செவ்வாய், 3 ஜூன், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்

  Published May 31, 2025, விடுதலை நாளேடு


மறைவு


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.05.2025 பிற்பகல் 2.00 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, இளைஞர் அணி தலைவர் ந.மணிதுரை, கோட்டூர்புரம் ச.தாஸ் ஆகியோர் இருந்தனர்.

சனி, 31 மே, 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.ஹ

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.


புதன், 28 மே, 2025

தெருமுனைப் பிரச்சாரம், கூட்டங்கள் – கழக வெளியீடுகள் பரப்புரை நடத்த தென் சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை, மே 28- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 25.05.2025 அன்று பகல் 2.30 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் பெரியார் திடலில் நடைபெற்றது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை வரவேற்பு ரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகம்,  திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் 11.05.2025 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தும், தலைமை நிலையம் சார்பில் இளைஞரணித் தோழர்கள் மாதந்தோறும் களப்பணி செய்ய வேண்டியதை விளக்கியும் பேசினார்.

தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன்,  துணைத் தலைவர் இரா.மாரிமுத்து, சைதப்பேட்டைப் பகுதி இளைஞரணிச் செயலாளர் சிகரன், சூளைமேடு கோ.வீ.இராக வன், அரும்பாக்கம் ச.தாமோதரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், எம்டிசி பா.இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.பவானி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக  மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்  அன்பு நன்றியுரை கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

ஜூன் – 15 அன்று தென்  சென்னையில்  மாவட்ட இளைஞ ரணி சார்பாக உண்மை வாசகர் வட்டம் நடத்துவது என்று தீர் மானிக்கப்படுகிறது.

ஜூன் – 22 அன்று தென் சென்னை சைதாப்பேட்டை  பகுதியில் இளைஞரணி சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவதோடு, கழக வெளியீடுகள் பரப்புரையும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணியின் மாதாந் திர கலந்துரையாடல் கூட் டம் ஜூன் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

திங்கள், 19 மே, 2025

இரா.எத்திராஜன் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து

 


விடுதலை நாளேடு
வாழ்த்து

சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா.எத்திராஜன் – குழுப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றதையொட்டி ஆசிரியர் அவர்களை 12.5.2025 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்தியப் பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ் நாட்டின் சார்பில் குழு போட்டியில் சுற்று 16க்கும், தனிநபர் போட்டியில் சுற்று 64க்கும் தகுதி பெற்றார் எத்திராஜன்.

ஞாயிறு, 18 மே, 2025

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் – நினைவுப் பரிசு வழங்கல்


விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 17-05-2025 அன்று எம்.ஜி.ஆர். நகர் வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


சனி, 17 மே, 2025

தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது

 

விடுதலை நாளேடு


சென்னை, மே 17– இன்று (17-05-2025) காலை 9.30 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் செல்வ மஹால் திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் நோக்க உரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் கோவி. ராகவன், பெரியார்  அறக்கட்டளை உறுப்பினர் பு.அய்யாதுரை, மாவட்ட காப்பாளர் மதியழகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்ட துணை தலைவர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அன்பு, மாவட்ட இளைஞரணி தலைவர் மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மகேந்திரன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை.அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் வாழ்த்துரையாற்றினார். பார்ப்பன பண்பாட்டு படை எடுப்பு  என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் முதல்  வகுப்பு எடுத்தார்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் அழகிரிசாமி அவர்களும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களும்,   சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்,  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் மஞ்சை.வசந்தன் அவர்களும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசுபெரியார் அவர்களும்  ஜாதி ஒழிப்பு போரில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களும் தொடர்ந்து வகுப்பெடுத்தனர்

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

தென்சென்னை பெரியாரியல் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு சிறப்பித்த மாணவ-மாணவிகள் மொத்தம் 102.

இதில் பெண்கள் பள்ளி படிப்பு- 33, பெண்கள் கல்லூரி படிப்பு – 12, மொத்தம் – 45 பெண்கள்.

ஆண்கள் பள்ளிப்படிப்பு – 31, ஆண்கள் கல்லுரி படிப்பு- 26, மொத்தம்: 57 ஆண்கள்.

பயிற்சி பட்டறை யு டியூப் காணொலி