
சென்னை, மே 11 அன்னை நாகம்மையார் அவர்களின் 93ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்.
தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, வைக்கம் போராட்டத்தை நடத்திய பெருமைக்குரியவர் அன்னை நாகம்மையார் ஆவார்.
இவ்வளவு பெருமைக்குரிய அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (11.5.2026) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க. சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதே போன்று அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊ. ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.சே. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், பேராசிரியர் ப. சுப்பிரமணி, சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பசும்பொன் தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தைய்யன், செயலாளர்
கோ.நாத்திகன், சு.மோகன் ராஜ், இரா.குணசேகரன், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மயிலை சேதுராமன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், சி.ஜான்சன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கருப்பைய்யா, கொடுங்கையூர் கோ. தங்கமணி தி.செ. கணேசன்,ப. கோபாலகிருஷ்ணன், பெரியார் மாணாக்கன், மு. செல்வி, கற்பகம் மற்றும் பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக