ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தென் சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவரின் மனித நேய உதவி


சென்னை, டிச. 13_ சென் னையில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்மயா நகர், கோயம்பேடு பகுதி மிக வும் பாதிப்புக்குள்ளாகி யது. இப்பகுதியில் வாழும் நடுத்தர மற்றும் ஏழைகள் மிகவும் ஆற்றொண்ணா இன்னலுக்கு ஆளாகினர்.
வெளியூரிலிருந்து கட்டிட வேலைகளுக்காக இங்கு வந்துள்ள இரு நூற் றுக்கும் மேற்பட்டோர் நடைபாதைகளில் வசித்து வருகின்றனர். பல நாள் கள் தொடர்ந்து பெய்த மழையால் உண்ண உண வும், உடுக்க ஆடையும் படுக்க இடமுமில்லாது வேதனையடைந்தனர். அனைவரும் தாழ்த்தப்பட் டோர் மற்றும் பிற்படுத் தப்பட்டவர்கள் ஆவர். பெரியாரின் பெருந்தொண் டர் தங்கவேல் மற்றும் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங் குட்டுவன் அவர்களும் பெரும் பொருட் செலவில் அனைவருக்கும் ரொட்டி, பிஸ்கட், தேனீர், பழம் முதலியவற்றை 7.12.2015 அன்று கொட்டும் மழையில் அனைவருக்கும் வழங் கினார்.
-விடுதலை,13.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக