
'தினத்தந்தி' நாளிதழின் நிறுவனரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் மேனாள் தலைவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121ஆவது பிறந்தநாளான இன்று (27.9.2025) காலை சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வை. கலையரசன், மகேஷ், அசோக், பூவரசன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-விடுதலை நாளேடு,27.09.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக