாடே, ஏற்பாடே!
இந்து ராஜ்ஜியத்தின்
ஏற்பாடே, ஏற்பாடே!
12) ஆபத்து ஆபத்து
ஆரியத்தால் ஆபத்து,
மனுதர்மத்திற்கு மனுதர்மத்திற்கு
மகுடம் சூட்டும், மகுடம் சூட்டும்
ஆபத்து, ஆபத்து!
ஆரியத்தால் ஆபத்து,
மனுதர்மத்திற்கு மனுதர்மத்திற்கு
மகுடம் சூட்டும், மகுடம் சூட்டும்
ஆபத்து, ஆபத்து!
13) முறியடிப்போம் முறியடிப்போம்
தமிழரெல்லாம் தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு ஒன்றுபட்டு
முறியடிப்போம் முறியடிப்போம்!
சமஸ்கிருத ஆதிக்கத்தை
முறியடிப்போம் முறியடிப்போம்
சமஸ்கிருத பண்பாட்டை
முறியடிப்போம், முறியடிப்போம்!
தமிழரெல்லாம் தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு ஒன்றுபட்டு
முறியடிப்போம் முறியடிப்போம்!
சமஸ்கிருத ஆதிக்கத்தை
முறியடிப்போம் முறியடிப்போம்
சமஸ்கிருத பண்பாட்டை
முறியடிப்போம், முறியடிப்போம்!
14) அணிவகுப்போம், அணிவகுப்போம்
ஆரியத்தை முறியடிக்க
ஆரியத்தை முறியடிக்க
அணிவகுப்போம், அணிவகுப்போம்!
ஆரியத்தை முறியடிக்க
ஆரியத்தை முறியடிக்க
அணிவகுப்போம், அணிவகுப்போம்!
15) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
-விடுதலை,1.7.16
இன்று (26.6.16)மாலை 4.00 மணி அளவில் காமராசர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் எதிரில் சென்னை வானொலி நிலையம் அருகில் நொச்சி நகர் மற்றும் மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து 1.7.16 முற்பகல் 11.00மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டம் குறித்து விளம்பர நெகிழித்திரை வைக்கப்பட்டது.
-விடுதலை,27.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக