செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 

சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். உடன் தென்சென்னை மாவட்டத் தலைவர் 
இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட்டீஸ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ச.மகேந்திரன் உட்பட பலர். (29.7.2017)

சென்னை - திருவல்லிக்கேணியில் ஆடித்தேரும் - கழகக் கூட்டமும்!

சென்னை, ஜூலை 30 சென்னை - திரு வல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோவில் நுழைவு வாயில் தூண் அருகே நேற்று (29.7.2017) மாலை திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஆடித் திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டம் நடந்தது. அதில் பக்தர்கள் (பார்ப்பனர்கள் உட்பட) மேடைக்கு பின்னே சாமி சிலையை தேரில் வைத்து இழுத்துச் சென்றனர். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் தமது உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். தேரை அவர்கள்  பொதுக்கூட்டம் நடைபெற்ற சாலை வழியாக இழுத்துச் சென்றனர்.  அப்போது கழகப் பொதுச்செயலாளர் தந்தை பெரியார் கூறியதைப்போல என் சகோதரன் பக்தனாக இருக்கிறான், அவனுக்காக அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் உரிமை கோருகிறேன் என்றார். அதுபோல, அவர்களும் (பக்தர் களும்) அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே சென்றனர். திராவிடர் கழகத் தோழர்களின் மனிதாபிமானமும், கொள்கை உறுதியும் இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்களை விழிப்படையச் செய்தது.

கழகத் தோழர்கள் கொள்கைகளை எடுத்துச் சொல்வார்களே தவிர, எந்த ஒரு பக்தருக்கும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,,30.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக