ஞாயிறு, 29 மே, 2016

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 29_ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 126_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2016) சென்னை காமராசர் கடற்கரை சாலையிலுள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கழகத் தோழர், தோழியர் புடை சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மோகனா வீரமணி, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன்.
சி.வெற்றிச்செல்வி, ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் செங்குட்டுவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பார்த்திபன், மயிலை சேதுராமன், கொடுங்கையூர் கு.தங்கமணி, தங்க.தன லட்சுமி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர் பசும்பொன்,
பொறியாளர் சீர்த்தி, வலைக்காட்சி கலைமதி பெரியார்திடல் சுரேஷ், எம்.ஆர்.ராதா மன்றம் எம்.ரங்கநாதன், அயன்புரம் மாடசாமி, அரும்பாக்கம் தாமோதரன், விமல்ராஜ், சங்கர், கலைமணி, கோபி.முரளி, பெரியார் பிஞ்சு கிஷோர், மகேஷ், ராஜ், காரல் மார்க்ஸ், ஜோசப், மு.பவானி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். திமுக சார்பில் முன்னாள் மேயர் சா.கணே சன் மீண்டும் கவிக்கொண்டல் கலைமாமணி மா.செங் குட்டுவன், முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கயல் தினகரன், பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன், கவிஞர் கண்மதியன், கவிஞர் பொன்னடியான் மற்றும் பலர் புரட்சிக் கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழக அரசு சார்பில், புரட்சி கவிஞர் பிறந்த நாளை யொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு செய்திதுறை சார்பில் அதன் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் அய்.ஏ.எஸ். இணை இயக்குநர் ஜெயசிறீ, உதவி இயக்குநர், சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி கலை நேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-விடுதலை,29.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக