செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், பேரமனூர் தலைவர் சு.விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட மேனாள் இளை ஞர் அணி தலைவர் ம.கருணாநிதி, செங்கல் பட்டு மாவட்ட ப.க தலைவர் அ.சிவகுமார், செங்கல்பட்டு மாவட்ட பக செயலாளர் சி.தீன தயாளன், மறைமலைநகர் தலைவர் திருக்குறள் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் காஞ்சி பா.கதிரவன் சுயமரி யாதை திருமணம் ஏன் செய்ய வேண்டும். பார்ப் பனர்களை தவிர்க்க வேண் டும் என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். திமுக 15ஆவது வார்டு செயலாளர் த.வினோத் குமார், பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கரு ணாகரன், பக மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சை முத்து, மறைமலைநகர செயலாளர் ப.முருகன், மறைமலைநகர் அமைப் பாளர் செ.முடியரசன், செ.மு.அறிவு தென் சென்னை பா.குமாரி, வி. ஜாய்ஸ் மேரி, க.தாம ரைசெல்வி மதுராந்தகம் நகர செயலாளர் ஏ. செல் வம், இள. தனசேகரன், பெரியார் கொள்கை புத்தக பரப்புரையாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, த. ஆனந்தன் மற்றும் இரு வீட்டு குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மணமகன் நீ. தமிழன்பன் நன்றியுரை கூறினார்.
மணவிழாவிற்கு வருகை தந்திருந்த அனை வருக்கும் மரக் கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட் டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக