வெள்ளி, 10 ஏப்ரல், 2020

விருகை நாதன் மறைவு

விருகம்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நாதன் மறைந்தாரே!


குடந்தையைச் சேர்ந்தவரும், விருகம்பாக்கத்தில் நீண்ட காலமாகக் குடியிருந்து கழகப் பணிகள் ஆற்றியவரும், கழகப் பாடல்களை மேடைகளில் கம்பீரமாகப் பாடி வந்தவருமான நாதன் (வயது 83) அவர்கள் நேற்று (7.4.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடைசி மூச்சு அடங்கும்வரை கழகப் பணியில் ஆர்வம் கொண்டவர் அவர்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

- கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.4.2020

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக முன்னோடி அய்யா விருகை நாதன் அவர்கள் 7.4.2020 மாலை 3.00 மணிக்கு மறைவுற்றார். 8.4.20 முற்பகல் 10.00 மணி அளவில் விருகம்பாகத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவரது உடல்மீது கழகக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தினார். உடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி. செங்குட்டுவன்,  துணைச் செயலாளர் சா. தாமோதரன் மற்றும் குடந்தை புவனேந்திரன் மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 8.4.20

புதன், 25 மார்ச், 2020

தென் சென்னையில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடற்கரை அருகில் உள்ள நொச்சி நகர்ப் பகுதியில் 23.3.2020 மாலை 5.00 மணி அளவில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை  குறித்து விளக்கப்பட்டது. கைகளை சோப்புப் போட்டு கழுவிக் கொள்வதற்காக 750 பேருக்கு 'லைபாய்' சோப்பு வழங்கப்பட்டது. இதில் 400 சோப்புகள் வீடு வீடாக சென்று  வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத்தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், ஈ. குமார், மு.சண்முகப்பிரியன், மு.பவானி மற்றும் சொப்னா ஆகியோர் இத் தொண்டறப் பணியில் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 25.3.20

வெள்ளி, 20 மார்ச், 2020

சூளைமேடு மோ.ச.மோகன் - மோ.வாசுகி இணையரது 27ஆம் ஆண்டு மண நாள் (20.3.2020)

சூளைமேடு பகுதி இயக்கப் பற்றாளர் மோ.ச.மோகன் - மோ.வாசுகி இணையரது 27ஆம் ஆண்டு மண நாள் (20.3.2020) மகிழ்வாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 நன்கொடை யாக வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.

- விடுதலை நாளேடு, 20.3.20

வெள்ளி, 13 மார்ச், 2020

சைதை எம்.பி. பாலு - வள்ளியம்மாள் ஆகியோரின் 60ஆம் ஆண்டு மணநாளையொட்டி நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு - வள்ளியம்மாள் ஆகியோரின் 60ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500/- கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பா. அருள், செந்தில்நாதன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 13.3.2020)

- விடுதலை நாளேடு 13 3 20

 

 

சென்னை மண்டல நீட் புதிய கல்வி எதிர்ப்பு போராட்ட வீரர்கள் பட்டியல்

நீட்" புதிய கல்வியை எதிர்த்து

முற்றுகைப் போராட்ட வீரர்கள் பட்டியல்-16

- விடுதலை நாளேடு 12.3.20

இனமான நடிகர் மு.அ.கிரிதரன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை

இனமான நடிகர் மு.அ.கிரிதரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு (12.3.2018) நினைவாக, அவரது இணையர் அம்பிகாவதி கிரிதரன் 500 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

- விடுதலை நாளேடு 12 3 20

ஞாயிறு, 8 மார்ச், 2020

இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்

மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில்
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர் (7.3.2020)

இனமான பேராசிரியர் உடலுக்கு கடைசியாக வைக்கப்பட்ட மலர் வளையம்

இனமானப் பேராசிரியர் உடல் எரியூட்டப்படுவதற்கு முன் வேலங்காடு மின் எரியூட்டும் மய்யத்தின் மேடையில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் அவர்களின் உடலில் வைக்கப்பட்ட கடைசி மலர் வளையம் இது. கழகத் தலைவர் அருகில் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு எம்.பி. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உள்பட ஏராளமான தோழர்கள் சூழ்ந்திருந்தனர். (7.3.2020)

 - விடுதலை நாளேடு, 8.3.20