சென்னை, நவ.16 ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா உடலுக்குத் தமிழர் தலைவர் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு அளித்த முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பு விருதினைப் பெற்றவரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும் பல தனிச் சிறப்பு அம்சங்களெனக் கொண்டவருமான 102 வயது வாழ்ந்த தோழர் என்.சங்கரய்யா அவர்கள் நேற்று (15.11.2023) மறைவுற்றார்.
அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று (16.11.2023) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள், மறைவுற்ற தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து, மரியாதை செலுத்தி வீர வணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதிய ழகன், பி.டி.சி.இராசேந்திரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், அமைப்பாளர் சி.பாசுகர், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், சைதை தென்றல், க.கலைமணி, பெரம்பூர் கழகத் தலைவர் பா.கோபால கிருஷ்ணன், பெரியார் யுவராஜ், நரேஷ் மற்றும் தோழர்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
"போராட்ட வீரர் தியாகச் செம்மல் செஞ்சட்டை சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்" என்று கழகத் தோழர்கள் முழக்கத்துடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தோழர் சங்கரய்யா உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மாநிலக் கட்சிப் பொறுப் பாளர்களுடன் தற்போதைய சமூக அரசியல், பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் உரையாடலில் முக்கிய இடம் பெற்றன. தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி சிந்தனைகள், மக்கள் மத்தியில் அவர் பிரச்சாரத்தால், போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் சி.பி.எம். தேசிய பொதுச் செயலாளர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மறைந்த தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பல்வேறு கட்சிகளின் முன்னணியினர் கலந்துரையாடினர். மேனாள் எம்.பி. டி.கே. ரங்கராஜன், சி.பி.எம். மகளிரணி பொறுப்பாளர் உ. வாசுகி, சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத், 'செம்மலர்' ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், சி.பி.எம். தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சி. மகேந்திரன் (சி.பி.அய்.), திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர்.
முன்னதாக மறைவு செய்தி அறிந்ததும் நேற்று (15.11.2023) தோழர் என். சங்கரய்யா அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணை பொதுச் செய லாளர் ஆ. இராசா, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கங்கள் சார்பில் தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக