வெள்ளி, 27 மே, 2016

கோ,வீ.ராகவனை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி


கோ,வீ.ராகவனை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி
தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு 18.2.16 அன்று முகப்பேர் எம்.எம்.எம்.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 23.2.16 அன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 29.2.16 அன்று நலம் பெற்று இல்லம் திரும்பினார்.
இன்று (22.5.16)முற்பகல் 10.30 மணி அளவில் சென்னை சூளைமேட்டில் உள்ள கோ.வீ.ராகவன் அவர்கள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்று நலம் விசாரித்தார். கோ.வீ.ராகவன் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார்.
செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், ச.மாரியப்பன், ந.இராமச்சந்திரன், க.தமிழ்ச்செல்வன், தளபதி பாண்டியன், தணிகாசலம் ஜானகிராமன், வீ.புவனேஷ்வரி, வீ.அருண், வீ.கலையரசி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக