திங்கள், 29 ஏப்ரல், 2024

புரட்சிக்கவிஞரின் 134 ஆவது பிறந்த நாள்: திராவிடர் கழகம் சார்பில் மரியாதை



Published April 29, 2024, விடுதலை நாளேடு

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

Published April 29, 2024

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.

புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.


சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

Published April 29, 2024

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.

புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.

தந்தை பெரியாரைப்பற்றி எத் தனையோ கவிஞர்கள் பாடியிருந் தாலும், புரட்சிக்கவிஞரின் வரிக்கு ஈடாகாது.
ஆகவே, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மறைந்தாலும், அவர் படைத்த சுயமரியாதைக் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்.
இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்கின்ற முறையில், புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளுக்குத் தனிச் சிறப்பாகும்.
வாழ்க புரட்சிக்கவிஞர்!
வெல்க அவருடைய கொள்கைகள்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2024) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப. முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், பிசி. ஜெயராமன், மடிப்பாக்கம் ஆனந்தராஜ், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், காப்பாளர் கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், கவிஞர் செல்வ மீனாட்சிசுந்தரம், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், பொதுக் குழு உறுப்பினர் சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவை செல்வி, சீர்த்தி, செ.பெ. தொண்டறம், தங்க. தனலட்சுமி, வி. யாழ்ஒளி, க. கலைமணி, மு. இரா.மாணிக்கம், சோமசுந்தரம், பெ. செந்தமிழ்ச்செல்வன், அம்பேத்கர் மக்கள் முன்னணி தலைவர் திண்டிவனம் சிறீராமுலு, பொதுச் செயலாளர் பிரபாகரன், சஞ்சய், கவின், யுகேஷ் ப. சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் இரா. வேதாசலம், பொறியாளர் இராமச்சந்திரன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பேரன் இளமுருகு (சரஸ்வதி கண்ணப்பன் மகன்) விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று புரட்சிக் கவிஞருக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார்


Published April 27, 2024 விடுதலை நாளேடு

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை – 27.4.2024)


ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



விடுதலை நாளேடு
Published April 28, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி
ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்)
காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகத்தினர் பங்கேற்பு

சென்னை, ஏப்.28 சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’ காவி மயமாக்கலைக் கண்டித்து இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழக இளைஞரணி – திராவிடர் மாண வர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது ஹிந்தி செய்தி அலைவரிசையான தூர்தர்ஷன் நியூஸ் இலச் சினையை (லோகோவை) காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.
ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெ னவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவை யும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க் கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை அலுவலக ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந் துள்ளனர். ஜி-20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொலைக்காட்சியின் இலச்சினையை காவி வண்ணத்தில் மாற்றியதற்கு சமூக வலை தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில் ‘‘உலகப் பொது மறை தந்த வள்ளுவ ருக்குக் காவிச் சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள்மீது காவி பெயிண்ட் ஊற்றி, அவமானப்படுத்தினார்கள்.
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷ்வாணி என சமஸ்கிருதமயமாக்கினார் கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல் லையும் நீக்கினார்கள். தற்போது தொலைக்காட்சி இலச்சினையிலும் காவிக் கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவி மயமாக்கும் பா.ஜ.க. சதித் திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

தமிழர் தலைவர் போராட்ட அறிவிப்பு

இந்நிலையில், ‘‘சுயமரியாதை இயக்க நூற் றாண்டு ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா முதல் நிகழ்வு 25.4.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடை பெற்றது.
இவ்விழாவில் ஒன்றிய அரசு தொலைக்காட்சி யின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் 28-4-2024 அன்று காலை 10 மணியள வில் சென்னை அண்ணாசாலை (சிம்சன்) தந்தை பெரியார் சிலையில் இருந்து, கழகத் தோழர்கள் ஊர்வலமாக வாலாஜா சாலை வழியாகச் சென்று, ‘தூர்தர்ஷன்’ அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (28-4-2024) காலை திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, கழக மாநில இளைஞரணி செயலாளர் கோ.நாத்திக பொன்முடி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதற்கு முன்னதாக, சென்னை அண்ணா சாலை, தந்தை பெரியார் சிலை அருகே கூடிய கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், அனைவரும் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் அமைந்திருக்கும் ஒன்றிய அரசுத் தொலைக்காட்சி ‘தூர்தர்ஷன்’ நிலையத்திற்கு முன்பு செல்ல முற்பட்டபோது, அண்ணா சாலை பெரியார் சிலை அருகேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கமிட்டு தோழர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சுரேஷ் வரவேற் புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்க வுரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த் தினார். திராவிடர் கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் நன்றி கூறினார்.

முன்னதாக திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மு.சண்முகப் பிரியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங் களை எழுப்பினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, செயலவைத் தலை வர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், கொடுங்கையூர் தே.செ.கோபால், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற் றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

காப்போம், காப்போம்!
மொழி உரிமை காப்போம்!
காப்போம், காப்போம்!
மதச்சார்பின்மையைக் காப்போம்!
ஏற்க மாட்டோம், ஏற்கமாட்டோம்!
ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்!
ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம்!
அரசுத் தொலைக்காட்சியில்
ஹிந்தித் திணிப்பை ஏற்கமாட்டோம்!
ஒன்றிய அரசு நிறுவனமா?
ஆர்.எஸ்.எஸ். நிறுவனமா?
பொதிகை என்னும் தமிழ்ப் பெயரை
தூர்தர்ஷன் என்று மாற்றியதேன்?
சமஸ்கிருதத் திணிப்பின் வாயிலாக
பண்பாட்டைத் திணிப்பதா?
காவி மயமாக்காதே, காவி மயமாக்காதே!
ஒன்றிய அரசுத் தொலைக்காட்சியை
காவி மயமாக்காதே, காவி மயமாக்காதே!
ஒன்றிய அரசின் தொலைக்காட்சியா?
ஆர்.எஸ்.எஸ்.இன் ஊதுகுழலா?
அகில இந்திய வானொலியை
ஆகாஷ் வாணி ஆக்க முயற்சியா?
தமிழுக்கான இடத்தைப் பறித்து
ஹிந்திக்கு முன்னுரிமையா?
தமிழுக்கான இடத்தைப் பறித்து
சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமையா?
ஒன்றிய அரசு நிறுவனங்களை
ஆர்.எஸ்.எஸ். மயம் ஆக்காதே!
அரசமைப்புச் சட்டம் தந்த
சுதந்திரமான அமைப்புகளில்
ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதிக்கமா?
அரசமைப்புச் சட்டம் தந்த
தன்னிச்சையான அமைப்புகளில்
பி.ஜே.பி.யின் ஆதிக்கமா?
போராடுவோம், வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒன்றிய அரசுத் தொலைக்காட்சியில் காவி மயமா? சென்னை கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டோர்



விடுதலை நாளேடு
Published April 28, 2024

சென்னை, ஏப். 28- தமிழர் தலைவர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு – காவிய மயமாக்கலைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம்:

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி (ஆர்ப்பாட்டத் தலைவர்), திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், காரைக்கால் மா.செயலாளர் பொன்.பன்னீர் செல்வம், காரைக்கால் மா.இளைஞரணி செயலாளர் ஆ.லூயிஸ் பியர், மாநில சட் டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், பல்கலைக்கழக மாணவர் கழக அமைப்பாளர் க..அறிவுச்சுடர், மாநில இளைஞரணி து. செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாநில இளைஞரணி து.செயலாளர் ஆத்தூர் வேல்முருகன், மாணவர் கழக தே.நர்மதா, நாகை ரவிக்குமார், கருப்பட்டி கா.சிவா, கோவன் சித்தார்த், க.குமரேசன், மதுரை தேவராஜ் பாண்டியன், ச.சஞ்சய், அறிவுச்செல்வன், தம்பி பிரபாகரன், சுகன், உ.பச்சையப்பன், மு.ரமேஷ், பொ.தேவராஜ், சு.பன்னீர் செல்வம், ச.செந்தில், இ.கிருஷ்ணன், ரா.மணிகண்டன்,

தென்சென்னை: மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், மு.இரா.மாணிக்கம், நல்.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், மா. சண்முகலட்சுமி, எம்.டி.சி.இராஜேந்திரன், மு.சண்முகப்பிரியன், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, பி.அஜந்தா, சா.தாமோதரன், துரை.அருண், கு.தானு, ர.மோனிஷ், ர.சங்கரி, ச.மகேந்திரன்,

வடசென்னை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன்,
கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, சொ.அன்பு, சி.வாசு, செந்தமிழ்செல்வன், இளைஞரணித் தோழர்கள் வ.தமிழ்ச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், அ.புகழேந்தி,

சோழிங்கநல்லூர்: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம், மடிப்பாக்கம் ஜெயராமன்,

ஆவடி மாவட்டம்: மாவட்ட செயலாளர் க.இளவரசன், தமிழ்ச்செல்வன், அறிவுமதி, பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, செ.பெ.தொண்டறம், சீர்த்தி, பெரியார் பிஞ்சு மகிழன், பகுத்தறிவு, க.கலைமணி, சந்திரபாபு, பூ.இராமலிங்கம், தமிழரசன் கன்னட பாளையம், சேத்பட் நாகராஜன், அம்பத் தூர் சரவணன்,

காஞ்சி மாவட்டம்: பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி கதிரவன், காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் அ.வெ.முரளி, சீத்தாவரம் ஆ.மோகன், காஞ்சி மாவட்ட இணைச் செயலாளர் பா.இளம்பரிதி, காஞ்சி மாவட்ட ப.க. செயலாளர் போளூர் பன்னீர்செல்வம்

திண்டிவனம் மாவட்டம்: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.ரமேஷ், செயலாளர் கோ.தேவராஜ், அமைப்பாளர் ஓவியர் செந்தில், ஒன்றிய செயலாளர் க.சுகன், நகர தலைவர் உ.பச்சையப்பன், நகர செயலாளர் ரோரனை சு.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


விடுதலை நாளேடு
Published April 14, 2024

சென்னை, ஏப். 14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2024) காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், த.மரகதமணி, அமராவதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், சைதை தென்றல், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், காப் பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன், ச.இராசேந்திரன், தொழிலாளரணி பெ.செல்வராஜ், சி.செல்லப்பன், கொடுங்கையூர் கோ.தங்க மணி, தங்க.தனலட்சுமி, க.கலைமணி, அரூர் பேராசிரியர் வடிவேலன், கவின், பா.பார்த்திபன், அண்ணா மாதவன், செல்வகுமார், கொடுங்கையூர் செந்தமிழ் சேகுவேரா மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று அண்ணல் அம்பேத்கர் வாழ்க என ஒலி முழக்க மிட்டு மரியாதை செலுத்தினர்.

புதன், 10 ஏப்ரல், 2024

ஈக்காட்டுத்தாங்கல் நடைபெற்ற பரப்பரைக் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் எதிர்க்கட்சிகளின் அண்டப்புளுகுக்கு பதிலடி!


எதிர்க்கட்சிகளின் அண்டப்புளுகுக்கு பதிலடி!

விடுதலை நாளேடு
Published April 10, 2024

இன்றைக்கு இந்தியாவிலேயே பா.ஜ.க. தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று கையேந்தி நிற்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அவர்களோடு யார் சேர்ந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார் ’பாட்டாளி மக்கள் கட்சி’ யின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள். அவரை சில நாட்களுக்கு முன், ‘பா.ஜ.க.வுக்கு நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு, “பூஜ்யம் மதிப் பெண்” என்று பதில் சொன்னார். அப்படிப்பட்டவர் களுடன் இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார். ‘பிரதமரை எப்படி மதிக்கிறோமோ அப்படித்தான் மாநில முதலமைச்சர்களையும் மதிக்க வேண்டும்’ என்று மோடி சொன்னார். இன்றைக்கு இரண்டு மாநில முதலமைச்சர்கள் சிறையில். இவர் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அரியலூரில் ஹிந்தியில் பேசத்தொடங்கினார். மக்கள் சாரை சாரையாக கலைந்து சென்றுகொண்டிருந்தனர். காலியான இருக்கைகள் முன்பு சிறிது நேரம் பேசிவிட்டு அவரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

மோடி மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கருத்தும் இல்லை. அவர் சொல்லுவதும், செயல்படு வதும் வேறாக இருக்கிறது என்பதுதான் அவரை நாங்கள் எதிர்ப்பதற்குக்கான அடிப்படைக் காரணம். இன்றைக்கு 417 வேட்பாளர்களை பா.ஜ.க. இந்தியா முழுவதும் அறிவித்திருக்கிறது. அதில் 116 வேட் பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள். சொந்தக் கட்சியில் அவர்களால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து பணம், பதவி ஆசை காட்டி சேர்த்திருக்கிறார்கள். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது என்ன சொன் னார்? ’நீட்’, ‘ஜி.எஸ்.டி.’ ஆகியவற்றை எதிர்ப்பேன் என்றார். இன்றைக்கு அவர் பிரதமராக இருக்கும் போது ‘நீட்’ டை ஒழித்து விட்டாரா? ‘ஜி.எஸ்.டி’யை ஒழித்து விட்டாரா?

‘நீட்’ டைக் கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் என்று ஒரு அண்டப்புளுகை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘நீட்’ காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தபோது வந்தது உண்மைதான். அந்த ’நீட்’ கொண்டுவரப்பட்டபோது, முதல் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக்கூடாது. பின்னாலே உச்சநீதிமன்றத்திற்கு அந்த வழக்கு சென்றது. 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ‘நீட்’ செல்லாது என்று சொல்லிவிட்டது. மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தவே என்பவர் ’நீட்’ தேவை என்று சொன்னார்.

இரண்டு நீதிபதிகள் சொன்ன ஒருமித்த தீர்ப்பு காரணமாக ’நீட்’ ரத்தாகிவிட்டது. ஆக காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே ‘நீட்’ இல்லை யென்று உச்சநீதிமன்றம் கறாராக சொல்லிவிட்டது. அப்படியென்றால் உச்சநீதிமன்றம் சொன்ன பின் னாலும் இன்றைக்கு ’நீட்’ இருக்கிறதே, எப்படி? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அதற்கு தலைமை ஏற்றது – ஏற்கெனவே ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பு எழுதிய நீதிபதி தவே. அந்த நீதிபதி தவே தான் ‘நீட்’ செல்லும் என்று சொன்னார். காங்கிரஸ் ஆட்சியின் போது நீட் செல்லாது என்று தீர்ப்பு வந்துவிட்டது. மோடி பிரதமராக வந்தபின் தான், ’நீட்’ செல்லும் என்ற நிலையை உருவாக்கினார் என்பதை உணர வேண்டும். ஆகவே, இப்படிப்பட்டவர்களைத் தோற்கடிக்க, தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண் டியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

(சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் – 9.4.2024)