புதன், 23 டிசம்பர், 2015

தென்சென்னை கழகத்தின் சார்பில் வெள்ள துயர்துடைப்பு பணி-15.12.15


15.12.2015 அன்று மாலை பட்டினப்பாக்கம், டுமிங் குப்பம் மற்றும் சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமை யில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், இளைஞ ரணித் துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், செய. குசேலன், ச.துணைவேந்தன், பெரியார் சேகர், பிரகாஷ், வி.வளர்மதி, பி.அஜந்தா மற்றும் செய.சொப்னா ஆகி யோர் பிஸ்கட், புடவை, போர்வை, படுக்கை விரிப்பு, நைட்டி, பனியன், டி.சர்ட், சிறுவர் உடைகள் போன்ற வற்றை வழங்கினர். சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சமூக நல கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோருக்கு (குளிக்க, துவைக்க) மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் (ஒரு டேங்கர்) நிரப்பிக் கொடுக்கப்பட்டது.
-விடுதலை,23.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக