வெள்ளி, 25 டிசம்பர், 2015

பெரியார் நினைவு அமைதிப் பேரணி-24.12.15


தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளான 24.12.15 காலை 9.30 மணி அளவில் அண்ணா சாலை, பெரியார் பாலம்(சிம்சன்) தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து அமைதிப் பேரணியை தொடங்கிவைத்து, பெரியார் மையம்(பெரியார் திடல்,வேப்பேரி) வரை தானும் நடந்து வந்தார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 42ஆம்  ஆண்டு நினைவு நாள்
சிலைக்கு மாலை அணிவிப்பு, அமைதி ஊர்வலம் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

சென்னை, டிச.24_ 
பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2015) சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
தந்தை பெரியார் அவர்களின் 42ஆம் ஆண்டு   நினைவு நாளான இன்று (24.12.2015) திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழக மெங்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களாக குருதிக் கொடை, விழிக்கொடை, உடற்கொடை, இலவச மருத்துவமுகாம் மற்றும் பல்வேறு அறப்பணிகள் நடத்தப்பட்டன.
அண்ணாசாலையில் பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.
அமைதி ஊர்வலம்
அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள், கழகத் தோழியர்கள் புடைசூழ மலர்மாலைஅணிவித்தபின், அங்கிருந்து பெரும் திரளானவர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் இருவர் இருவராக அணிவகுத்து பெரியார் திடல் நோக்கி புறப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங் களின் சார்பில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், மகளிரணி, பாசறை பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணியினர் என பெருந்திரளானவர்கள் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மணியம்மையார் சிலைக்கு
மாலை அணிவிப்பு
அமைதி ஊர்வலம் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வந்தடைந்தவுடன் அன்னை மணியம் மையார் சிலைக்கு மகளிரணி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
பெரியார் திடலில் பெரியார் சிலைக்கு
மாலை அணிவிப்பு
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திட லுக்கு அமைதி ஊர்வலம் வந்தடைந்தவுடன், தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்தார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மரியாதை
தொடர்ந்து தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங் களில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதி மொழியைக் கூற, திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் பெ.செல்வராசு, அசோக் லேலண்ட் மதிவாணன், துரை.ராகவன் ஆகியோர் தொழிலாளர் கழகம் சார்பில் மலர் வளையம் வைத்தனர்.
திராவிடன்  நலநிதி சார்பில் மேலாளர் அருட்செல்வன், பெரியார் மணியம்மை மருத்துவ மனை சார்பில் மருத்துவர் மீனாம்பாள், பல் மருத்துவர் தேனருவி ஆகியோரும், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் சார்பில்  ஒருங்கிணைப் பாளர் ராஜேஷ், பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் மயிலை நா.கிருஷ்ணன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வங்கிப்பணியாளர்கள் சங்கம்  சார்பில் கோ.கருணாநிதி, சேலம் பார்த்தசாரதி, ராஜூ மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங் களில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மோகனா அம்மையார், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்  வா.நேரு, பகுத்தறிவாளர் கழக மாநிலத்துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன்,
வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி. இரா. இரத்தின சாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம்.  வழக்குரை ஞரணி மாநில அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  தமிழன் பிரசன்னா (திமுக), பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்தியநாராயணன்,
பொருளாளர் கு.மனோகரன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை.வசந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தூத்துக்குடி பேரா சிரியர் பெரியாரடியான், சிந்தாதிரிப்பேட்டை பால கிருஷ்ணன்,  வழக்குரைஞர் ரத்தினக்குமார்,
சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரட்டீஸ், செம்பரிதி இதழாசிரியர் ஏ.கிறிஸ்டோபர், தொலைத் தொடர்பு தொமுச மாநில துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெங்களூரு முத்துச்செல்வன், சுப.சீத் தாராமன் (திமுக), விழிகள் பதிப்பகம் வேணுகோபால், மயிலை கோ.செல்வராசு,
மயிலாடுதுறை அரங்க. பொய்யாமொழி, பெரியார் திடல் மேலாளர் ப.சீத் தாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், முத்துக்கிருஷ்ணன், ஜெயராஜ், ஆடிட்டர் இராமச்சந்திரன்,வழக்குரைஞர் ஜெ.துரைசாமி பொறியாளர் சுந்தரராஜுலு
வடசென்னை
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன்,  மாவட்டத் துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணை செயலாளர் செம்பியம் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சொ.அன்பு, இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன், இளைஞரணி பா.தளபதி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, புரசை பாலமுருகன்,  நாகூர் சி.காமராஜ், சி.பெரியார் செல்வன், தி.சே.கோபால், பெரம்பூர் மும்மூர்த்தி, து.தியாகராஜன்,  குமார், முத்தமிழ்நகர் வி.பிரபாகரன்,
ச.முகிலரசு, ஏ.மணிவண்ணன், புதுவண்ணை செல்வம், அர.சிங் காரவேலு, ஆ.சீ.அருணகிரி, மங்களபுரம் விக்ரம் சூர்யா, வி.சிவா விக்ரம், வி.ஏஞ்சலின், வி.ஜானகி, கயல்விழி, வி.கிறிஸ்டோபர், வி.மோனிஷா, ஜெய குருநாதன்,   ஏழுகிணறு கதிரவன், கருத்தோவியன், திருவொற்றியூர் கணேசன், பாலு, ஆர்.சத்தீஷ், பகுத்தறிவாளர் கழகம் சி.செங்குட்டுவன், ராயபுரம் நாகேந்திரன், ஓட்டேரி சி.சிட்டிபாபு,  பாஸ்கர்,
அயன் புரம் பொன்.மாடசாமி, வழக்குரைஞர் மூர்த்தி,      அருள் தமிழ்செல்வம், சோழவரம் சக்கரவர்த்தி, பு.ஜீவா, சு.அன்பு, கண்ணதாசன் நகர் கிளைத் தலை வர் கு.ஜீவா, வாசகர் வட்டம் ஜனார்த்தனன், நா.பார்த்திபன், கலைச்செல்வன், சிவராமன், செந்தமிழ், முகிலரசன், சண்முகம், கெடார் மூர்த்தி, வேலவன், புகழேந்தி, அன்பு, தோட்டக்காரர் கண்ணன்
தாம்பரம்
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தாம்பரம் ஆ.இர.சிவசாமி, மோகன்ராஜ், குணசேகரன், பிரபாகரன், வீரசுந்தர், ஓட்டுநர் அகரன், காத்திகேயன், பிரபாகரன், பொழிசை கண்ணன், கிருஷ்ணமூர்த்தி,  மேடவாக்கம் விஜய் ஆனந்த், போக்குவரத்து தொழிலாளர் கழகம் நாகரத்தினம், இராமலிங்கம், பழனிபாலு, பீர்க்கங்கரணை சு.மனோகரன், இர.சுரேசு, ம.கார்த்திக், இரா.கதிரவன், கூடுவாஞ்சேரி மா.ராசு, கலாநிதி, கோவிலஞ்சேரி புலவர் சங்கரலிங்கம், ஊரப்பாக்கம் அரங்க.பொய்யாமொழி
ஆவடி
ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புராசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், புழல் ஆசிரியர் இராசேந்திரன், இரகுபதி, சாக்ரட்டீஸ், கி.ஏழுமலை, பூ.இராமலிங்கம், முத்து கிருட்டிணன், மாணவரணி அமைப்பாளர் எழில், இராமதுரை, அம்பத்தூர் அரிதாஸ், பெரியார் மாணாக்கன், கலைமணி, தமிழ்செல்வன், சரவணன், வேலன், தொண்டறம்,
மதுரவாயல் பாலமுரளி, ஆவடி சோமசுந்தரம், கொரட்டூர் கோபால், கனகசபை, கார்வேந்தன், பட்டறைவாக்கம் முத்துக்குமார், கலை யரசன், ஆவடி குருசாமி, காரல் மார்க்ஸ், சமத்துவ மணி, கொரட்டூர் அமரன் (திமுக இளைஞரணி), வானகரம் மனோகரன், கொரட்டூர் கழகக் கிளைத் தலைவர் ஜெயபால், இளவழகன், ஆவடி தமிழ்மணி, குற்றாலம் கோவிந்தராஜ்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயக் குமார், செயலாளர் த.ஆனந்தன், துணைசெயலாளர் ப.சக்கரவர்த்தி, புழல் ஒன்றிய செயலாளர் சனாதிபதி, புழல் நகர செயலாளர் க.சா.க.இரணியன், துணை செயலாளர் நாகராஜ்,  நகர அமைப்பாளர் சோமு, பொன்னேரி நகரத் தலைவர் வே.அருள், இளை ஞரணித் தலைவர் மல்லிகார்ஜுன், ராஜ்குமார், கீழ்முதலம்பட்டு முரளி, பெரியபாளையம் அருணகிரி, தமிழ்செல்வன், காந்திநகர் இராசேந்திரன், ஓவியர் பாசுகர், வீரவேங்கை
தென்சென்னை
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  அமைப்பாளர் சி.செங்குட்டுவன், கோ.வீ.இராகவன்,  அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை டி.ஆர்.சேதுராமன், ந.இராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் மு.சண் முகப்பிரியன், இரா.பிரபாகரன், சைதை மு.ந.மதியழகன், மு.திருமலை, க.தமிழ்செலவன், அடையாறு ந.மணித் துரை, கோடம்பாக்கம் ச.மாரியப்பன், க.விஜயராஜா, டிஜிட்டல் மகேந்திரன் மந்தைவெளி போ.சிவக்குமார், பிரகாசம், கோ.செல்வராசு, ச.துணைவேந்தன், அ.தம்பிதுரை, அ.செல்வராசன்.
மகளிரணித் தோழியர்கள்
சி.வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, தங்கதனலட்சுமி, நல்லினி ஒளிவண்ணன், பேராசிரியை இசையமுது,  சந்திரா முனுசாமி, பெரியார் களம் இறைவி, கற்பகம், ஜெயா தென்னரசு, மணிமேகலை, கீதாஇராமதுரை, செல்வி முரளி, வேப்பம்பட்டு ப.எழிலரசி, க.வனிதா, பாசறை சுகந்தி, இளந்தென்றல் மணியம்மை, கனி மொழி கலையரசன், வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி,
வி.வளர்மதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, பி.அஜந்தா, மு.பவானி, ஜான்சிராணி, கவின், சந்தியா, பூங்குழலி, பூவிழி, யாழினி, பசும்பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, தமிழீழம், மரகதமணி, சோபனா, கலைமதி, கோமதி, செந்தமிழ்செல்வி, வசந்தி, மீனாகுமாரி, ஜோஸ்மின் சகாயமேரி,  பூவை செல்வி, பா.யாழினி, யாழினி மீனா, குஞ்சிதம் நடராசன், இன்பக்கனி, ஆருயிர், சுமதி, வெண்ணிலா, சி.தே.கீதா, இந்திரா, தமிழ்செல்வி, எழிலரசி, வெண்ணிலா, பல்லவி, அருள்மதி, தமிழரசி, விஜயா, பெரியார் செல்வி, மேகலா, வனிதா, மோகனப்ரியா.
பெரியார் பிஞ்சுகள் இனநலம், வேலவன் செவ்வி யன், தென்றல் மணியம்மை, இன்சொல், தொண்டறம், அறிவுச்செல்வன், பாவேந்தன், கிறிஸ்டோபர், சித்தார்த் தன், ஆற்றல் அரசி, சமத்துவமணி, காரல்மார்க்ஸ், அறிவுச்செல்வி, அறிவுமதி, கமலேசுவரி, பரமேசுவரி.
விடுதலை சிறுத்தைகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், ஈரோடு பெருந்துறை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் (சிபிஅய்) பெரிய சாமி மற்றும் பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இராமகிருஷ்ணன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மேலாளர் குணசேகரன் மேற்பார்வையில் காலைமுதல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் இரத்தப்பரிசோதனைகள் நடைபெற்றன. மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினார்கள். குருதிக்கொடை மற்றும் விழிக் கொடை, உடற்கொடைகளுக்கான பதிவுகளும் ஏராள மான அளவில் நடைபெற்றன.
-விடுதலை,24.12.15


-விடுதலை,26.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக