சென்னை, பிப். 27- திருவொற்றியூர் தேரடி அன்னை சிவகாமி மகாலில் 9.2.2020 அன்று திருவொற்றியூர் நகரத் தலைவர் பெரு.இளங்கோ - இந்திரா ஆகியோரின் மகள் இ.தேன் மொழி --நினைவில் வாழும் ந.சேகர் - சே.கோகிலா ஆகியோரின் மகன் சே.ஆனந்த்குமார் இவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவொற்றியூர் நகர செயலாளர் ந.இராசேந்திரன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், உமா செல்வராசு முன்னிலை வகித்தனர்.
திராவிட தொழிலாளர் அணி மேனாள் செயலாளர் பெ.செல்வராசு வாழ்த்துரை வழங்கினார்.
மண விழாவிற்குத் தலைமை வகித்து, மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறி, மணவிழாவைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்திவைத்தார்.
ஓவியர் பெரு.இளங்கோ- இ.இந் திரா ஆகியோரின் மணவிழாவினை (15.9.19 91)இல் தான் நடத்தி வைத்த தைக் குறிப் பிட்டும், தந்தை பெரியார் கொள்கை வழியில் மணமக்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளு மாறும், பகுத் தறிவுக் கொள்கைகளை விளக்கியும் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரை யாற்றினார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தி.வே.சு.திருவள்ளுவன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராம லிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன் புச்செல்வன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் பா.பாலு, தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைச் செய லாளர் கோ.வீ.இராகவன், கொடுங் கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி, வை.கலையரசன், திமுக பகுதிச் செயலாளர் தி.மு.தனியரசு, திமுக 82 ஆவது வட்ட செயலாளர் கு.இளவரசன், இசையின்பன், அ.செல்வராசு, பெரியார் மாணாக்கன், மா.சேகர், செங்கை சுந்தரம், து.ராஜசேகர், மு.ஜான்சன், இரா.சரவணன், வண்ணை வெங்கடேசன், ஆனந்த், புதுவண்ணை ஏ.மணிவண் ணன், சதீஷ்குமார், சே.முரசு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தங்க. தனலட்சுமி, பெரியார்களம் இறைவி, க.சுமதி, த.மரகதமணி, தி.வாசுகி, இரா.வளர்மதி, சே.தமிழரசி, மோ.விஜயா, சு.ஆனந்தி, மீனாகுமாரி, அருணாச்சலம், பிரிதிவிராஜ், பவானி மற்றும் கழகத் தோழர்கள், உறவி னர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து இயக்கங்களையும் சார்ந்த தோழர் களும் திரளாக வந்திருந்தனர். மண விழாவை முன்னிட்டு மண்டபத்திலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் கழகக் கொடிகள் சிறப்பாகக் கட்டப் பட்டிருந்தன.
நிறைவாக பெரு.இளங்கோ நன்றி கூறினார்.
- விடுதலை வாசம் 27.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக