சனி, 19 ஆகஸ்ட், 2017

‘நீட்’ தேர்வைக் கண்டித்து எழுச்சியுடன் மந்தைவெளியில் நடைபெற்ற தமிழக உரிமை மீட்புப் பரப்புரை பொதுக்கூட்டம்

மந்தைவெளி 

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மந்தைவெளி ரயில் நிலையம் சென்மேரிஸ் பாலம் அருகில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 2.8.2017 அன்று மாலை 6.40 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் மு.முகிலன் தலைமையேற்க பெரியார் படிப்பக க.ஆசாத்அலி வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் தி.ரா.ரத்தினசாமி, மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வி.ராகவன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்ற நிகழ்வில் கு.செல்வேந்திரன் தொடக்கவுரையாற்றியதை தொடர்ந்து சிறப்பு அழைப் பாளர்கள் சிபிஅய்எம் வட்ட செயலாளர் ரமேஷ், வழக் குரைஞர் பி.சாரநாத், திமுக பகுதி செயலாளர் த.வேலு ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து மு.சண்முகப் பிரியன் உரையாற்றினார்.

நிறைவாக வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க கோரி  மத்திய, மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கை கண்டித்து தந்தை பெரியார், காமராஜர், தமிழர் தலைவர் ஆகியோர் சிறப்புகளை எடுத்துக்கூறி திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் சிறப்புரையாற்றினார். பொறியாளர் ஈ.குமார் நன்றி கூற கூட்டம் சிறப்புடன் நிறைவடைந்தது.

கூட்டத்தில் மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம்பரம் மாவட்ட முன்னாள் செயலாளர் கு.ஆறுமுகம், நகர தலைவர் மோகன்ராஜ், தொழிலாளர் அணி ராசு, ச.தாஸ், தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன், இரா.சுரேஷ், க.விஜயராஜா, தரமணி மஞ்சநாதன், பே.உமாமகேஸ்வரி, காரல்மார்க்ஸ், ஓவியர் சிகரன் ஆகியோர் உள்ளிட்ட கழக தோழர்களும், பல்வேறு அமைப்புகளை சார்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
-விடுதலை,10.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக