வியாழன், 21 டிசம்பர், 2017

இனமானப் பேராசிரியர் பிறந்த நாளில் நூல்வெளியீடு கருத்தரங்கில் உணர்ச்சிமிக்க உரிமை முழக்கங்கள்

சென்னை, டிச.19 திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (18.12.2017) மாலை  திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேரா சிரியர் க.அன்பழகன் அவர்களின் 96 ஆம் பிறந்த நாள் விழா, பேரா சிரியர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வில் பழிவாங்கப்படும் இடஒதுக்கீடு உரிமை முழக்கக் கருத்தரங்கம்  நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

பயனாடை பாராட்டு

96ஆம் பிறந்த நாள் காணும் இனமானப் பேராசிரியருக்கு பெருமகிழ்வுடன் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் இரா.முத்தரசன், விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தோழர் இரா.முத்தரசன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பய னாடை அணிவித்தார்கள்.

96ஆம் பிறந்த நாள் காணும் இனமானப்பேராசிரியர் அவர் களுக்கு தோழர் இரா.முத்தரசன், எழுச்சித்தமிழர் தொல். திருமா வளவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

இந்திய சமூகநீதி இயக்கம் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்களுக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பயனாடை அணிவித்தார்.

இனமானப் போர்முழக்க
உரையாற்றிய தலைவர்கள்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து எழுச்சியுரையாற்றினார்.
திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன் பழகன் அவர்கள் உணர்ச்சி மிகுதி யுடன் இனமான சிறப்புப் பேரு ரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத் தரசன் சிறப்புரையாற்றினார்கள்.

நூல் வெளியீடு

இனமான பேராசிரியர் க.அன் பழகன் அவர்கள் எழுதிய நூல் களான வளரும் கிளர்ச்சி, வாழ்க திராவிடம், தொண்டா? துவே ஷமா? ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல் களின் நன்கொடையில் கழி வுடன் ரூ.150க்கு அளிக்கப்பட்டது-
பேராசிரியர் நூல்களை வெளியிட மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பெற்றுக்கொண்டார்.

மேனாள் சட்டமன்ற உறுப் பினர் குழந்தை தமிழரசன், திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம்,  வட சென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன்,  தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தையன், பகுத்தறிவாளர் கழக அமைப்புச்செயலாளர் இரா.தமிழ் செல்வன், பகுத்தறிவாளர் கழக தலைமையிட பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றி செல்வி, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, பொதுக்குழு உறுப் பினர் ஆர்.டி. வீரபத்திரன், மேனாள் மேயர் சா.கணேசன், த.கு.திவாகரன், புலவர் பா.வீரமணி, ஆ.சீ.அரு ணகிரி,    வா.மு.சே.திருவள்ளு வர், தங்க.தனலட்சுமி, தாம் பரம் இலட்சுமிபதி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து பெற்றுக் கொண்டனர்.

விடுதலைநகர் செயராமன் விடுதலை ஓராண்டு சந்தா தொகையை தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தார்.

திருச்சி சிறுகனூர்  பெரியார் உலகÕ நிதியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பழனி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வழக் குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திராவிட இயக்க  ஆய்வாளர் எழுத்தாளர் க.திரு நாவுக்கரசு,   அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணா நிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் அ.இராமசாமி, செயலாளர் பேரா சிரியர் ந.க.மங் களமுருகேசன்,  மு.பி.பாலசுப்பிர மணியன், மறைந்த பேராசிரியர் மா.நன்னன் துணைவியார் பார்வதி,  விடு தலை சிறுத்தைகள் கட்சி செல்வம், செல்வதுரை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிந்தாதிரிப்பேட்டை மாறன், தலை மைக் கழக பேச்சாளர் காரைக்குடி  தி.என்னாரெசு பிராட்லா, தமிழ் சாக்ரட்டீஸ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளி வண்ணன், கோ.வீ.ராகவன், மஞ்சநாதன் உள்பட ஏராளமான வர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர். தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 19.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக