சென்னை, டிச.19 ‘தந்தைபெரியாரின் இறுதி முழக்கமும், நமது உறுதி முழக்கமும்’ எனும் தலைப்பில் தென்சென்னை மாவட்ட கழகத்தின் ஒருங்கிணைப்பில்,சென்னை தியாகராயர் நகரில் சர் பிட்டி தியகராயர் அரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் இரகுராமன், ஏ.இ.ஆர்.நாதன், மு.ஏழுமலை நினைவரங்கத்தில் நேற்று (18.12.2023) மாலை தந்தை பெரியார் இறுதிப் பேருரை ஆற்றிய 50ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
பார்ப்பன பனியா கூட்டம் தொட முடியாத எரிமலையாக பெரியார் என்றும் இருக்கிறார் என்பதை விளக்கி தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை உரையாற்றினார்.
குண்டுக்குக்கூட அதிராத நாடாளுமன்றம் பெரியார் என்ற சொல்லுக்கு அதிர்கிறது!
நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். தந்தை பெரியாரை நேரில் காணாத , அவரது பேச்சினை நேரில் கேட்காத தலைமுறை எங்களை போன்ற இன் றைய இளைய தலைமுறை. அவர்களில் ஒருவ ராக இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில் தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறி தனது சிறப்புரையை தொடங்கினார்.
‘பெரியார்’ என்ற சொல் கேட்டு தூங்க முடி யாமல் பாசிச கூட்டம் அலறிக் கொண்டிருப் பதற்கு காரணம் அவர் செய்த சம்பவங்கள் என்றும், எந்த பதவிக்கும் செல்லாத பெரியார் இந்திய ஒன்றியத்தை நடுங்க செய்ததற்கான காரணம், அவர் ஏற்றுக்கொண்ட சமரசமற்ற கொள்கை என்பதற்கான சான்றுகளை விளக் கினார். பெரியாருக்கு பிறகு – தொடர்ந்து அதே பாதையில் ஆசிரியர் பெரியாரின் கொள்கையை உலகமயமாக்கி இருக்கிறார் என்பதற்கான வரலாற்று குறிப்புகளை பதிவு செய்தார்.
குறிப்பாக, ‘ஆசிரியர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சமூக நீதி என்றோ பளிங்கு சமாதிக்கு சென்றிருக்கும்’ என்று சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டார்.
தொடர்ந்து, குண்டுக்குக்கூட அதிராத நாடாளுமன்றம் பெரியார் என்ற சொல்லுக்கு அதிர்கிறது என்றும், பெரியாரை அவமானப் படுத்துவதாக நினைத்து காவிக் கூட்டம் குழந் தைகளிடம் அவரது கொள்கையைக் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அய்யாவின் இறுதி முழக்கத்தை ஆசிரியர் தலைமையில் உறுதி முழக்கமாக உறுதி ஏற்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
நான் மொட்டை மரம் என்னை மிரட்டுவதற்கான சரக்கு உங்களிடம் இல்லை !
கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற் றினார். அவரது உரையில்: அவ்வளவு கடுமை யான வலியோடு, அப்படிப்பட்ட உடல்நிலை யோடு ஒரு தலைவர் கூட்டத்தில் பேசினார், பேசி இருக்கிறார் என்று உலகத்தில் யாரையும் குறிப்பிட முடியாது என்றும், இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இப்படி ஒருவரால் பேச முடியுமா என்ற ஆச்சரியம் நமக்கு இருக்கிறது என்றார். இன்றைக்கு பேசினாலும் பிரச்சினை யாகும் தலைப்புகளை எரிமலையைப் போல பெரியார் பேசியிருக்கிறார் என்றார். பெரியாரின் இறுதி பேருரையில் காங்கிரஸ் என்று வரும் இடங்களில் எல்லாம் இன்று பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்று நாம் வாசிக்க வேண்டும் என்றார். அந்த உரையில் ஆசிரியரின் பெயரை கூறி பெரியார் பேசியதையும், அந்த இடத்தில் இருந்து பார்த்த ஆசிரியர் அதனையெல்லாம் நினைவுகூர்ந்து இன்று நம்மிடத்தில் பேச இருக்கிறார் என்றார்.
அய்யாவின் இறுதி உரையில் “நம்ம பள்ளத் தில கிடக்கிறோம்” என்று சொன்னது எவ்வளவு உண்மையானது என்பதை சான்றுகளுடன் விளக்கினார்.
குறிப்பாக, காவல்துறை தொடங்கி கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாத வர்களின் நிலை என்னவாக இருந்தது என்றும், இன்றைக்கு நாம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்திருக்கிறோம் என்றார்.
எந்த காங்கிரஸில் இருந்ததற்காக அய்யா சலித்துக் கொண்டாரோ அந்த நிலை மாறி இன்றைய காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தி தந்தை பெரியார் என்ன பேசினாரோ அவரது கொள்கையை பேசக்கூடியவராக இருக்கிறார் என்றும், சென்னைக்கு வந்த பிரியங்கா காந்தி பெரியாரைப் பற்றி பேசுகிறார் என்றால் தமிழ்நாடு என்றால் என்ன என்பது பாசிச கூட்டத்திற்கு என்றும் புரியாது என்றார்.
பெரியாரை இழிவுபடுத்துவதாக நினைத்து குழந்தைகளுக்கு மிகப் பிடித்த கார்ட்டூன் உருவத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் அவரை புகழின் உச்சிக்கு தான் அழைத்து செல்லும் என்றார்.
நான் மொட்டை மரம் என்னை மிரட்டுவ தற்கான சரக்கு உங்களிடம் இல்லை என்று சொன்ன தலைவர் பெரியார் என்றும், என்னை கடவுளாக்காதீர்கள் நான் சொல்லக்கூடிய கருத்துகளை விமர்சனத்திற்கு உட்படுத்தி சிந்தி யுங்கள் என்றும் கூறியவர் என்றார்.
அவரின் இறுதி முழக்கம் தான்,நம்மை இன்று வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறி நிறைவு செய்தார்.
பெரியார் விட்டுச் சென்ற பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்!
மிகச் சிறப்பாக நிகழ்வினை ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர் களுக்கு பாராட்டு தெரிவித்து தனது தொடக்க உரையை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் வழங்கினார். அவரது உரையில்: சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் இந்த நிகழ்வு நடப்பது எவ்வளவு பொருத்தம் என்பதை விளக்கினார்.
பதவி என்ற விஷயத்தில் எந்த மனிதரும் சறுக்குவர். ஒருவேளை அப்படி பெரியார் சறுக்கி இருந்தால், நமது நிலை என்னவாக இருந்தி ருக்கும் என்றார். பதவிக்கு செல்லா விட்டாலும், பதவியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண் டும் என்பதை பெரியார் தான் தீர்மானித்தார் என்றார்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் அல்ல இது, ஒவ்வொரு நாளும் பேசக்கூடிய முழக்கமாக இருக்கிறது என்றும், பெரியாரின் மரண சாசனமாக அந்த உரை அமைந்தது என்றார். தந்தை பெரியாரின் ஒட்டுமொத்த கொள்கை களையும் சாறு போல் பிழிந்தது தான் அவரது இறுதி உரை என்றார்.
பெரியார் திடலில் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 7, 8ஆகிய தினங்களில் “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது, அதனை விளக்கும் கூட்டமாக தான் 19.12.1973 அன்று தியாகராய நகரில் கூட்டம் நடைபெற்றது என்றும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான் அந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது என்றார்.
மக்களின் இழிநிலையை எல்லா இடங் களிலும் ஒழிக்க பெரியார் போராடினார். தீண்டாமை- ஜாதி பாம்பை ஒவ்வொரு இடத்திலும் பெரியார் அடித்தபோது, அது கடைசியாக ஒளிந்து கொண்ட இடம் கோவில் கருவறை என்றும், அதனையும் ஒழிப்பேன் என்று அவர் உறுதி கொண்டதை விளக்கினார். அந்த முயற்சியில் இருந்த போதுதான் அய்யா உயிர் விட்டார். அந்த முயற்சியில் அய்யா சுற்றுப்பயணத்திலிருந்து போது அவரின் இறுதி உரைக்கு இரண்டு நாட்கள் முன்பு கும்ப கோணத்தில் நடைபெற்ற நிகழ்வில் தான் பங்கேற்றதையும், அய்யாவின் உரையை எழுதக்கூடிய வாய்ப்பை பெற்றதையும் உணர்வு பூர்வமாக நினைவுப்படுத்தினார்.
பெரியாரின் கொள்கைகள் எப்போதும் வெற்றி பெறும் என்பதற்கு சான்று தான், ஓபிசி மக்களுடைய பிரச்சனையை இன்றைக்கு ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார் என்றும், பிறவி பேதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் நீக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியார் அவர்களின் லட்சிய நோக்கமாக இருந்தது. அதற்கான அனைத்து முன்னெடுப்பு களையும் அவர் எப்படி எடுத்தார் என்பதை விளக்கினார்.
இன்றைக்கு அனைத்து இடங்களிலும் பெரியாரின் கொள்கைதான் பேசுபொருளாக இருக்கிறது என்றும், தொலைக்காட்சி நாடகங்கள் வரை பெரியாரின் கொள்கைகள் பேசப்படுகிறது என்றார். பெரியாரைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்ற நிலைமை இன்றைக்கு உருவாகி இருக்கிறது என்றார்.
பெரியாருக்கு பிறகு நாம் என்னவெல்லாம் சாதித்து இருக்கிறோம் என்பதை விளக்கினார்.
குறிப்பாக, பெரியார் இருந்தபோது 49 சத வீதமாக இருந்த இட ஒதுக்கீடை 69 சதவீதமாக நமது தலைவர் ஆசிரியர் வென்று காட்டி இருக்கிறார் என்றார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது பெரியார் இறக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்; உருவத் தால் மறைந்தாலும் கொள்கையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.
பெரியார் என்ற உருவம் தான் மறைந் திருக்கிறதே தவிர, அவர் கொண்ட கொள்கை என்றும் வாழும் என்றார். ‘பேதமற்ற இடம்தான் உலகில் மேலான இடம்’ என்று சொன்னவர் பெரியார். அதேபோல் மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு என்று திருக்குறளை விட சுருக்கமாக மனித வாழ்வினுடைய அதி முக்கிய செய்திகளை விளக்கியவர் பெரியார் என்றார்.
பெரியாரின் குரல் என்பது மனித உரிமை குரல் என்றும், எனக்கு எந்தப் பற்றும் இல்லை மனிதப்பற்றைத் தவிர என்று சொன்ன தந்தை பெரியாரின் கொள்கைகள் எப்படி பிரிவினை வாத கொள்கை ஆகும் என்றார். மக்களை பிறப்பிலேயே பிரித்த நீங்கள் தான் பிரிவினைவாதி என்றும், பெரியார் தனது மனிதநேய தத்துவத்தை எப்படி எல்லாம் பொது மக்களி டத்தில் கொண்டு போய் சேர்த்தார் என்பதை விளக்கினார்.
இன்று உலகம் முழுவதும் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றால் பெரியார் உலகமயமாகி இருக்கிறார் என்பதுதான் அதன் பொருள் என்றார்.
கடைசி மூடநம்பிக்கையாளர் இருக்கும் வரை, கடைசி நிமிட ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை, கடைசி சுரண்டல் இருக்கும் வரை பெரியாரின் கொள்கை தேவைப்படும்; பெரியார் இருப்பார் என்றும், திருச்சி பொதுக்குழுவில் அன்னை மணியம்மையார் தலைமையில் “பெரியார் விட்டுச் சென்ற பணியை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங் களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்” என்று ஏற்றுக்கொண்ட உறுதி முழக்கத்தை , இன்று ஆசிரியர் தலைமையிலும் ஏற்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
தந்தை பெரியாரின் இறுதி உரை அல்ல; இது உறுதி உரை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்; நிகழ்வு நடக்கக்கூடிய தியாகராய நகர் எவ்வளவு வரலாற்று சிறப்புகளை கொண்டிருக்கிறது என்றும், இந்த இடத்தில் அய்யாவின் இறுதிப் பேருரை அமைந்தது எவ்வளவு பொருத்தம் என்றும் விளக்கினார்.
தந்தை பெரியாரின் இறுதி உரை அல்ல ; இது உறுதி உரையாகவே அமைந்திருக்கிறது என்றார். சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவை 2025-இல் கொண்டாட இருக்கிறோம் சுயமரியாதை என்ற சொல் எவ்வளவு அதி முக்கியமானது என்றும், விலை மதிப்போடு அமெரிக்காவில் அய்ரோப்பாவிலும் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் பிறக்கின்ற போதே எந்த காரணமும் இன்றி அடிமையாகப் பிறந்தவர்களாக இந்தியர்கள் என்று கொடு மையை விளக்கினார்.
தந்தை பெரியாரைப் பொறுத்தவரை எந்த வகையில் அடிமைத்தனம் இருந்தாலும் அதை எதிர்ப்பார் என்றும், திருக்குறள் மாநாட்டை நடத்திய அதே பெரியார்தான் திருக்குறளில் இருந்த பெண் அடிமைத்தனக் கூறுகளை எதிர்த்தார் என்றார்.
நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெயர் ஒலித்தால் இன்றைக்கு அஞ்சுகிறார்கள் ஆனால் அதே நாடாளு மன்றத்தில், ‘இந்தியாவிலேயே தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை போடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்; அதற்கு காரணம் பெரியார்’ என்று தான் முழங்கியதை எடுத்துரைத்தார்.
பிறவி இழிநிலைக்கான காரணத்தை கேட்டபோது அதை கடவுளே உருவாக்கினார் என்று கூறினார்கள். அப்போது அந்த கடவுளையே நான் தூக்கி எறிகிறேன் என்றார் பெரியார். அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் கூறப்பட்டிருக்கிறது. நாத்திகராக வாழ்வது என்பதும் அடிப்படை உரிமையாக சட்டம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை என்றார். இன்றைக்கு தன்னை அறிஞராக நினைத்துக் கொண்டு ஆளுநர் பேசக்கூடிய அர்த்தமற்ற கருத்துகளை சாடினார்.
குறிப்பாக இந்தியா என்பது ரிஷிகளால் உருவானது என்ற பொய்யை அம்பலப்படுத் தினார். இப்படிப்பட்ட புரட்டுகளை எல்லாம் வேரறுக்க தான் பெரியார் பாடுபட்டார் என்றும், அவரின் ஒற்றை நோக்கம் “மனிதர்கள் மனிதராக வாழ்வது மட்டும்தான்” என்றார். தந்தை பெரியார் கோவில் நுழைவுப் போராட்டத்தை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டி அறிவித்த போது கலைஞர் நான் அதை செய்கிறேன் என்று கொடுத்த உறுதியையும், அதேபோல் கலைஞர் அதை சட்டம் ஆக்கிய தையும் எடுத்துரைத்தார்.
இன்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதல்வர் பணி நியமான ஆணை களை வழங்கியதை கூறி, தந்தை பெரியார் தமிழ் நாட்டில் மட்டுமல்ல வைக்கத்திற்கும் சென்று மனித உரிமைக்காக போராடியதை விளக்கினார்.
பெரியாரை விட ஒரு மனிதநேய தலைவரை நாம் பார்க்க முடியாது; எந்த காலத்திற்கும் பெரியாரின் சிந்தனையிலிருந்து நாம் விலக முடியாது என்றும், காரணம் நாம் மனிதராக வாழ வேண்டும் என்று பெரியார் நினைத்தார். உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்று கூறினார்.
நம்மை மனிதராக்கும் முயற்சியில் தான் தந்தை பெரியார் இறுதி உரை ஆற்றினார். எனவே அது உறுதி உரையாக அமைந்தது என்றார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய தத்துவம் நம்முடையது: மக்களை பிரிக்கக்கூடிய தத்துவம் சனாதனத்தின் உடையது என்றார். இந்து மதத்தில் உள்ள 90 சதவிகித மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நாம் இந்து விரோதிகளா? அல்லது இந்துக்கள் சூத்திரர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்து விரோதிகளா? என்ற கேள்வியோடு, பெரியாரின் இறுதி முழக்கத்தை பின்பற்றுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.
வரலாற்றுக் குறிப்புகளோடும், பெரியார் விட்டுச் சென்ற பணியை ஆசிரியர் தலைமை யில் முடிப்போம் என்ற உறுதியோடும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என் னாரெசு பெரியார் இணைப்புரை ஆற்றினார்.
அய்யாவின் இறுதி உரையாக அமைந்த நிகழ்வில் பங்கேற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் சைதை மு.ந. மதியழகன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
நூல் வெளியீடு
தந்தைபெரியாரின் பொன்மொழிகள், சிந் தனைத் திரட்டு, பெரியார் ஒளிமுத்துகள், நவ மணிகள் ஆகிய 4 புத்தகங்கள் ரூ.240 நன் கொடை மதிப்புள்ளவை ரூ.40 கழிவுடன் ரூ.200க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து வரிசையாக சென்று கழகப் பொறுப்பாளர்களும், கழக ஆர்வலர்கள் பலரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பசும்பொன், பிடிசி இராஜேந்திரன், நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், தொண்டறம், சைதை மு.ந.மதியழகன், தங்க.தனலட்சுமி, கவிஞர் கண் மதியன், வி.தங்கமணி, மயிலை டி.ஆர்.சேது ராமன், அம்பத்தூர் இராமலிங்கம், ஆவடி க.இளவரசன், தே.செ.கோபால், திருமலை,பாண்டு உள்ளிட்ட பலரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) பொருளாளர் அருள்செல்வி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி,
சி.வெற்றிசெல்வி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, தி.மு.க. பேச்சாளர் ஈரோடு இறைவன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பேராசிரியர் நம்.சீனிவாசன், புலவர் பா.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், எண்ணூர் வெ.மு.மோகன், விடுதலை நகர் ஜெயராமன், கொடுங்கையூர் கோ.தங்க மணி, பெரியார் மாணாக்கன், ஆவடி தமிழ்மணி, உடுமலை வடிவேல், கோ.வீ.ராகவன், தாம்பரம் சு.மோகன்ராஜ்,மா.குணசேகரன், பல்லாவரம் அழகிரி, பூவை தமிழ்செல்வன், பெரம்பலூர் கோபாலகிருஷ்ணன், தளபதி பாண்டியன், புரசை அன்புச்செல்வன், சோ. சுரேஷ், பா. சிவகுமார், மகேஷ், க.கலைமணி, கலையரசன், இளைஞரணி மகேந்திரன், சண்முகப்ரியன், பூவைசெல்வி, வி.வளர்மதி, மு.பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக