திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள்

ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில நாள்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவமரியாதை செய்ததை கண்டித்து 7.2.2025 அன்று மாலை 6 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ப.சுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை எடுத்து கூறுகின்ற வகையில் ஜாபர்கான்பேட்டையில் உள்ள காமராசர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கங்கையம்மன் கோயில் தெரு வழியாக, தந்தை பெரியாரின் புகழ் பெருமையை ஒலி முழக்கமிட்டும், தந்தை பெரியாரின் படங்களை கைகளில் ஏந்தியும் நூற்றுக் கணக்கானோர் சென்று தந்தை பெரியாரின் சிலை அருகில் குவிந்தனர்.
பொறுப்பாளர்களும் பொது மக்களும் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது ஏறி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முக்கிய பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் புகழை எடுத்துக்கூறி உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தந்தை பெரியாரின் பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலா ளர் வழக்குரைஞர் ஆவடி அந்திரி தாஸ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மண்டல மாவட்ட கழக செயலாளர்கள் தென் சென்னை கிழக்கு க.கழக குமார், திருவள்ளூர் நெமிலிச்சேரி பாபு, வடசென்னை மேற்கு டி சி ராஜேந்திரன் காஞ்சிபுரம் ஜி கருணாகரன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவா, குன்றத்தூர் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மதன் குமார் மற்றும் ஜாபர்கான் பேட்டை தந்தை பெரியார் புகழ் பேரணியில் கலந்து கொண்ட கழக தோழர்கள் கழக தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட காப்பாளர் மு.ந.மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, த.ராஜா, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் வேலவன், வழக்குரைஞர் சுரேசு,வழக்குரைஞர் அ, அன்பரசன், வழக்குரைஞர் கார்த்திக், வழக்குரைஞர் ராஜன், வழக்குரைஞர் தமிழ், வழக்குரைஞர் சங்கர், வழக் குரைஞர் ரமேஷ், வழக்குரைஞர் க இளவரசன் க, சுப்பிரமணி, ஜெனார்தன், பெரியார் மணி மொழியன், கண்ணன், மூவேந்தன், திருநாவுக்கரசு, ராஜசேகர், குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண் டனர்
மாவட்ட துணை செயலாளர் கரு, அண்ணாமலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
பகுதி தோறும் கிளைக் கழகங்களை புதுப்பித்தல், பரப்புரை கூட்டங்களை நடத்த முடிவு
சென்னை, பிப்.5 கடந்த 1.2.2025 அன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்துரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன :-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். , கிளைக் கழகங்கள் முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், புதிய கிளைக் கழகம் அமைத்தும் கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தென்சென்னை மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பலகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல்.
பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 9 அன்று வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் தணிகாசலம் நகர் கொளத்தூரில் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.
பிப்ரவரி 15 இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டம் சார்பில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
தென் சென்னை மாவட்ட இளை ஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறி விக்கப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மு. சண்முகப்பிரியன், சா. தாமோதரன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், அ. அன்பு, வெ.விவேக், மாணவர் கழக சஞ்சய் ஆகியோர் கருத்துகளை கூறினர்.
கோ.வீ.ராகவன், இரா.ரவி, த.ராஜா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். ச.மாரியப்பன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மேலும் பங்கேற்று மரியாதை செலுத்தியோர்:
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, வடசென்ைன மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன், மயிலை சேதுராமன், கு. நா.ராமண்ணா, கோவீ. ராகவன், பூவை. தமிழ்செல்வன், உடுமலை வடிவேல், மயிலை அன்பு, மு. பவானி, ரா. அருள், மு.இரா. மாணிக்கம், மா. சந்தீப்குமார், மா. பூவரசன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா. பார்த்திபன், மரகதமணி, கொடுங்கையூர் தங்க. தனலட்சுமி, வெற்றி வீரன், தாம்பரம் மோகன்ராஜ், யுகேஷ், க.கலைமணி மற்றும் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, பிப்.3 – ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அறைகூவல்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அண்ணாவின் அறைகூவல்களும், தொலைநோக்குச் சிந்தனைகளும் மிகவும் தேவை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று (3.2.2025) அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
1962 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் முழங்கி, ‘‘திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கின்ற நாங்கள்’’ என்று தொடங்கி, ‘‘மாநில உரிமைகளையும், திராவிட சமுதாயத்தினுடைய கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும்; பாதுகாக்கப்படவேண்டும்’’ என்று சொன்னார்களே, அதே நிலை இன்றைக்கும் தொடர்கிறது!
அறிஞர் அண்ணா அவர்களுடைய முயற்சி, முன்னோட்டம்!
இன்னுங்கேட்டால், முன்பு இருந்த தைவிட, அதிகமான அளவிற்கு ஜனநாயகத்திற்கும், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கும் அறைகூவல்களும், அரசமைப்புச் சட்டத்தை முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமல் ஆக்கப்படக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில், மேலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய முயற்சி என்பது, அவர்களுடைய முன்னோட்டம் என்பது இன்றைக்கும் எவ்வளவு சரியானது என்பதைக் காட்டுகிறது.
ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல;
இனத்தின் மீட்சிகளுக்கு…
தந்தை பெரியார் அவர்களால் ஆளாக்கப்பட்டு, மிகப்பெரிய அளவிற்கு அடித்தளத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அது தொடர்ச்சியாக வருகிறது என்று சொன்னால், ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல; மீட்சிகளுக்கு, இனத்தின் மீட்சிகளுக்கு என்பதை ஒவ்வொரு நாளும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமை யான சூழலை, இன்றைக்கு மீண்டும் உருவாக்கி, யாரிடமிருந்து நம்மினத்தைப் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அந்த ஆரிய மாயையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
‘ஆரிய மாயை’ என்பது ‘‘கூலி களை ஏவுவார்கள்; புதிய புதிய வித்தைகளை காட்டுவார்கள். எனவே, அவற்றையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்’’ என்று அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் கற்ற பாசறை பாடத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்கிறார்!’’ என்பதுதான் தந்தை பெரியார் அன்றைக்கு எழுதிய ஒரு செய்தி!