வெள்ளி, 31 அக்டோபர், 2025

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மாட்சிகள்! (மறைமலைநகர் – 4.10.2025)

 சென்னை, அக். 4- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இன்று (4.10.2025) காலை செங்கை மறைமலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.

செங்கை மறைமலை நகருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கழகக் கொடி ஏற்றினார் தமிழர் தலைவர்

இதனைத் தொடர்ந்து பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கழகத் தலைவர் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக காலை 8.30 மணியளவில் மாநாட்டுத் தொடக்க நிகழ்வாக ஆழ்வார் பேலஸ் – பெரியார் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுத் திடலில் சுயமரியாதை முழக்கம் – கலை நிகிழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து அங்கு பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சாமி நினைவுப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த “சுய மரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி” வரலாற்றுக் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

இராசகிரி கோ.தங்க ராசு – அ.கோ.கோபால்சாமி நினைவு மேடையில் தொடங்கிய மாநாட்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் உரையாறறினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் மாநாட்டின் தலைவரை முன்மொழிந்தார். திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் தலைவரை வழி மொழிந்து உரையாற்றினர்.

மறைமலைநகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டுக்கென்று பல அரங்குகள் அமைக்கப்பட்டு – பங்கேற்க வருவோருக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
1. தீபம் மருத்துவமனை – பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து மருத்துவத்திற்கான அரங்கம்.
2. தீ அணைப்பு, குடிநீர் வசதி.
3. இரு சக்கர வாகனங்கள், கார், வேன், பேருந்து நிறுத்துவதற்கான தனித்தனி இடவசதி.
4. திருச்சி – திண்டிவனம் – சென்னை மார்க்கமாக மாநாட்டிற்கு சாலை வழிப் பயணம் மேற்கொள்ளும் தோழர்கள் காலையில் குளித்துப் புறப்பட செங்கற்பட்டுக்கு முன்பே இடவசதி.
5. தோழர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு!
6. சமூகக் காப்பு அணித் தோழர்களுக்கு முதலுதவிப் பயிற்சி!
7. புத்தக விற்பனை உள்பட பல்வேறு அரங்குகள்!

இம்மாநாட்டிற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு (விசிக), திராவிடர் கழகத் தெழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, திராவிட விவசாயத் தொழிலாளரணி மாநில செயலாளர் வீ.மோகன், தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.சி.வில்வம், கருநாடக மாநில திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இர.சிவசாமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், தே.எடிசன்ராஜா, இராஜ பாளையம் இல.திருப்பதி, ஆண்டிமடம் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு

பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறு வனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் சுயமரியா தைச் சுடரொளிகளின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மூத்த பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பாராட்டு நிகழ்வு நடை பெற்றது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.

வெல்லட்டும் சுயமரியாதை மாநாடு!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்து

சென்னை, அக். 4- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சாதி ஏற்றத்தாழ்வுகளாலும், பாலின வேறுபாடுகளாலும் அழுந்திக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்கப் புறப்பட்டது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஓர் இயக்கம்!
அந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!
தமிழர்களின் மானம் காக்க புறப்பட்ட அந்த இயக்கம், ஒரு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பதையொட்டி, இன்று (4.10.2025) சென்னை, மறைமலை நகரில், திராவிடர் கழகம் ஒரு பெரும் மாநாட்டை முன்னெடுக்கிறது!
இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில், திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கும், நம் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னின்று நடத்தும் அம்மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்!
இது திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டாலும், இம்மாநாடு – நம் மாநாடு – தமிழர்களின் மாநாடு – எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாநாடு!
வெல்லட்டும் சுயமரியாதை மாநாடு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்டு உரை யாற்றினார்.

விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலை வர் நாடாளுமன்ற உறுப் பினர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன், உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி-12) நூலை வெளியிட்டு உரையாற்றினார். ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் முற்பகல் தலைமைப் பேருரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் நன்றியுரை கூற, வி.கே.ஆர். பெரியார் செல்வி இணைப்புரை வழங்கினார்.

தீர்மான அரங்கம்

இதைத் தொடர்ந்து தீர்மான அரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமையுரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப்புரை வழங்க, முக்கிய தீர்மானங்களை தமிழர் தலைவர் முன் மொழிந்தார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் தீர்மானங்களை முன் மொழிந்தனர். இத்துடன் முற்பகல் நிகழ்வு நிறை வுடைந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை

இம்மாநாட்டில் மாலை நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் மக்கள் திரள் (மறைமலைநகர் – 4.10.2025)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்



''உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு'' (தொகுதி – 12) நூலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரா.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். கொண்டார்.

திராவிடர் கழகம்

'விடுதலை' தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் வெளியிட, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம். ெஹச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

மாநாட்டுக்கு வருகை தந்த
தமிழர் தலைவருக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

மாநாட்டு அரங்கத்தில் கழகக் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு


யூ டியூப் காணொலி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக