'அகண்ட பாரதம்' என்ற பன்னாட்டுப் பிரச்சினையை உருவாக்குவதா?
தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.5 காந்தியார் நினைவு நாளில் கோட்சே பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று கோவை காவல்துறையினர் தடை செய்வதா? காவல் துறையில் காலிகளின் ஊடுருவலா? குவாலியரில் கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னாவாம்? அகண்ட பாரதம் உருவாக்க வேண்டுமாம்! இதைக் கண்டித்து இன்று (5.2.2022) காலை11 மணியளவில் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் கரோனா பரவல் தடுப்பு விதி முறைகளைப் பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குவாலியரில் இந்து மகா சபைக் கூட்டத்தினர் கோட்சே - ஆப்தே ஆகியோர் பெயரில் "பாரத ரத்னா" பட்டம் வழங் குவோம் என பகிரங்கமாக விழா கொண்டாடி, நாட்டின் தந்தையென உலகோரால் மதிக்கப்பட்டவரான அண்ணல் காந்தியாரைக் கேவலப்படுத்தி "அகண்ட பாரதம்" என்ற பன்னாட்டு ரீதியில் பிரச்சினையை உண் டாக்கக் கூடிய விஷமப் பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5.2.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 31.1.2022 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இன்று தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர்.
சென்னையில் திராவிடர் கழக பொருளாளர். வீகுமரேசன் அவர்கள் தலைமை உரையுடன் காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடல் நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநிலமகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ. கருணாநிதி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டத்தலைவர் புழல் டி.பி. ஏழுமலை ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.
முன்னதாக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்புரையாற் றினார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்! மதவெறிக் கூட்டத்துக்கு பெரியார் மண்ணில் இடமில்லை! காந்தியாரைக் சுட்டுக் கொன்ற கோட்சே ஆப்தே பெயர்களில் பாரத ரத்னா விருதுகளா? ஒன்றிய அரசே! அனுமதிக்காதே! பயங்கரவாதிகள் பெயராலே பாரத ரத்னா விருதுகளா? கொலைகார கோட்சேவுக்கும், கொலைகார ஆப்தேவுக்கும் கொண்டாட்டமா? மதச்சார்பின்மையைக் காப்போம்! மதவெறியை மாய்ப்போம்! என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மாநில ப.க. துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வழக்குரைஞரணி செயலாளர் வீரமர்த்தினி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவி.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு,அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட தலைவர் பா.தென்னரசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், சி.செங்குட்டுவன், சேரலாதன், பூ.இராமலிங்கம், மடிப்பாக்கம் வே. பாண்டு, பொறியாளர் குமார், தரமணி மஞ்சுநாதன், இரா.பிரபாகரன், ஆயிரம் விளக்கு மு.சேகர், பி.டி.சி.இராசேந்திரன், இரா.ரவி, எம்.ஜி.ஆர். நகர் வெங்கடேசன், யுவராஜ், பாபு, மங்களபுரம் மு.டில்லிபாபு, ச.பாசுகர், ப.ஆனந்தன், பா.அருள், ஓவியர் பெரு.இளங்கோ, துரை.இராவணன், தமிழ்ச்செல்வன், செந்தமிழ்சேரன், அரவிந்தன், செல்லப்பன், ராமாபுரம் ஜனார்த்தனன், வை.கலையரசன், க.கலைமணி, நடராசன், அம்பத்தூர் சங்கர், பிரபாகரன், கு.வெற்றிஅரசன், பரணிதரன், மகளிரணித் தோழர்கள் வி.வளர்மதி. பி.அஜந்தா, மு.பவானி, த.மரகதமணி, ஜெ.சொப்பன
சுந்தரி, க.சுமதி, க.வெண்ணிலா, கு.தமிழினிதணு, முத்துலட்சுமி, கவிமலர், வி.தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி நாகராசன், ஊடகப் பிரிவு செயலாளர் ஜனா, சென்னை மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், இணைச் செயலாளர் குமரேசன், இளைஞரணித் தலைவர் கண்ணன், அரியலூர் மாவட்ட செயலாளர் இராவணன் கோபால், நாகம்மை நகர் பகுதி தலைவர் ஆனந்த்பாபு, சூரியா, இரகு, அஜய் மற்றும் திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக