ஞாயிறு, 24 ஜூலை, 2016

சூளைமேட்டில் சமசுகிருத எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்


சூளைமேட்டில் சமசுகிருத எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்
 தென் சென்னை.மாவட்டத்தை சேர்ந்த சூளைமேடு, சௌராசுட்டிரா நகர் முதல் தெருவில்(நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் எதிரில்) 20.7.16 மாலை 6.30 மணியளவில் சூளைமேடு பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் சமசுகிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 
            சூளைமேடு பகுதி அமைப்பாளர் ந.இராமச்சந்திரன் தலைமையேற்றார்  மாவட்டத் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் வரவேற்புரையாற்றினார், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர். வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் மு.திருமலை, வெ.ஞானசேகரன், மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர். 
        பிறகு தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்களை  பலர் சந்தித்து கைகுலுக்கி பாராட்டினர்.
 கூடுவாஞ்சேரி மா.இராசு அவர்கள் புத்தக விற்பனை செய்தார்.
இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது. ஆர்.சுரேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
            தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், கோ.மஞ்சநாதன், கூடுவாஞ்சேரி மா.இராசு, எ.பழனி, ஆசிரியர் சா.இராஜேந்திரன், விடுதலை நகர் ஜெயராமன்தளபதி பாண்டியன், க.தமிழ்ச் செல்வன், ஆவடி மாவட்ட பொறுப்பாளர் க.பாலமுரளி, க.பெரியார் சேகர், சு.மோகன்ராஜ், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், கு.சோமசுந்தரம், புரசை.சு.அன்புச் செல்வன், கு.ஆறுமுகம், வீ.வீரமணி மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்றனர்.

மாவட்ட துணைச் செயலாளர் கோ,வீ.ராகவன் வரவேற்புரை 

சூளைமேடு பகுதி அமைப்பாளர் ந.இராமச்சந்திரன் தலைமையேற்றார்

அய்ஸ் அவுஸ் மு.திருமலை உரையாற்றிய போது...

மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள் உரையாற்றியபோது...

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,உரையாற்றிய போது...

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உரையாற்றிய போது...



வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் உரையாற்றிய போது..


மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை அவர்கள் உரையாற்றிய போது..



தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக