சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 27_ வெள் ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று (27.4.2016) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியைத் தோற்றுவித்த மும்மணி களுள் முக்கியமானவரான வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் அவர் களின் 165ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2016) சென்னை ரிப்பன் மாளிகை முன்பு உள்ள அவரது சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் கழகத் தோழர் தோழி யர்கள் புடைசூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவி டர் கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன் றன், வெளியுறவு செயலா ளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் இ.சத்தியநாராயணன்,
பொருளாளர் மனோகர், செயலாளர் மா.சேரன், மாநில பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலா ளர் மஞ்சை வசந்தன், மாநில இளைஞரணி செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், பொதுக் குழு உறுப்பினர் நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநா தன், துணைத் தலைவர் செங்குட்டுவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா.முத்தய்யன், தாம்பரம் மோகன ராஜ், சோமசுந்தரம், சென்னை மண்டல மாண வரணி செயலாளர் மணி யம்மை,
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் ஒளிவண்ணன், துணைச் செயலாளர் செம்பியம் கி. இராமலிங்கம், வடசென்னை மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சா.முகிலரசு, தரமணி மஞ்சுநாதன், சேகுவாரா, சி.வெற்றிச்செல்வி, சுமதி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொறியாளர் சீர்த்தி, கொடுங்கையூர் தங் கமணி, தங்க.தனலட்சுமி, மரகதமணி, பவானி.
விடுதலை நகர் ஜெய ராமன், மேடவாக்கம் விஜய், ஆனந்து, ஆவடிராமலிங் கம், பெரியார் திடல் சுரேஷ், மகேஷ், இல.சங்கர், கலைமணி, காரல் மார்க்ஸ், அம்பேத்கர், உடுமலை வடிவேல் மற்றும் திரளான கழகத் தோழர் தோழி யர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக தியாக ராயர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு சர். பி.டி. தியாகராயர் பேரவைத் தலைவர் மகா பாண்டியன் பயனாடை அணிவித்து சிறப் பித்தார். சேகர் பதிப்பகம் வெள்ளையாம்பட்டு வெ.சுந் தரம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
-விடுதலை,27.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக