செவ்வாய், 4 மார்ச், 2025

ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

* 1938ஆம் ஆண்டிலேயே ஹிந்தியை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியவர் தந்தை பெரியார்

* ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு!
* ஹிந்தியை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு என்பதுதான் ஜனநாயகமா?
* இது வெறும் கட்சிப் போராட்டமல்ல – மக்கள் போராட்டம்
* 234 இடங்களிலும் எங்களை வெற்றி பெற வைக்கப் போகிறீர்கள்!
இறுதி வெற்றி எங்களுக்குத்தான் – நாங்கள் இங்கு
ஒன்றுபட்டு நிற்கிறோம் – போர்ச் சங்கு ஊதுகிறோம்!

சென்னை, பிப்.19 தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கான 234 இடங்களிலும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும் நிலையை ஹிந்தியை திணிப்பதின்மூலம் ஒன்றிய அரசே ஏற்படுத்துவதாகவும், ஒன்றுபட்டு நிற்கின்ற எமக்கே இறுதி வெற்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
நேற்று (18.2.2025) மாலை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மும்மொழித் திணிப்பைக் கண்டித்து இந்தியா கூட்டணியின் சார்பில் சென்னை சிங்காரவேலர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரைற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் கூடியிருக் கின்ற இந்தக் கூட்டம் – இந்தக் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் புதுமையான ஓர் அறைகூவல் கூட்டம்.
நம்மை வம்புக்கு இழுக்கக் கூடிய ஓர் ஆட்சி – ஒன்றிய ஆட்சி- காவி ஆட்சி – ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி- தூங்காதே, எங்களை எதிர்த்து நில் என்று சொல்வதற்காக ஹிந்தி திணிப்பின் மூலமாக, தங்களுடைய முடிவுரையை எழுதக் கூடிய ஓர் ஆட்சி – இப்போது தயாராக வந்திருக்கின்ற நேரத்தில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு மாறுதலை தெளிவாக நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அய்யா, அண்ணா தத்துவம்
இங்கே அமைச்சர்கள் இருக்கிறார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள், போராட்டக் களத்தையே வாழ்வாகக் கருதிக் கொண்டிருக்கின்ற எண்ணற்ற தோழர்கள் இங்கே இருக்கிறார்கள். இவ்வளவு திரளாக வந்திருக்கக்கூடிய மக்கள், கண்டனம் தெரிவிக்கக்கூடிய இந்தக் கூட்டத்தினுடைய அடிப்படை என்னவென்று சொன்னால், இதுவரையில் கண்டன ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி என்று சொன்னால், அதில் தலைவர்கள் இருப்பார்கள், பேசுவார்கள்.
ஆனால், இங்கே நம்முடைய துணை முதலமைச்சர் உள்பட, அமைச்சர்கள் உள்பட எல்லோரும் கலந்துகொள்கிறார்கள் என்றால், அண்ணா அவர்கள் சொன்ன தத்துவம், அய்யாவின் கருத்தோட்டம் இவை அத்துணையும் இங்கே முன்னால் நிற்கிறது- இந்தத் திணிப்பை எதிர்க்கின்ற, கண்டனத்தைத் தெரிவிக்கின்ற கூட்டம் இது!
மிரட்டிப் பார்க்கிறார்கள்!
அது என்னவென்று சொன்னால், அவர்கள் மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்; இந்த ஆட்சியை கொஞ்சம் உருட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

நிதியைத் தராமல் நாம் கொஞ்சம் இழுத்துப் பார்த்தால், இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், உங்கள் கனவு பலிக்காது; இது தமிழ் மண்; இது பெரியார் மண், திராவிட மண்; இந்த மண் உரிமை முழக்கத்தைச் சொல்லக்கூடிய மண் என்ற காரணத்தினால்தான், இங்கே எங்கள் துணை முதலமைச்சரிலிருந்து, அமைச்சர்கள்வரை இந்தப் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள், கலந்து கொண்டிருக்கின்ற தலைவர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இரு மொழித் திட்டத்திற்கு வித்திட்ட நம்முடைய அண்ணா அவர்கள், முதலமைச்சராக இருந்த காலகட்டத் திலும் சொன்னார்கள்; பல நேரங்களிலும் சொன்னார்கள். எங்களை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கக் கூடாது என்பதற்காகச் சொன்னார்கள்.

‘‘எங்களுக்குப் பதவி என்பது அது மேல் துண்டு. ஆனால், கொள்கை என்பது எங்களுக்கு வேட்டி போன்றது -அதை மறந்துவிடாதீர்கள்’’ என்று அண்ணா சொன்னார்!
அதனை உணர்ந்த காரணத்தினால்தான், நாம் ஒன்றிய அரசை எதிர்த்து, அவர்களுடைய கொள்கைகளை எதிர்த்து முழங்கப் போகின்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா? என்று யாரும் நினைக்கவில்லை.

தாளமுத்து நடராசன் பரம்பரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தில், அமைச்சர்களாக இவர்கள் வரவில்லை; கொள்கைக்காரர்களாகத்தான் வந்திருக்கிறார்கள். தாளமுத்து, நடராசன் பரம்பரை என்பதைக் காட்டுவதற்காகத்தான் வந்திருக்கின்றார்கள்.
அந்த உணர்வோடுதான் இந்தக் கண்டனக் கூட்டம், தலைவர்களின் முழக்கங்கள் அத்தனையும் நடைபெறு கின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றெல்லாம் தொடங்கி, ஒரே கலாச்சாரம் என்று வந்தார்கள்.
அந்த ஒரே கலாச்சாரத்தில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, அந்தச் சூட்சமத்தை தந்தை பெரியார் அவர்கள், 1938 இல், தமிழறிஞர்களை கூட்டி, சிறப்பாகச் சொன்னார்.

வட சென்னைதான் தொடக்கம்!
நம்முடைய மொழி என்பதற்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. இதே வடசென்னைதான் அப்போதும் அடித்தளமிட்டது. அதே வடசென்னைதான் மீண்டும் ஒரு போர்க் குரலை எழுப்புவதற்கு களம் காணுவதற்காக வந்திருக்கிறது. தொடக்கம் இங்கேதான் – முடிவும் இங்கேதான் நடக்கப் போகிறது.
எங்கே தொடங்கினார்களோ ஹிந்த ஆதிக்கத்தை – அதன் முடிவு வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு அடையாளம் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய துறையில் மிக முக்கியமாக இருக்கக்கூடியது – பண்பாட்டுத் துறை.
ஹிந்தியை நீங்கள் எதிர்க்கிறீர்களே என்று சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் ஹிந்தியைத் திணித்தார்கள். இப்போது இருக்கின்ற காவி அமைச்சர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

ஆச்சாரியாரின் அறைகூவல்!

நீங்கள் ராஜகோபாலாச்சாரியாரைவிட மிகவும் புத்திசாலி என்றோ, அரசியல் வியூகத்தை வைத்திருக்கின்றோம் என்றோ யாரும் தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
எந்த ஆச்சாரியார்?
அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த அந்தப் போராட்டம் – அறிஞர் அண்ணா, ‘‘சர்வாதிகாரி’’ என்று அந்தப் போராட்டத்தில் சர்வாதிகாரியாக இருந்தார். இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியவேண்டும்.
இன்று, இளைஞர்களுக்கே தலைமை தாங்கக் கூடிய ஒருவர், இந்தக் களத்திலே நின்று கொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவருக்குப் பதவி முக்கியமல்ல; அவருக்குத் துண்டு முக்கியமல்ல; வேட்டிதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கொள்கைதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எங்களுடைய துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் என்ற முறையில் அவர்கள் இங்கே வரவில்லை. அதற்குப் பதிலாக, இந்த இயக்கத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தொண்டர்கள் என்ற உரிமையோடு அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள் என்று சொன்னால், இங்கே எழுதாத இந்த சுவரெழுத்தை எழுதிக் கொள்ளவேண்டும்.
அண்ணா அவர்கள் அந்த முழக்கத்தைத்தான் சொன்னார்கள். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போர் நடந்தது என்று வரலாறு உண்டு. இந்த வரலாற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
ராஜகோபாலாச்சாரியார் அன்றைக்கு தோற்றுப் போனார். ஆனால், இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது – வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், ஒன்றை அடையாளத்திற்குச் சொல்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இங்கே வந்து இருக்கக்கூடிய என்.வி.என். சோமுவின் மகள். அன்று நடந்த போராட்டத்தில் கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் ஹிந்திப் போராட்டத்திற்காக சிறைச்சாலையேகினர். சிறையிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டபோது, ஆட்சிக்கு வருவோம்; நாம் அமைச்சர்களாக ஆவோம்; அல்லது பதவிகளைப் பெறுவோம் என்று நினைக்கவில்லை.

பதவியல்ல முக்கியம்!
உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறதே தவிர, வெறும் பதவி என்பது உரிமைப் பெறுவதற்கான ஒரு வழி – ஒரு மார்க்கமே தவிர வேறொன்றுமில்லை.
அப்போது ஆச்சாரியார், ‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா?” என்று கேள்வி கேட்டார்.
அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார்.
காலத்தின் கோலம் எப்படி ஆயிற்று என்று சொன்னால், ஹிந்திதான் இருக்கும் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு நாணயமான எதிரி என்கின்ற காரணத்தினால் வெளியிட்டார்.
‘‘ஹிந்தியை நாங்கள் கட்டாயப் பாடமாக்குவதற்கு அடிப்படை, வெறும் ஹிந்திக்காக அல்ல; சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவேண்டும்’’ என்பதற்காகத்தான் என்று, லயோலா கல்லூரியில் அவர் பேசினார்.
இப்போதும் புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுடைய சூட்சமத்தை! வெறும் ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. திணிப்பு எங்கே இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், திராவிடர் இயக்கமும், தி.மு.க. கூட்டணியும் எந்நாளும் எதிர்த்தே தீரும் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அதைவிட ஆழமான ஒரு தத்துவம் உண்டு – அதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு!

மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கின்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்காகச் சொல்கிறேன்.
இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு – சமஸ்கிருதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு – பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி மொழிகள் பகுதியில் இடம்பெறுகிறபோது என்ன சொல்லியிருக்கின் றார்கள் என்று சொன்னால்,
According to the Indian Constitution, “Hindi in Devanagari script” is the official language of the Union, as stated in Article 343(1)
தயவு செய்து இதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். Devanagari script என்று சொன்னால், தேவ பாஷை.
சமஸ்கிருதம் மட்டும்தான் தேவ பாஷையாம். நம்முடைய தமிழ் மொழி நீஷ பாஷையாம்.

செம்மொழியானது கலைஞரின் முயற்சியால்

தமிழ் மொழியை, செம்மொழியாக்கித் தந்த தலைவருடைய மேடை இந்த மேடை. கலைஞர் அவர்கள் அதனை செய்தார்.
அப்படிப்பட்ட தமிழ் மொழியை, செம்மொழியை நீஷ பாஷை என்று சொல்கிறார்கள்.
கோயிலில் கடவுளுக்குத் தமிழ்மொழி புரியாதா? என்று கேட்டவர்கள் நாம். இதோ செய்கிறோம் என்று சொல்லி, தமிழில் அர்ச்சனை என்று சாதனை செய்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி.
எனவே, இந்த ஆட்சி தத்துவங்களை, கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சி.
அந்தக் காலட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘இது சமஸ்கிருத ஆதிக்கம்’’ என்று. தமிழறிஞர்கள், மறைமலையடிகள் போன்றவர்கள் எல்லாம் திரண்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சிக் காலத்தில், ஹிந்தியை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போராட்டத்தில் எங்கள் தோழர்களைப் பலியாக்கி, தாளமுத்து நடராசனுக்கு அண்மையில்தான் நினைவிடத்தைப் புதுப்பித்தார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் – திராவிடத்தினுடைய தனிப்பெரும் தலைவராக இன்றைக்கு இந்தியாவே பார்த்து அலறக்கூடிய அளவிற்கு அவருடைய முழக்கங்களும், உரிமைகளும் இருக்கின்றன.
நீ, திமிர்த்தனமாகப் பேசாதே, உன் திமிரை இறக்கிக் காட்டக்கூடிய ஆற்றல், தமிழ் மண்ணுக்கு உண்டு; தமிழர்களுக்கு உண்டு என்று அவர்கள் உரையடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆச்சரியார் என்ன சொன்னார்?
அதே ராஜகோபாலாச்சாரியார், பிறகு என்ன சொன்னார் தெரியுமா?
யாரோ ஒருவர் இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய அவருக்கு நாங்கள் சொல்கிறோம்.
ராஜாஜியை நீங்கள் வெறும் கவர்னர் ஜெனரலாக மட்டுமே படித்திருப்பீர்கள்; ஆனால், அதே ராஜாஜிதான், 1938 இல், ஹிந்தியைத் திணித்தார்.
‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கயரா?’’ என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. இதுபோன்ற மேடைகளில், ஆச்சாரியாரையே அண்ணா அவர்கள் அழைத்து, ஒரு முழக்கம் கொடுத்தார்.
இந்த வரலாற்றை, இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் – மும்மொழித் திட்டம்தான் என்று ஆணவத்தோடு பேசக்கூடியவர். இன்னுங்கேட்டால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல, திமிர்த்தனத்தோடு பேசினால், உன் திமிரை இறக்கிக் காட்டுவதற்குத் தமிழ்நாட்டில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.

அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்களுக்கு நினைவூட்டுகிறோம்; டில்லிக்கு நினைவூட்டுகிறோம்.
ஆச்சாரியார், இதுபோன்ற மேடையில் அமர்ந்தார்; திராவிட மேடையில் வந்து அமர்ந்தார். அப்படி அமர்ந்தது மட்டுமல்ல, ஒரு புதிய முழக்கத்தைக் கொடுத்தார்.
வாழ்நாளிலேயே பெரியார், அந்த வெற்றியைப் பார்த்தார்; அண்ணா பார்த்தார், இந்த இயக்கம் பார்த்தது.
இன்னமும் உங்கள் காலத்திலும் காட்டப் போகிறோம்; நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள்.
ராஜகோபாலாச்சாரியார் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘Hindi Never; English Ever’’ என்று சொன்னார்.
எந்த ஹிந்தியை ஆச்சாரியார் திணித்தாரோ, அந்த ஆச்சாரியாரையே பணிய வைத்து, வளைய வைத்தது, இந்த இயக்கம், ஹிந்திக்கு இங்கே வேலையில்லை என்று சொல்ல வைத்தது.

English Ever என்பது அப்புறம்; Hindi Never என்பதற்கு என்ன பொருள்?
ஒருபோதும் ஹிந்தி வராது என்று, கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஆச்சாரியார் சொன்னாரே, அவரைவிட நீங்கள் என்ன மிகப்பெரிய அறிவாளிகளா?
எனவே, இந்த மேடை வெறும் அலங்கார மேடையல்ல; அறைகூவல் மேடையாகும்.
நிதிக்கும் மறுப்பு – நீதிக்கும் மறுப்பு!
அரசமைப்புச் சட்டத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமை இது. நிதி வேண்டும் என்று உங்களிடம் கேட்டபோது, நிதியையும் மறுக்கிறீர்கள்; நீதியையும் மறுக்கிறீர்கள்.
சமூகநீதிக்கும் இடந்தர மறுக்கிறீர்கள். உங்களிடத்தில் நாங்கள் சலுகையோ, பிச்சையோ கேட்கவில்லை. நாங்கள், எங்களுடைய பணத்தைத்தான் உரிமையோடு கேட்கிறோம்.

எனவேதான், எங்களுடைய உரிமைகளை நிலை நாட்டுகின்ற உரிமைப் போராட்டம்தான் இந்தப் போராட்டம்.
எனவே, இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்ற நேரத்தில், ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால், அடுத்து, நம்முடைய இளைஞர்களை எழுப்பி, இந்த ஆட்சியினுடைய கொள்கை என்ன? என்பதை எடுத்துக் காட்டும் வகையில், ‘‘முறியடிக்கப்படாத முப்பெரும் சாதனைகள்’’ என்று புத்தகமே போட்டிருக்கின்றோம்.
அண்ணா அவர்கள் ஓராண்டு ஆட்சியில் இருந்தார்கள். அந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு ஆவணம் போன்றது.
இங்கே நம்முடைய வைகோ அவர்கள் சிறப்பான முறையில் அதனைக் குறிப்பிட்டார்கள்.

அண்ணாவின் உருக்கமான பேச்சு!
அண்ணா அவர்கள் பேசும்பொழுது அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் நான்.
அண்ணா அவர்கள் உருக்கமாக பேசினார். உடல்நலக் குறைவோடு பேசினார். கலைவாணர் அரங்கத்தில்!
அப்போது அவர் சொன்னார், ‘‘நங்கள் மூன்று பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றோம்.
ஒன்று, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம்.
இரண்டு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும். நடந்த திருமணங்களும் செல்லும்; நடக்கும் திருமணங்களும் செல்லும்; இனி நடக்கப் போகின்ற திருமணங்களும் செல்லும்.
மூன்றாவது, இருமொழிக் கொள்கைதான் தமிழ் – ஆங்கிலம்தான்! மூன்றாவது மொழிக்கு இங்கே இடமில்லை என்று தெளிவாகச் சொன்னார்.

ஓராண்டு காலத்தில், இந்த முப்பெரும் சாதனைகளைச் செய்திருக்கின்றோம். நான் கேள்விப்பட்டேன், இங்கே இருக்கின்ற ஆதிக்கவாதிகள் எப்படியாவது இதனை மாற்றிவிடவேண்டும் என்று ஆட்சியைக் கலைத்து விடலாம் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று என் காதில் விழுந்தது.
உங்களால் முடியுமா? என்றால், உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எதையும் செய்யலாம் என்பதை நான் தெளிவாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒன்றே ஒன்று.
அது என்னவென்று சொன்னால்,
தமிழ்நாடு பெயரை பழையபடி சென்னை மாகாணமே இருக்கவேண்டும்; சுயமரியாதைத் திருமணம் செல்லாது; தமிழ்நாட்டில் இருமொழித் திட்டத்தை எடுத்துவிட்டு, மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வரலாம் என்று நீங்கள் முயற்சி செய்வீர்கள். அந்த அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆட்சியைப் பயன்படுத்தி செய்யலாம் என்று நினைப்பீர்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் செய்கின்ற நேரத்தில், ஓர் அச்சம் உங்களை உலுக்கும்; இதைச் செய்துவிட்டு வெளியே போக முடியுமா? என்கிற அச்சம் உங்களை உலுக்கும். அந்த அச்சம் உங்களை உலுக்கும்பொழுதெல்லாம், அண்ணாதுரைதான் இந்த நாட்டை எந்நாளும் ஆளுகிறான் என்று பொருள்” என்று அண்ணா விளக்கம் சொன்னார்.
இதற்கு என்ன அர்த்தம்?

எங்கள் போரட்டம் தொடரும்!
அண்ணாவினுடைய ஆட்சி, திராவிட ஆட்சி, பெரியார் மண்ணின் ஆட்சி என்று சொன்னால், என்றைக்கும் இந்தப் போராட்டம் தொடரும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதற்கு அடையாளம்.
எனவே நண்பர்களே, இது உலைக்களத்தில் அடித்திருக் கின்ற முதல் வாய்ப்பு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு போர்ச் சங்கு முழக்கம். இது வெறும் கண்டன முழக்கமல்ல. போர்ச் சங்கு ஊதியாகிவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தோழர்களே, தயாராக இருக்கவேண்டும்; தயாராக இருக்கவேண்டும்.
இன்னுங்கேட்டால், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், 200 இடங்களில் அல்ல; 234 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்வதற்காகத்தான் – இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் வேகமாகச் செல்லுங்கள்; விரைவாக வெற்றியும் எங்களிடம் வரும்.
வெல்க தமிழ்!
வீழ்க திணிப்பு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.



அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி முழக்கம்!


தமிழ்நாடு

மும்பை திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் - 2025

 

மும்பை திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் கழகக் காப்பாளர்: இரத்தினம் தொல்காப்பியன் தலைவர்: பெ.கணேசன்

விடுதலை நாளேடு

துணைத் தலைவர் : இ.அந்தோணி
செயலாளர் : ஜெ.வில்சன்
துணைச் செயலாளர் : அ.கண்ணன்
பொருளாளர் : பெரியார் பாலா
தாராவி கிளைக்கழக
பொறுப்பாளர்கள்
தலைவர் : அய்.செல்வராஜ்
செயலாளர் : மு.கணேசன்
தலைமை நிலையம், திராவிடர் கழகம்

திங்கள், 3 மார்ச், 2025

சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 

விடுதலை நாளேடு
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!

சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ் கொண்டு வருக!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே எடுத்திடுக!

அகத்தியர் ஆய்வு என்ற பெயரில் தமிழின்மீது பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து மாநாடு

பல வகைகளிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை!
பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குக!

சிதம்பரம், பிப்.15 தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு, பொதுத் துறைகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் சிதம்பரத்தில் இன்று (15.2.2025) காலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:
முன்மொழிந்தவர்: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
மறைந்த மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (வயது 92, மறைவு 26.12.2024), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணையமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (வயது 76, மறைவு 14.12.2024), திராவிட இயக்க எழுத்தாளர் ‘முரசொலி’ செல்வம் (வயது 82, மறைவு 10.10.2024), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி (வயது 72, மறைவு 12.9.2024), இலங்கை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், போராளி மாவை. சேனாதிராஜா (வயது 82, மறைவு 29.1.2025), மூத்த வழக்குரைஞர் கிருட்டினகிரி ஜி.எச்.லோகாபிராம் (வயது 91, மறைவு 26.9.2024), ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர், சமூகநீதியாளர் பெங்களூரு வி.டி.ராஜசேகர் (வயது 93, மறைவு 20.11.2024), புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.இராமச்சந்திரன் (வயது 83, மறைவு 8.12.2024), பகுத்தறிவாளர், பெரும்புலவர் கி.சு.இளங்கோவன் (மறைவு 11.10.2024), மறைந்த பாவாணர் அவர்க ளின் மகன் தே.மணிமன்றவாணன் (வயது 78, 19.10.2024), கல்வியாளர், பகுத்தறிவாளர் சிந்தை மு.இராசேந்திரன் (மறைவு 25.12.2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை (வயது 78, மறைவு 20.1.2025), தென்சென்னை மாவட்டக் கழக மேனாள் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு (வயது 92, மறைவு 13.8.2024), சென்னை பெரியார் திடல் புத்தக நிலைய மேனாள் மேலாளர் த.க.நடராசன் (வயது 87, 22.8.2024), திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் வ.மாரியப்பன் (வயது 64, 3.2.2025), எழுத்தாளர், சுயமரியாதைச் சுடரொளி ஒளிச்செங்கோ (வயது 90, மறைவு 9.1.2025), திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் இரா.நாராயணன் (வயது 80, மறைவு 9.11.2024), பகுத்தறிவு ஆசிரியரணியின் மேனாள் மாநிலத் தலைவர் மெ.அன்பரசு (வயது 96, மறைவு 8.10.2024), தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் புலவர் த.சுந்தரராசன் (மறைவு 11.10.2024), திருவாரூர் மாவட்டக் கழகக் காப்பாளர் பி.இரத்தினசாமி (வயது 72, மறைவு 15.10.2024), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பகுத்தறிவாளர் புதுச்சேரி வீ.கண்ணையன் (மறைவு 20.10.2024), திருவாரூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது 81, மறைவு 3.12.2024), லால்குடி முத்துச்செழியன் (வயது 93, மறைவு 27.12.2024), வடலூர் மூதாட்டியார் லீலாவதி நாராயணசாமி (வயது 95, மறைவு 27.1.2025),

சென்னை – அஸ்தினாபுரம் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் (மறைவு 5.8.2024), திருச்செந்தூர் – ஒன்றிய கழகத் தலைவர் நடுநாலு மூலைக்கிணறு ரெ.சேகர் (மறைவு 14.8.2024), வடுவூர் புல்லவராயன் குடிகாடு பெரியார் பெருந்தொண்டர் வ.பாலகிருஷ்னன் (வயது 82, மறைவு 7.8.2024), திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணித் தலைவர் சு.இளங்கோவன் (வயது 65, மறைவு 25.8.2024), கழகப் பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85, மறைவு8.9.2024), அவினாசி நகர கழகச் செயலாளர் க.அங்கமுத்து (வயது 84, மறைவு 10.9.2024),
திருவிடைமருதூர் ஒன்றியம் – கல்யாணபுரம் கிளைக் கழகத் தலைவர் ச.ஜோதி (மறைவு 30.9.2024), மதுரை மாநகர் – கிளைக் கழகப் பொறுப்பாளர் பா.முருகேசன் (வயது 54, மறைவு 5.10.2024), புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி (வயது 90, மறைவு 7.10.2024), ‘பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை’ நிறுவனர் பெ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 59, மறைவு 13.10.2024), லால்குடி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொறியாளர் முருகேசன் (வயது 75, மறைவு 6.11.2024), பாபா நாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ஏ.கைலாசம் (மறைவு 15.11.2024), பெத்த நாயக்கன்பாளையம் – கொட்டவாடி ஒன்றிய கழகச் செயலாளர் பெரியசாமி (வயது 90, மறைவு 18.11.2024),
காரைக்குடி கழக மாவட்டத் தோழர் வீ.பாண்டிய ராஜன் (வயது 89, மறைவு 29.11.2024), நாகம்மையார் இல்லம் பாலா (வயது 84, மறைவு 2.12.2024), மன்னார்குடி நகரக் கழக செயலாளர் மு.ராமதாஸ் (மறைவு 11.12.2024), கடலூர் பெரியார் படிப்பக நூலகர் தி.மாதவன் (வயது 67, மறைவு 17.12.2024), மதுரை – கோவிந்தகுடி கிளைக் கழகச் செயலாளர் நா.சந்திரசேகரன் (வயது 73, மறைவு 26.12.2024), வடுவூர், மேல்பாதி பெரியார் பெருந்தொண்டர் வி.டி.நடராஜன் (மறைவு 4.1.2025), தஞ்சை – வல்லம் இராஜேந்திரன் (வயது 57, மறைவு 9.1.2025), திண்டுக்கல் அங்கப்பன் (வயது 67, மறைவு 10.1.2025), கோவை – ரங்கநாயகி அம்மாள் (வயது 94, மறைவு 17.1.2025), செய்யாறு ப.க. தோழர் இரா.திருநாவுக்கரசு (வயது 42, மறைவு 12.1.2025), குடந்தை மாவட்டக் கழக மேனாள் துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன் (வயது 83, மறைவு 17.1.2025), மயிலாடுதுறை ஒன்றிய கழகத் தலைவர் நிடூர் ஆர்.டி.வி.இளங்கோவன் (மறைவு 31.1.2025), கரூர் பரமத்தி ஒன்றியத் தலைவர் தமிழ் சொக்கன் (வயது 55, மறைவு 12.12.2024)
ஆகிய கழகத்தின் அரும்பெரும் தொண்டர்கள், செயல்வீரர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் ஈடில்லா இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து இப்பொதுக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: கோ.கருணாநிதி
(வெளியுறவுச் செயலாளர்)
வழிமொழிந்தவர்: மு.சென்னியப்பன்
(கோபி மாவட்டத் தலைவர்)
தீர்மானம் 2:
‘மருத்துவ உயர் கல்வியில், இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது’ என்ற
உச்ச நீதிமன்ற உத்தரவு,

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

மாநில உரிமையைப் பறிக்கும் செயல்
மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளில் ‘இருப்பி டத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்க தக்கதல்ல’ என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
மருத்துவத்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. ஆனால், கல்வி பொது பட்டியலில் உள்ளது என்பதால்தான் ஒன்றிய அரசு தொடர்ந்து இதில் தலையிடுகிறது என்று கூறப்படுகிறது. ‘‘பொதுப் பட்டியல்’’ என்ற மொழியாக்கமே தவறான ஒன்று! ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List) என்பதே சரியானது. அதனை மறந்து அல்லது மறுத்து செயல்படுவது சட்ட ரீதியாகவே தவறானதும், முறைகேடுமாகும். மருத்துவக் கல்வி இடங்களை மாநில அரசுதான் செலவு செய்து உருவாக்குகிறது. அதற்கான செலவு, கட்டமைப்பு, கருவிகள், மருந்துகள் அனைத்தும் அளிப்பது மாநில அரசுதான். அப்படியிருக்கும்போது அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு என்பது எப்படி சரி யானதாக இருக்க முடியும் என்பதுதான் நமது முக்கிய கேள்வியாகும். ஏற்கெனவே, ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு 50 சதவீத இடங்களைத் ‘‘தாரை வார்த்து’’ விட்டு, மீதமுள்ள 50 சதவீத இடங்களைத் தன் விருப்பப்படி நிரப்பும் உரிமை மட்டும் தான் மாநிலத்திற்கு உள்ளது. (இதுவே அரசமைப்புச் சட்ட விதிக்குத் தரப்படும் தவறான விளக்கத்தின் விளைவு) இதில், தன் விருப்பப்படி, மாநில அரசு முடிவெடுக்கக் கூடாது என்பதும், இந்த இடங்களில் இந்திய அளவில் யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதும், முறைகேட்டின் உச்சக்கட்டம் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிறைய ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’’ மருத்துவமனைகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. இதில்  பணியாற்ற, ‘சூப்பர் ஸ்பெஷலிஸ்டு’ டாக்டர்களை உருவாக்க வேண்டிய தேவை மாநில அரசுக்கு உள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இத்தனை சிறப்பு மருத்துவர்கள் இருந்தால்தான் அந்த மருத்து வத்திற்கு சிறப்பு உயர்கல்வி இடங்களை உருவாக்க முடியும் என விதிகள் இருக்கின்றன. இம்மாதிரி சூழலில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு செய்தால், அவர்கள் படித்துவிட்டு அவரவர் சொந்த மாநிலத்திற்கோ தனியார் மருத்துவமனைகளுக்கோ, வெளிநாடுகளுக்கோ போய்விடுவார்கள். இதனால், நம்முடைய மருத்துவமனையில் பணியாற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் பற்றாக்குறை நிலை ஏற்படும். ஆகவே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் குறைய ஆரம்பிக்கும். மாநில அரசு செலவு செய்தாலும் அவர்கள் எதையும் முடிவு செய்ய முடியாது என்று சொல்வது சரியல்ல. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாக, வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1200–க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம் உருவாகியிருக்கிறது. இந்த இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் சேரலாம் என்றால், தமிழ்நாடு உள்பட அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும். மிக விரைவில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக ‘‘சீராய்வு மனு’’ (Review Petition) தாக்கல் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை இப்பொதுக்குழு வரவேற்கிறது.  தமிழ் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதிக்கும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக அனைத்து சமூக நீதி அமைப்புகளும் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: வீ.குமரேசன் (பொருளாளர்)
வழிமொழிந்தவர்: இரா.செந்தூர்பாண்டியன்
(திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)
தீர்மானம் 3:
மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத்
திரும்பப் பெறுக!
பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக, மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் குறித்த விதிகள் இடம் பெற்றுள்ளன. இது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலே! அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அத்துடன் நில்லாமல், இதேபோன்ற தீர்மானத்தை, டில்லி, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்கண்ட், கருநாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக, நாம் ஒன்றுபட்டு நிற்பது மிகவும் முக்கியமும், அவசிய முமாகும். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, மாநிலச் சட்டப்பேரவைகளில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என, அம்மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளது பாராட்டத்தகுந்த முயற்சி. இதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் யுஜிசியின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி, தற்போது கல்வி, ‘‘ஒத்திசைவுப் பட்டியலில்’’ உள்ளது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கல்வி தொடர்பான எந்த முடிவையும் ஒன்றிய அரசு எடுக்கக்கூடாது. அரசமைப்பு சட்டம் ஏழாம் அட்ட வணை  மாநிலப் பட்டியல் எண் 32-இன்படி, பல்க லைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் நிர்வாக ரீதியான கட்டளையை யு.ஜி.சி. பிறப்பிக்க முடியாது என்கிற நிலையில், யு.ஜி.சி.யின் வரைவு விதிகள், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை; அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: அன்பு.சித்தார்த்தன்
(சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர்)
வழிமொழிந்தவர்: சிவ.வீரமணி
(புதுச்சேரி மாநில தலைவர்)
தீர்மானம் 4 :
சிதம்பரம் நடராஜர் கோவிலை
இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ்
தமிழ்நாடு அரசு கொண்டு வருக!
‘‘சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் உடைமையில்லை. 10 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல – பொதுக் கோவில்தான்’’ என்று நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. தீட்சிதர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மேல்முறையீடுகள் செய்து, குறிப்பிட்ட தீட்சிதர் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே கோவிலை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிதம்பரம் கோவிலுக்குச் சொந்தமானது 2000 ஏக்கராகும். ஆனால், பெரும்பாலானவற்றை கோவில் தீட்சிதர்கள் விற்று, பணத்தைச் சுருட்டியுள்ளனர்.

வழக்குகள்மூலம் தெரிய வருகிறது!
சரியான வரவு – செலவுக் கணக்குகள் கிடையாது. உண்டியல் வைப்பது கிடையாது. காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளை முறையாகக் கணக்கில் கொண்டு வராததால், அவை தீட்சதர்களின் தனிப்பட்ட சொத்தாகப் போய்விடுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் 2004 ஆம் ஆண்டி லிருந்து 2008 ஆம் ஆண்டுவரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஆண்டு வருமானமாக அறநிலையத் துறை காட்டிய கணக்கு
6 கோடி ரூபாய். பூஜைப் பொருட்கள் விற்கின்ற கடை கள் ஏலம்மூலம் கிடைத்த தொகை ரூ.15 லட்சம். இப்பொழுது தீட்சதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருமானம், கோவில் நிலங்கள்மூலம் கிடைக்கும் வருமானம் இவை எல்லாம் போக, இந்த ஆறு கோடி ரூபாயையும் சுருட்டுகிறார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தைக் கல்யாணங்கள் நடத்த வாடகைக்கு விடுகிறார்கள்; குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம்.
கோவிலின் நடைமுறைகள், செயல்பாடுகள், தீட்சி தர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடை கிறார்கள்.
இவற்றையெல்லாம் கணக்கிலும், கவனத்திலும் கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று இப்பொழுதுக்குழு வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: த.சீ.இளந்திரையன்
(விருத்தாசலம் மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 4(ஆ):
தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிரானது!

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசல் பாதை வழியாகக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன் நுழைந்தார் என்று சொல்லி, அந்த வாயிலை அடைத்து வைத்துள்ளார்கள். இது அரசின் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு எதிரான அப்பட்ட மான செயல்பாடே! ஆதலால், அந்த நுழைவு வாயிலைத் திறந்திட ஆவன செய்யுமாறு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தலைமையில் இயங்கும் தி.மு.க. அரசினை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இதற்கென விரைவில் ஒரு கண்டன ஆர்ப்பாட் டத்தினை, ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து நடத்துவதற்கான தேதியை அறிவிக்கவேண்டும் என்று கழகத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறது இப்பொதுக்குழு.
முன்மொழிந்தவர்: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
வழிமொழிந்தவர்: இரா.வீரபாண்டி
(திண்டுக்கல் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 5 (அ):
பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக
மீண்டும் பண்டாரத்தார்களை
நியமனம் செய்க!
பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை.
போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில், சித்தர் போகரின் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னர் அவர் வழி வந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.
திருமலை நாயக்க மன்னர் ஆட்சியில் படைத்தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்னும் பார்ப்பனர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தபோது, கோவிலில் பூசை செய்தவர்கள் சூத்திரர்கள் என்பதால், ‘‘அவர்களிடம் பிராமணனாகிய நான் பிரசாதம் வாங்க முடியாது’’ என்று கூறி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் பூசை செய்யும் பணியிலிருந்து நீக்கி, கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து அய்ந்து பார்ப்ப னர்களைக் கொண்டு வந்து அர்ச்சகர்களாக நியமித்தான் என்று பழனி கோவில் தலப் புராணமே கூறுகிறது.
ஆகமங்கள்பற்றியும், மரபுகள்பற்றியும் உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். அந்த வகையில், பார்க்கப் போனாலும், பழனியாண்டவர் கோவிலிலிருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி, போகர் வழிவந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
வழிமொழிந்தவர்: ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 5 (ஆ):
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை சட்டம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தின்படி, முதற்கட்டமாக அர்ச்சகர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மற்ற மற்ற கோவில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: ம.சந்திரசேகரன்
(கோவை மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: கோ.கண்மணி
(பொதுக்குழு உறுப்பினர்)
தீர்மானம் 6:
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க
ஒன்றிய அரசு முன்வர வேண்டும்

2011 ஆம் ஆண்டுக்குப்பின் 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலம் கடத்திவரும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. சட்டப்படி ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வது ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், மேலும் காலந்தாழ்த்தாது, உடனடியாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச்செயலாளர்)
வழிமொழிந்தவர்: கே.சி.எழிலரசன்
(திருப்பத்தூர் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 7:
சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது!
சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே வலியுறுத்தப்பட்டுள்ள ஒன்றாகும். ஆனால், பி.ஜே.பி. தலைமையிலான அரசு, ஒன்றி யத்தில் அமைந்தது முதல், சமூகநீதித் துறையில் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதற அடிக்கும் வகையில், பொருளாதார அளவுகோல் என்ற ஒன்று திணிக்கப்பட்டுள்ளது.‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’’ (‘‘Socially, Educationally Backward’’) என்ற அணுகுமுறையே சட்டப்படி சரியானதாகும். இதில் பொருளாதார அளவுகோல் முதல் சட்டத் திருத்தம் வந்தபோதே நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினர் என்ற பெயரில் பெரிதும் பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்டு இருப்பதும், அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருப்பதும், உச்சநீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பைத் தனக்குத்தானே மறுத்திடும் முரண்பாடு என்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார அளவுகோல் என்னும் சமூகநீதிக்கு எதிரான இட ஒதுக்கீட்டை அறவே நீக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் Socially and Educationally என்ற அளவுகோலை அறவே நீக்கிவிட்டு, வெறும் பொருளாதார அடிப்படையில் Economically என்ற அளவுகோல்மூலம் EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி மேற்கொள்ளப்படும் என்று இப்பொழுதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
முன்மொழிந்தவர்: ம.மு.சுப்பிரமணியம்
(கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: பூ.சுந்தரம்
(பொதுக்குழு உறுப்பினர்)

தீர்மானம் 8:
பொதுத்துறை நிறுவனங்களைத்
தனியார் மயமாக்கும் சமூக அநீதி!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மய மாக்கும் திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காட்டிலிருந்து100 விழுக்காடு உயர்த்தி இருப்பது, எல்.அய்.சி. நிறுவ னத்தைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியாகும். இதற்கு எதிராக, ‘‘பொதுத்துறை நிறுவ னங்களைப் பாதுகாப்போம்; அதன் சமூகநீதியைப் பாதுகாப்போம்’’ என்ற முழக்கத்துடன் அனைவரும் போராட முன்வருமாறு இப்பொதுக்குழு ஒடுக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும்​ கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: க.சிந்தனைச்செல்வன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
வழிமொழிந்தவர்: வை.சிதம்பரம்
(பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

தீர்மானம் 9:
தனியார்த் துறைகளிலும்
இட ஒதுக்கீடு தேவை!

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கு நாளும் அதிகரித்துவரும் நிலையில், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை உணர்ந்து, அதற்கான சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இதனை வலியுறுத்தவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: பா.மணியம்மை
(மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்)
வழிமொழிந்தவர்: பா.ஆல்பர்ட்
(மாவட்டக் காப்பாளர், லால்குடி)

தீர்மானம் 10:
‘திராவிட மாடல்’ அரசுக்கு பாராட்டு!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களால் 31.1.2025 அன்று முன்வைக்கப்பட்ட 2024–2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வ றிக்கையில்,  தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 47 சதவீதம், காலணி உற்பத்தித் தொழில்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக அதிகரிப்பு என தமிழ்நாடு இந்திய அளவில் பெரும் சாதனை புரிந்துள்ளது” எனப் பாராட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி நடைபெற்று வரும், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி​லான ‘திராவிட மாடல்’ அரசுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: சவு.சுரேஷ்
(திருவாரூர் மாவட்டச் செயலாளர்)
வழிமொழிந்தவர்: ஜெ.புபேஷ்குப்தா
(நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்)

தீர்மானம் 11:
நெல் கொள்முதலைத் தனியாருக்குத்
தாரை வார்க்கக் கூடாது!

விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல் கொள்முதலை அரசே மேற்கொண்டுவரும் நிலையில், இனி தனியாருக்கு அந்த உரிமையைத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அரசே நெல் கொள்முதலைத் தொடரவேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: ஊமை.ஜெயராமன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
வழிமொழிந்தவர்: சி.மூர்த்தி
(திருவண்ணாமலை மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 12:
அகத்தியர் ஆய்வு என்ற பெயரில் தமிழின்மீது தொடுக்கப்படும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு

மத்திய செம்மொழி நிறுவனம் என்னும் அமைப்பு – தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பயனுள்ள பணிகளில் ஈடுபடாமல், அந்த நிறுவனத்திற்குத் துணைத் தலைவராக தமிழுக்கும், ஆய்வுகளுக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒரு பார்ப்பன அம்மையார் நியமக்கப்பட்ட நிலையில், சமஸ்கிருதக் கலாச்சா ரத்தைத் தூக்கி நிறுத்தும் வகையில் அகத்தியர் என்ற புராணக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தும் வேலை யில், ஒன்றிய அரசின் பெரும் நிதி உதவியுடன் வேகமாக செயல்பட்டு வருவதை தமிழின மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது நமது கடமையாகும்.
தமிழ்நாட்டு மக்களும், தமிழினப் புலவர்களும், பேராசிரியர்களும் இதனைக் கவனத்தில் கொண்டு, ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்கும் பணியில் முனைய வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றை சமஸ்கிருத சார்பு, ஆரியத் தத்துவத்தின் சாரம் என்று திரிபுவாதம் செய்ய முனைவதையும் இப்பொழுதுக் குழு கண்டிக்கிறது.
செம்மொழி நிறுவனம் என்ற நிறுவனத்தின் வழியாகத் தமிழ்மீது தொடுக்கப்படும் செயல்பாடுகளை முறியடிக்கவும், தமிழர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும், ‘‘தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டினை’’ சென்னையில் வரும் ஏப்ரல் மாதம், தன்மானப் பெரும் புலவர்கள், ஆய்வாளர்கள், இலக்கியச் செம்மல்களை அழைத்து நடத்துவது என இப்பொதுக்குழு தீர்மா னிக்கிறது.
முன்மொழிந்தவர்: சாமி.திராவிடமணி
(மாவட்டக் காப்பாளர், காரைக்குடி)
வழிமொழிந்தவர்: த.சண்முகம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

தீர்மானம் 13:
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
ஒன்றிய அரசின் 2025-2026​ ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில, வழமைபோல், தமிழ்நாட் டிற்கென்று எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள் முதலிய வளர்ச்சித் திட்டங்கள், பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள மாநிலங்களுக்கும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மட்டுமே நிதி ஒதுக்கீடு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சமக்ரா சிக்‌ஷா திட்டத்திற்காக பள்ளிக் கல்வித் துறைக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியைத் தர மறுப்பதும், அதைப் பிற மாநிலங்களுக்கு மடை மாற்றுவதும், பி.எம்.சிறீ திட்டத்தின்படி மும்மொழித் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவதும் அதிகார வரம்பு மீறலே ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு, இப்பொதுக்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: சொ.தண்டபாணி
(கடலூர் மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர்)

தீர்மானம் 14:
பொதுத் துறை நிறுவனங்களில்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு
50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் செயல்படும் ஒன்றிய அரசின் நிறுவ னங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். NLC, BHEL, ONGC Power Grid etc, வங்கிகள், ரயில்வே போன்றவற்றில் வட இந்தியர்கள் ஆதிக்கம் நிரம்பியுள்ளது. வட இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையிலேயே இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
தற்போதைய NLC விளம்பர எண் 19/2024ன் படி (16.12.2024), 167 பொறியாளர்களை GATE மதிப்பெண்கள் மூலம் எடுக்கவிருக்கிறது. எம்.இ., எ.டெக். படிப்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கேட் நுழைவு தேர்வை, என்.எல்.சி. பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்துவது அவசியம் அற்றதாகும். இந்த அதீத முறையை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுப் பட்டதாரி இளைஞர்களுக்கும் பயன்படும் வகையில் தேர்ந்தெடுப்பு நடைமுறைகள் அமைய வேண்டும் என்று இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றோர்

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்