திங்கள், 6 ஜூன், 2016

அன்னை மணியம்மையார் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை
 
 
 அன்னை மணியம்மையாரின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது உருவச் சிலைக்கு தோழர், தோழியர்கள் புடைசூழ தமிழர் தலைவர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று  மலர்மாலை அணிவிக்கப்பட்டது (சென்னை, 10.3.2016)
சென்னை, மார்ச் 10- அன்னை மணியம் மையார் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் அவர்களை 95ஆண்டு காலம் வாழ வைத்த திராவிடர் கழகத்தின் வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2016) தமிழகம் முழுவதும் கழக தோழர்களால் சமூகப்பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சிலைக்கு மாலை அணிவிப்பு
சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையாரின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழர் - தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை


 நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்பு
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து தந்தை பெரியார் மறைவுக்கு பிறகு திராவிடர் கழகத்தை சிறப்பாக வழி நடத்திய அன்னை மணியம் மையார் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என உறுதி கூற அனைவரும் ஏற்றனர்.
பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார். முன்னதாக அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மகளிரணி, தொழிலாளரணி, திராவிடன் நலநிதி, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்  சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், ஸ்வென் வொர்ட்டேன், நடைன் ஸ்மிட்ஸ், நானா சிப்பல் ஆகியோர் அன்னை மணியம்யை£ர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளா ளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, திருமதி மோகனா வீரமணி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் சத்திய நாராயணன், பொறியாளர் சுந்தரராசலு, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல தலைவர் இரத்தினசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வடசென்னை திருவள்ளுவன் மற்றும் விடுதலை இராதா, பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய  மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், கணக்குப்பிரிவு அதிகாரி முத்துகிருஷ்ணன், திராவிடன் நலநிதி பொதுமேலாளர் அருட்செல்வன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத்தய்யன், தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்சாக்ரடீஸ், பெரியார் மணியம்மை மருத்துவமனை மேலாளர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழிலாளரணி
திராவிடர் தொழிலாளரணி சார்பில் செயலாளர் பெ.செல்வராஜ் மற்றும் துரை ராகவன், தமிழ் இனியன், நாகரத்தினம், இராமலிங்கம், பெரியார் மாணாக்கன் ஆகியோர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மகளிரணித் தோழியர்
மருத்துவர் மீனாம்பாள், சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, உமா செல்வராசு, சி.வெற்றிச்செல்வி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பெலா மு.சந்திரா, ஆவடி மாவட்ட மகளிர் பாசறை பூவை செல்வி, மோகனப்ரியா, பூங்குழலி, த.மரகதமணி, குஞ்சிதம், இந்திரா, செல்வி, பாக்யா, தமிழ்செல்வி, மீனாகுமாரி, ஜெயலட்சுமி, கங்காதேவி,  பவானி, சந்தியா, கலைமதி, சீர்த்தி, பா.சோபனா, மருத்துவர் தேனருவி, மீனா, சாந்தி, பா.சோ.யாழினி, பண்பொளி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை
ஆவடி - கும்மிடிப்பூண்டி
ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புராசு,  அம்பத்தூர் நகரத் தலைவர் இராமலிங்கம், செயலாளர் சிவக்குமார்,  மாவட்டத்துணை செயலாளர் பாலமுரளி, மதுரவாயல் திமுக இளைஞரணி நந்து, சரவணன்,  வ.கலைச்செல்வன், நா.பார்த் திபன், இராவணன், பா.சொ.அறிவுச்செல்வன், கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் புழல் த.ஆனந்தன், சு.நாகராஜ், வே.பாலு
வடசென்னை
வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், நாகூர் சி.காமராஜ்,  இளைஞரணித் தலைவர் புரசை  அன்புச்செல்வன், ஜீவானந்தம், திரு வொற்றியூர் இரா.சரவணன், ச.சிவராமன், இராவணன், அ.அருண்,  மருத்துவர் ஆருயிர், சண்முகம், முகிலரசு, பவழக்கடல்,  கமலேசுவரி, யுகன், சித்தார்த்தன் பெரியார், திராவிடசெல்வன்.
தென் சென்னை

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன் இளைஞரணி ச.மகேந்திரன்,  மு.ந.மதியழகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சண்முகப்ரியன், மு.ஈழ முகிலன், க.எழில், அருணாசலம், சைதை தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், விடுதலை செய்திப்பிரிவு மற்றும் அச்சகப்பிரிவு, பெரியார் வலைக்காட்சி, பெரியார் நூலக ஆய்வகம், பெரியார் புத்தக நிலையம், பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நலநிதி, கணக்குப்பிரிவு உள்ளிட்ட பெரியார் திடல் பணியாளர்கள் பங்கேற்றனர்.




அன்னை மணியம்மையார் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்கள் புடைசூழ சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி கூறி அனைவரையும் ஏற்கச் செய்தார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, பொதுச் செயலாளர், வீ. அன்புராஜ், மயிலை நா. கிருஷ்ணன்,  வீ. குமரேசன், த.க. நடராசன், க. பார்வதி, தங்கமணி மற்றும் கழகத் தோழர்கள்.  (சென்னை பெரியார் திடல், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக